முத்திப்பேறுபெற்ற ஆலன் ரோச் பெற்ற ஆண்டவரின் விசேச எச்சரிப்பு.

1460- ஆண்டில் ஆலன் ரோச் ஆண்டவரிடமிருந்து ஒரு தனியான எச்சரிப்பைப் பெற்றார்.

ஒரு நாள் அவர் திருப்பலி நிறைவேற்றிக் கொண்டிருந்தார். ஜெபமாலையைப் பற்றி அவரைப் பிரசிங்கக் தூண்டும்படி நமதாண்டவர் திரு அப்பத்திலேயே அவருடன் பேசினார்;

“ இவ்வளவு சீக்கிரத்தில் நீ என்னை மீண்டும் சிலுவையில் அறைவதேன்?” என்ற குரல் கேட்டு முத். ஆலன் திடுக்குற்றார்.

“ ஆண்டவரே என்ன சொல்லுகிறீர் ? “ என்று கேட்டார்.

“ முன்பு ஒரு தடவை உன் பாவங்களால் என்னை சிலுவையில் அறைந்தாய். உன் பாவங்களால் என் பிதா மனம் நோவதை விட மீண்டும் நான் சிலுவையில் அறையப்படவே விரும்புவேன். ஆனால் நீ இப்போது என்னை மறுபடியும் சிலுவையில் அறைகின்றாய். ஏனென்றால் என் அன்னையின் ஜெபமாலைப் பிரசிங்கிக்க உன்னிடம் போதிய அறிவும், திறமையும் உள்ளன, ஆயுனும் நீ அதைச் செய்யவில்லை. நீ இதை மட்டும் செய்வாயானால் அநேக ஆன்மாக்களுக்கு நல்வழி காட்டி அவர்களை பாவத்தில் விழாமல் சரியான பாதையில் நடக்கச் செய்ய முடியும். ஆனால் நீ இவ்வாறு செய்யாததால் அவர்கள் செய்யும் பாவங்களுக்கு நீயே பொறுப்பாளியாகிறாய் “

முத். ஆலன் இடைவிடாமல் ஜெபமாலையைப் பிரசிங்கிக்க தீர்மானம் செய்ய வைத்தது சேசுவின் இப்பயங்கர குற்றச்சாட்டே.

மேலும் தேவதாயும் அவருடன் பேசி அவர் ஜெபமாலை பற்றி பிரசிங்கும்படி அவரைத் தூண்டினார்கள். தேவ அன்னை அவரைப் பார்த்து;

“ உன் வாலிபப் பருவத்தில் நீ ஒரு பெரிய பாவியாக இருந்தாய். ஆனால் நீ மனந்திரும்பும் வரத்தை என் திருக்குமாரனிடமிருந்து நான் உனக்குப் பெற்றுத் தந்தேன். உன்னை மீட்க எல்லா வகையான துன்பங்களையும் அனுபவிக்க விரும்பியிருப்பேன். அப்படி முடிந்திருக்குமானால், ஏனென்றால் மனந்திரும்பிய பாவிகள் என் மகிமையாயிருக்கிறார்கள். நீ என் ஜெபமாலையை எல்லா இடங்களிலும் எடுத்துச் செல்ல தகுதியாகும்படியும் அதே துன்பங்களை நான் பட்டிருப்பேன்” என்றார்கள்.

மேலும் அர்ச். சாமி நாதரும் முத். ஆலனுக்குத் தோன்றி, தம் ஊழியத்தால் அடையப் பெற்ற பெரிய நன்மைகளை எடுத்துச் சொன்னார். தாம் இடைவிடாமல் ஜெபமாலையைப் பிரசிங்கித்ததாகவும், அவருடைய போதனைகள் பெரிய நற்கனிகளைத் விளைவித்ததாகவும், அவர் பிரங்கிக்கும்போது  அநேகர் மனந்திரும்பியதாகவும் கூறினார்.

“ ஜெபமாலையை நான் பிரசிங்கித்ததால் வந்த ஆச்சரியமான பலன்களைப் பார்!. நீயும், தேவ அன்னையை நேசிக்கும் எல்லாரும் அவ்வாறே செய்ய வேண்டும். ஜெபமாலையைச் சொல்லி, அதன் வழியாக புண்ணியங்களைப் பற்றிய உண்மையான அறிவை எல்லா மக்களும் அடைந்து கொள்ளுமாறு ஜெபமாலையைப் போதிக்க வேண்டும். “ என்றார்.

நன்றி :  புனித லூயிஸ் மரிய மோன்போர்ட் எழுதிய ஜெபமாலையின் இரகசியம் என்ற புத்தகம் ...

“ அலகைத் தலையை உருட்ட நாமே அணியைத் திரட்டுவோம்.. ஜெபமாலை.. மணியை உருட்டி பேயை விரட்டுவோம்… “

ஜெபிப்போம்…ஜெபிப்போம்…ஜெபமாலை…

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !