இன்றைய புனிதர் - ஜனவரி 18 - ஹங்கேரியின் புனிதர் மார்கரெட் ***


ஹங்கேரியின் புனிதர் மார்கரெட்

(St. Margret of Hungary)

துறவி/ கன்னியர்:

(Nun and Virgin)

பிறப்பு: ஜனவரி 27, 1242

க்ளிஸ் ஃபோர்ட்ரெஸ், க்ளிஸ், குரோஷியா அரசு

(Klis Fortress, Klis, Kingdom of Croatia)

இறப்பு: ஜனவரி 18, 1271 (வயது 28)

நியுலக் ஸ்ஸிகெட், ஹங்கேரி அரசு

(Nyulak Szigete, Kingdom of Hungary)

ஏற்கும் சமயம்:

ரோமன் கத்தோலிக்க திருச்சபை

(Roman Catholic Church)

முக்திபேறு பட்டம்: ஜூலை 28, 1789

திருத்தந்தை ஆறாம் பயஸ்

(Pope Pius VI)

புனிதர் பட்டம்: நவம்பர் 19, 1943

திருத்தந்தை பன்னிரெண்டாம் பயஸ்

(Pope Pius XII)

நினைவுத் திருநாள்: ஜனவரி 18

புனிதர் மார்கரெட், ஒரு கன்னியரும், “டொமினிக்கன்” (Dominican nun) சபையைச் சேர்ந்த அருட்சகோதரியும் ஆவார். இவர், “ஹங்கேரி” (Hungary) நாட்டின் அரசனான “நான்காம் பேலாவின்” (King Béla IV) மகள் ஆவார். இவரது தாயாரின் பெயர், “மரியா லஸ்கரீனா” (Maria Laskarina) ஆகும். இவர், “போலந்தின் புனிதர் கிங்கா” (St. Kinga of Poland), மற்றும் “போலந்தின் அருளாளர் யோலந்தா” (Blessed Yolanda of Poland) ஆகியோரின் சகோதரியாவார். இவர், புகழ்பெற்ற “ஹங்கேரியின் புனிதர் எலிசபெத்தின்” (Saint Elizabeth of Hungary) சகோதரரின் மகள் (மருமகள்) ஆவார்.

மார்கரெட், “குரோஷியா அரசின்” (Kingdom of Croatia) “க்ளிஸ் ஃபோர்ட்ரெஸ்” (Klis Fortress) எனுமிடத்தில் அரச தம்பதியினருக்கு எட்டாவது - கடைசி மகளாகப் பிறந்தார். அவர்கள், கி.பி. 1241–42 ஆண்டு காலத்தில், “மங்கோலியர்களின் ஹங்கேரி மீதான படையெடுப்பின்போது” (Mongol invasion of Hungary) வாழ்ந்தவர்களாவர். அவர்களது தந்தை அந்நாட்டின் அரசராதலால், மங்கோலியர்களிடமிருந்து ஹங்கேரி விடுவிக்கப்பட்டால், அவர்கள் தமது குழந்தையை ஆன்மீகத்திற்கு அர்ப்பணிப்பதாக அவரது பெற்றோர் உறுதிமொழியேற்றனர்.

மூன்று வயதான மார்கரெட், கி.பி. 1245ம் ஆண்டு, “வெஸ்ப்ரெம்” (Veszprém) எனுமிடத்திலுள்ள டொமினிகன் மடாலயத்திற்கு தனது பெற்றோரால் ஒப்படைக்கப்பட்டார். ஆறு வருடங்கள் கழித்து, ஒன்பது வயதான குழந்தை மார்கரெட், “ரேபிட்” தீவிலுள்ள (Rabbit Island) (தற்போதைய மார்கரெட் தீவு - (today Margaret Island) “நியுலக் ச்ஸிகெட்” (Nyulak Szigete) எனுமிடத்தில் அவரது பெற்றோரால் நிறுவப்பட்ட “அர்ச்சிஷ்ட கன்னி மரியாள்” (Monastery of the Blessed Virgin) மடத்திற்கு மாற்றப்பட்டார்.

