அன்பான வேண்டுகோள்...

சகோதர சகோதரிகளே! கடந்த இரண்டு ஆண்டுகளாக நமது இணையதளம் மற்றும் தேவமாதா சர்வதேச வானொலி இயங்கி வருவது நீங்கள் அனைவரும் அறிந்ததே… அதில் ஆச்சரியப்படத்ததாக அருமையான கத்தோலிக்க புத்தகங்கள், பாரம்பரிய ஜெபங்கள், மிகப்பழமையான வேதாகமம், புனிதர்கள் வரலாறு என்று தொலைந்து போய்க்கொண்டிருந்த நம் கத்தோலிக்க பாரம்பரியத்தை மீட்டு அதற்கு ஒரு செயல்வடிவம் கொடுத்து ஒரு வலைத்தளமாக உருவாக்கி நடந்திக் கொண்டு வருகிறோம்.. அதில் மாதாவுக்கு மகிமையும், சிகரமும் சேர்க்கும் விதமாத மாதா ரேடியோ உலகெங்கும் ஒலிபரபப்பாகிக் கொண்டிருக்கிறது.

சுமார் 30,000 பக்கங்கள் சேர்க்கப்பட்டு, கடந்த இரண்டு வருடங்களாக இந்த நற்செய்திப்பணி வெற்றிகரமாக செயல்பட்டுக் கொண்டிருந்தது. இப்படி கடினமாக உழைத்து சிறுக சிறுக சேர்த்து பல தகவல்களை உருவாக்கி அமைத்துள்ள ஒரு முழுமைகியான கத்தோலிக்க பாரம்பரிய வலைத்தளம் தடைபட்டு முடங்கிவிட்டால் எண்ணற்ற ஆன்மாக்கள் பயன்பெறும் ஒரு கத்தோலிக்க வலைத்தளம் திடீரென தடைப்பட்டுப்போகும்… ஏன்? என்ன ஆச்சு? என்று கேட்டீர்களானால்.. வலைத்தளமாக இருந்தாலும் அதற்கும் பணம் தேவைப்படுகிறது.. விளம்பரங்களை அனுமதிக்க எங்களுக்கு விருப்பமில்லை.. அதில் தேவையற்ற விரம்பரங்கள் வந்து நம் கத்தோலிக்க பாரம்பரியத்திற்கும் அதன் மூலமாக ஆன்மாக்களுக்கும் பாதிப்பு வரலாம்.. 

ஆகையால் ஞான வாசகர்கள் தங்களால் இயன்றததைக் கொடுத்து இந்த வலைத்தளங்களைத் தாங்குமாறு அன்போடு கேட்கிறோம். நீங்கள் செலுத்தும் பணம் உங்களுக்கு வீண்போகாது. மாறாக உங்களுக்கு புண்ணியங்களாக மாறிவிடும். எப்படியென்றால் உங்கள் கருத்துக்களுக்காக திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு ஜெபிக்கப்படும். நீங்கள் வலைத்தளத்திற்கு உதவியது போலும் ஆகும், உங்களுக்காகவும், உங்கள் குடும்பங்களுக்காகவும் திருப்பலிகளும் நிறைவேற்றப்படும். இது விளம்பரங்களால் வரும் வருமானத்தை விட மிகவும் உன்னதமானது. மற்றும் புண்ணியமானது. யாரிடமும் எதையும் கேட்காமல் ஒரு சில சகோதரர்களாக தங்களுடைய மாதச் சம்பளத்திலிருந்து செலுத்தி இந்த வலைத்தளத்தை இரண்டு வருடங்களாக தாங்க தேவமாதா உதவினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது பொருளாதார நெருக்கடியின் காரணமாக நாமும் நம்மால் முடிந்த அளவு இந்த வலைத்தளத்தை தாங்கி ஆன்ம இரட்சணியத்தில் நமது பங்கைக் கொடுப்போம்.

வானொலி மற்றும் இனையதளத்தின் செலவுக் கணக்கு வருடத்திற்கு சுமார் ரூ.2,36,000/- காணிக்கை மற்றும் பங்களிப்பை செலுத்த வேண்டிய விவரங்கள்:

https://www.catholictamil.com/p/donation.html

ஆன்மாக்கள் மனந்திரும்ப வேண்டும் என்ற சேவை எல்லாம் வல்ல மூவொரு கடவுள் முன்னிலையில் ரொம்பவே விலையேறப் பெற்றது. இயேசுவுக்கே புகழ்! மரியாயே வாழ்க!