இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

162 புனித சவேரியார் ஆலயம், சவேரியார்பட்டி


புனித சவேரியார் ஆலயம்

இடம் : சவேரியார்பட்டி

மாவட்டம் : திண்டுக்கல்
மறை மாவட்டம் : திண்டுக்கல்

நிலை : கிளைப்பங்கு
பங்கு : புனித பெரிய அந்தோணியார் திருத்தலம், மாரம்பாடி.

திருத்தந்தை : பிரான்சிஸ்
ஆயர் : மேதகு P. தாமஸ் பால்சாமி

பங்குத்தந்தை : பேரருட்பணி S. அமலதாஸ் அடிகளார்
இணை பங்குத்தந்தை : அருட்பணி M. ஜஸ்டின் திரவியம்.

குடும்பங்கள் : 50

ஞாயிறு திருப்பலி : இல்லை (அனைவரும் பங்கு ஆலயமான மாரம்பாடி -க்கு செல்வார்கள்)

மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமை இரவு 07.30 மணிக்கு திருப்பலி.

எல்லா வெள்ளிக்கிழமைகளில் புனித சவேரியார் நவநாள் ஜெபம் நடைபெறும்.

திருவிழா : டிசம்பர் 3 ம் தேதியை உள்ளடக்கிய மூன்று நாட்கள்.

வரலாறு :

சுமார் 150 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க ஆலயம்.

விவசாயம் முக்கிய தொழில்.

சாமைக் கதிர்கள் இங்கு அதிகளவில் விளையும்.

முற்காலத்தில் திருவிழாவை 'சாமை சோறு' திருவிழா என்று அழைப்பார்கள். அந்த அளவிற்கு சாமை இம் மக்களின் முக்கிய உணவாக காணப்படுகிறது.

இவ்வாலய திருவிழா சிறப்பாக விவசாயிகளையும், விவசாயத்தையும் பெருமைப் படுத்தும் விதமாக கொண்டாடி மகிழ்வர்.

புரட்டாசி மாதத்தில் இரண்டாவது வெள்ளிக்கிழமை முதல் பத்து வாரங்கள் ஜெபவழிபாடுகள் நடைபெறும். இறுதியில் பொங்கல் வைத்து இறைவனுக்கு நன்றிக் கடன் செலுத்துவார்கள்.

பேய் ஓட்டுதல் இவ்வாலயத்தின் தனிச்சிறப்பு.

மிகவும் பழமையான ஆலயம் பழுதடைந்த காரணத்தால், பழைய ஆலய பலிபீடம் மட்டும் இடிக்கப்படாமல், புதிய ஆலயம் கட்டப்பட்டு 03-12-2018 அன்று மேதகு ஆயர் P. தாமஸ் பால்சாமி அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

புதிய ஆலய கட்டுமானப் பணிகளுக்காக அயராது உழைத்த ஊர் பெரியதனக்காரர்கள், ஊர் மக்கள், இளைஞர்கள், பங்குத்தந்தை மற்றும் நல் மனம் கொண்ட நன்கொடையாளர்கள் அனைவரையும், சவேரியார்பட்டி ஊர் மக்கள் நன்றியுடன் நினைவு கூறுகின்றனர்.