மீதமுள்ள தமது வாழ்நாள் முழுவதையும் அங்கேயே வாழ்ந்து, தம்மை ஆன்மீகத்திற்கு ஒப்புக் கொடுத்த மார்கரெட், “பொஹெமியாவின்" (Bohemia) அரசர் “இரண்டாம் ஒட்டோகாருக்கு” (King Ottokar II) தம்மை அரசியல் திருமணம் செய்விக்க தமது தந்தை செய்த அனைத்து முயற்ச்சிகளையும் எதிர்த்தார். அவர் தமது பதினெட்டு வயதின்போது தமது சபையின் சத்திய பிரமாணங்களை எடுத்துக்கொண்டதாக தோன்றுகிறது. தாம் எடுத்துக்கொண்ட சத்தியப் பிரமாணங்களை, தமது சபையின் பாரம்பரியத்துக்கு எதிராக, திருத்தந்தையின் மூலமாக ரத்து செய்யும் தமது தந்தையின் முயற்சிகளை தவிர்ப்பதற்காக, அவர் இன்னும் பிற அரச குடும்ப கன்னியருடன் இணைந்து சத்திய பிரமாணங்களை ஏற்றுக்கொண்டார்.

இவரது வாழ்க்கை சம்பந்தமான பல்வேறு விபரங்கள், ஒருவேளை 14 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட (Legend of Saint Margaret) எனப்படும் இவரது சுயசரித நூல்களில் காணக்கிடைக்கின்றன. பின்னர் இது, 15ம் நூற்றாண்டில், “இலத்தீன்” (Latin) மொழியிலிருந்து “ஹங்கேரியன்” (Hungarian) மொழிக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டது. ஆரம்பகால குழந்தை பருவத்திலிருந்து மார்கரெட் தன்னைத்தானே வருத்திக்கொண்டார். இரும்பிலான அரைக்கச்சை அணிந்தும், மயிர் ஆடைகள் அணிந்தும், கம்பி மற்றும் ஆணிகளாலான காலணிகள் அணிந்தும் தம்மை வருத்திக்கொண்டார். பின்னர், மடத்தின் சாக்கடை சுத்தம் செய்வது போன்ற அழுக்கான பணிகளையும் செய்தார்.

கி.பி. 1271ம் ஆண்டு, ஜனவரி மாதம், பதினெட்டாம் தேதி மரித்துப்போன மார்கரெட்டின் புனிதர் பட்டத்திற்கான நடவடிக்கைகள், அவரது சகோதரர் அரசன் “ஐந்தாம் ஸ்டீபனின்” (King Stephen V) வேண்டுகோளுக்கிணங்க கி.பி. 1271ம் ஆண்டு தொடங்கப்பட்டு, கி.பி. 1276ம் ஆண்டுவரை நடந்தன. ஆனாலும், அவரது பரிந்துரைகளால் 74க்கும் மேற்பட்ட அற்புதங்கள் நடந்தும் புனிதர் பட்டத்திற்கான பணிகள் நிறைவேறவில்லை. நிகழ்ந்த அற்புதங்களில் பல, இவரை நோக்கி செபித்ததால், இவரது பரிந்துரையால் நோய் நீன்கியதாகும். மேலும் சில, மரித்தவர்கள் உயிர்த்தெழுந்தனர். கி.பி. 1640ம் ஆண்டு முதல், கி.பி. 1770ம் ஆண்டுவரையான முயற்சிகளும் தோல்வியடைந்தன. இறுதியில், கி.பி. 1943ம் ஆண்டு, நவம்பர் மாதம், 19ம் நாள், திருத்தந்தை “பன்னிரெண்டாம் பயஸ்” (Pope Pius XII) அவர்களால் புனிதர் பட்டம் வழங்கப்பட்டது.