எப்படிச் செபிக்க வேண்டும் ஜெபமாலை?

ஜெபமாலை இரண்டு அம்சங்களைக் கொண்டது. ஒன்று மனச் செபம்; மற்றது வாய்ச்செபம். ஜெபமாலையில் மனச் செபம் என்பது நம் ஆண்டவர் இயேசு கிறீஸ்து, அவருடைய திரு அன்னை இவ்விருவரின் வாழ்வு, மரணம், மகிமை ஆகிய திரு நிகழ்ச்சிகளைப் பற்றிய ஆழ்ந்த சிந்தனையேயாம். வாய்ச் செபம் என்பது அருள் நிறை மந்திரத்தை பதினைந்து பத்து மணியாக ஒவ்வொரு பத்து மணிக்கும் முன்னால் ஒரு பரலோக மந்திரத்துடன் சொல்வதாகும். இப்படிச் சொல்லும் போதே அப்பதினைந்து முக்கிய திருநிகழ்ச்சிகளிலும் சேசுவும் மரியாயும் அனுசரித்த முக்கிய புண்ணியங்களை நினைத்து ஆழ்ந்து சிந்திக்கவும் வேண்டும்.

முதல் ஐந்து பத்து மணியிலும் நாம் சந்தோச தேவ இரகசியங்களை நினைக்க வேண்டும். இரண்டாது ஐந்து மணியில் ஐந்து துக்க தேவ இரகசியங்களை நினைக்க வேண்டும். மூன்றாம் ஐந்து பத்து மணியில் ஐந்து மகிமை தேவ இரகசியங்களையும் நினைவு கூற வேண்டும். இங்கனம் ஜெபமாலையில் மனச் செபமும், வாய்ச் செபமும் மிக அழகிய முறையில் இனைந்து காணப்படும். அவற்றின் மூலமாக நாம் சேசு, மாதா இவ்விருவரின் வாழ்வு, துயரம், மகிமை ஆகிய திரு நிகழ்ச்சிகளையும், புண்ணியங்களையும் பின்பற்ற வேண்டும்.

 “ பாவிகளையும், பதிதர்களையும் மனந்திருப்பவும், பாவத்தை அழிக்கவும் ஏதுவாக ஜெபமாலையை எடுத்துச் சொல் “

நமதாண்டவரும், தேவ அன்னையும்  புனித சாமி நாதருக்கு பலமுறை தோன்றி கூறியது,

“ அருள் நிறை மந்திரத்தைப் போன்ற அழகிய ஒன்றை எந்த மனிதனும் இயற்றியதில்லை. பிதாவாகிய சர்வேசுவரனே எனக்குக் கூறிய இவ்வழகிய கண்ணியம் நிறைந்த வார்த்தைகளை விட என் இருதயத்திற்கு விருப்பமான வேறு எந்த வாழ்த்தும் இல்லை “

தேவமாதா புனித ஜெத்ரூத்தம்மாளிடம் கூறியவை..

“ பரலோக மந்திரத்தையும், அருள் நிறை மந்திரத்தையும் விட அதிக அழகும் உயர்ந்ததுமான ஜெபங்களைச் சொல்ல முடியும் என்று நினைப்பது பசாசின் விநோதமான ஏமாற்றத்துக்கு உட்படுவதாகும் “ – நம் மாதாப் புனிதர் புனித லூயிஸ் மரிய மோன்போர்ட்

நன்றி : புனித லூயிஸ் மரிய மோன்போர்ட் எழுதிய ஜெபமாலையின் இரகசியம் என்ற நூல்

“ அலகைத் தலையை உருட்ட நாமே அணியைத் திரட்டுவோம்.. ஜெபமாலை.. மணியை உருட்டி பேயை விரட்டுவோம்… “

ஜெபிப்போம்…ஜெபிப்போம்…ஜெபமாலை…

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !