கத்தோலிக்க திருச்சபையின் மக்கள் செய்யும் புனித யாத்திரையின் உண்மையான நோக்கம், அதன் அர்த்தம்..

யாத்திரை ஆங்கிலத்தில் பில்கிறிம்  Pilgrim..இவ் ஆங்கிலச் சொல் இலத்தீன் மொழிச்சொல்லான "பெரிகிறினும்" peregrinum என்ற சொல்லில் இருந்து வந்ததே அதன் உண்மையான அர்த்தம் "தூரப்பிரதேசத்தை நோக்கி ஒரு திட்டத்தோடு போவது"

அது வெறுமனே எந்த ஒரு திட்டமோ அல்லது சாதாரணமாக போவது அல்ல..மாறாக மிக உயரிய நோக்கம்.. அது வேறு எதுவுமல்ல கடவுளை ஆராதனை செய்து மகிமைபடுத்துவதே..

"புனித யாத்திரை" அல்லது "புனித பயணம்" என்பது புனிதமாகக் கருதப்படும் ஒரு இடத்திற்கு யாத்திரையாக செய்யும் பயணம். 

கத்தோலிக்கர்களைப் பொறுத்தவரை, ஒரு புனித யாத்திரை என்பது வெறுமனே வரலாற்று இடங்களுக்குச் சென்று கிறிஸ்தவ  நினைவுச்சின்னங்களைப் பார்வையிடுவது என்பதை விட, இது ஒரு ஆழமான மற்றும் ஆன்மீக அர்த்தத்துடன் கூடி ஒரு பயணமே ஆகும்..

கத்தோலிக்க புனித யாத்திரை இதுவே..

பிரயாணம் எப்போதும் மனதிற்கு ஒரு மாறுதலை தரக்கூடியது. அதிலும் ஆண்டவருக்குள்ளான நடைபயணம் அல்லது பாதயாத்திரை பிடித்தமான ஒன்று..

chants..ஆண்டவருக்குள்ளான பாடல்கள்... வாசிப்புகள்.. செபங்கள்... உரையாடல்கள்  நம் செல்லும் யாத்திரையில் இருக்கும்..மகிழ்ச்சியான தருணங்கள்...வலிகள் எல்லாவற்றையும் தாங்கி செல்கிறோம்...

செல்லும் வழியில் மலைகள் ஆறுகளை கடந்து செல்லும்போது இயற்கையை அவருடைய படைப்புகளின் அழகை பார்த்து அனுபவித்து நன்றி சொல்லி அவர்கூட நடக்கிறோம்.

புது மனிதர்கள் வாழ்க்கை சூழ்நிலைகள், சமூக மாற்றங்களை கடந்து செல்கிறோம்..இது நம்மை மேலும் ஆண்டவருக்குள்ளாக வலிமையானவர்களாக மாற்றும்.

புரட்டஸ்தாந்து மதத்தினர், நம் யாத்திரைகள் இந்துக்களைப்பார்த்து கத்தோலிக்கர்கள் பின்பற்றுகிறார்கள் என கூறக்கேள்விப்பட்டதுண்டு..😂

உண்மை என்ன என்பதை இங்கு பார்ப்போம்...

கி.மு 957 ஆம் ஆண்டில் எருசலேமில் ஆலயம் கட்டப்பட்டபோது, இப் புனித பயணம் அல்லது யாத்திரை ஆரம்பமானது.. யூத ஆண்கள் அனைவரும் மூன்று மிக பெரிய விழாக்களுக்கு அவர்கள் முன் நிற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இன்று யூதர்கள் இந்த விழாக்களை  "புனித யாத்திரை விழாக்கள்" (Pilgrimage Festivals) என்று அழைக்கிறார்கள்.

இவ்வாறு யூதர்கள் பல இடங்களில் இருந்தும் ஜெருசலேம் தேவாலயம் நோக்கி பயணம் செய்யும் விழாக்களே அவ் புனித யாத்திரை விழாக்கள்...

*யூதன் என்ற வகையில் இயேசுவும் இவற்றுக்கு செல்வார்..சென்றார்...

01.Pesach - The Feast of the Unleavened Bread பாஸ்க்கா: புளிப்பற்ற அப்ப விழா

*ஆதார வசனம் காண்க (விடுதலைப் பயணம் 23:15) (யோவான் நற்செய்தி 2:13)

02.Shavu’ot - The Feast of Weeks or Pentecost  "ஷவுஓர்த்" வாரங்களின் விழா

*ஆதார வசனம் காண்க (விடுதலைப் பயணம் 34:22-23)

03. Sukkot - The Feast of Tabernacles or Festival of Ingathering  "சக்காட்"  சேகரிப்பு விழா

*ஆதார வசனம் காண்க (விடுதலைப் பயணம் 23:16)

(எபிரேய மொழியில் உள்ளதை சரியான உச்சரிப்பை தமிழில் எழுத கடினம்)

இவைகள் யூதர்கள் யாத்திரை செய்யும் விழாக்கள்... இவர்கள் இதற்கு செல்லும்போது திருப்பாடல்கள் பாடிக்கொண்டு, நன்றியோடு, இறைவனின் ஆன்மீக உறவில் செல்வார்கள்... அன்றைய நாட்களில் வாகனங்கள் இல்லாது பயணம் எவ்வாறு இருந்திருக்கும் என்பதை நீங்களே கற்பனை பண்ணிக்கொள்ளுங்கள்..

புனித யாத்திரைக்கான விவிலிய ஆதாங்களை பார்த்தோம்...

இயேசுவின் மரணம், உயிர்த்தெழுதல், மற்றும் கிறிஸ்தவத்தவம் குறிப்பிட்டளவு பரவிய பின்னர் கிறிஸ்தவர்கள் தங்கள் மீட்பராம் இயேசு,அவர் பிறந்து வாழந்த இடங்கள், பரிசுத்த தாய், மற்றும் அப்போஸ்தலர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்ற, நேரில் சென்று பாரக்க தூண்டப்பட்டனர்.

அதாவது இவர்கள் வாழ்ந்த இடங்களுக்கு விருப்பத்தோடு, செல்லத் தொடங்கினார்கள்..

4ம் நூற்றாண்டில் கிறிஸ்தவர்கள் இயேசுவின் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்த வெவ்வேறு இடங்களுக்கு அல்லது வேத சாட்சிகள் மற்றும் புனிதர்களின் கல்லறைகள், நினைவிடங்களுக்கு பயணம் செய்தபோது "புனித யாத்திரை" கத்தோலிக்க பாரம்பரியத்தின் குறிப்பிடத்தக்க பகுதியாகவே மாறியது..

மதத் துன்புறுத்தலின் போது கூட பல விசுவாசிகள் இவ்வாறான இடங்கள் கல்லறைகளையும் பார்வையிடுட பயணித்தார்கள்...

இந்த செயல்கள், பயணங்கள் அவர்கள் கடவுள்மீது வைத்திருக்கும் அளவுகடந்த பயபக்தியின், அன்பின ஆழமான வெளிப்பாடாக அமைந்தது.

இதன் மூலம் அதிகம் நேசித்த இயேசுவை , அவருக்காக வாழ்ந்து தியாகம் செய்த புனிதர்களை, கடவுளுக்குள்ளாக மகிமைப்படுத்தினார்கள்...

இது உள்ளுணர்வு சார்ந்ததும் கூட...

அன்பின் வெளிப்பாடு...

நன்றியின் வெளிப்பாடும் கூட...


*இனி புனித யாத்திரை அல்லது புனித பயணங்களின் பயன்களை அவற்றின் வெளிப்பாடு குறித்து பார்ப்போம்..

01...இது ஒரு தியாகத்தின் (Sacrifice) , தவத்தின் (penance) வெளிப்பாடு

கிறிஸ்தவ புனித பிரயாணங்கள் இடைக்காலத்தில் (middle ages) மிகவும் பிரபலமடைந்தது. இவ் இடைக்கால யாத்திரீகர்கள் அவர்களுடன் ஒரு சிப்பி (scallop shell) அல்லது ஒரு சிறப்பு துணி (special scarf) போன்ற அடையாளங்களை எடுத்துச் சென்றனர்,

இதை அவர்களை அன்றைய சூழலில் கொண்டு செல்லும்போது  யாத்ரீகர்களாகக் குறித்ததுகாட்டும் அடையாளமே..இல்லாவிட்டால் சாதாரண பயணிக்கும் இறை பயணம் மேற்கொள்ளும் ஒருவருக்கும் வேறுபாடு இல்லாமல் அல்லவா இருக்கும்..அதற்காக..

***உதாரணத்திற்கு ஐரோப்பாவில் மிக பிரசித்திபெற்ற யாத்திரை ஸ்தலம அப்போஸ்தலரான யாக்கோபின் கல்லறை அமைந்துள்ள தேவாயம் செல்லும் போது இவ் சிப்பியே எடுத்து செல்வார்கள்..தற்போதும் அவ்வாறே..

இவ் யாத்திரை அதிகபட்சமாக 800km நடக்கவேண்டும்...

குறைந்தது 100km. 35 நாட்கள் தொடர்ந்து 800 km நடப்பார்கள்..சென்றவருடம் மாத்திரம் இவ் நடைபயணம் செய்தவர்கள் 400,000 பேர்..

அன்று புனித பூமிக்கு (இஸ்ராயேல்) யாத்திரைக்கு போவது அதிகமானோரால் விரும்பப்பட்டது... *தற்போதும் கூட..

ஐரோப்பாவில் பழக்கமான புனித பகுதிகளுக்கு செல்வதுபோக, வெளியே (*உதாரணத்துக்கு இஸ்ராயேல்) ஒரு யாத்திரை மேற்கொள்வது நிதி (money) ரீதியாக மிக சவாலானது மட்டுமல்லாமல், அது உயிருக்கு ஆபத்தானதும் கூட.

(தயவு செய்து நாம் சொல்வதை அன்றைய கால நடைமுறையில் சிந்தியுங்கள்)

பல கொள்ளையர்கள், பயணிகளிடமிருந்த திருடுவதற்காக பதுங்கி காத்திருந்தனர், மேலும் கடக்க பல ஆபத்தான பாலைவனங்கள், மலைகள், காடுகள் இருந்தன..

இதன் காரணமாக பல யாத்திரீகர்கள் காயமடைந்தனர் அல்லது கொல்லப்பட்டனர்.

யாராவது ஒரு பெரிய பாவத்தை செய்தால் அவ்வப்போது ​​யாத்திரை போவது என்பது தவத்தின் செயலாக கருதப்பட்டது... அது மனதுக்கு புதிய ஒரு புத்துணர்ச்சி தரும் செயலும்கூட...பிரயாணங்கள் குறித்து அனுபவரீதியாக அறிந்தால் நான் சொல்வது புரியும்..

ஒரு யாத்திரைக்குச் செல்வது என்பது பெரும் துன்பங்களை உள்ளடக்கியது, ஏனென்றால் தாங்கள் பாவம் செய்தோம் என கருதியவர்கள் வெறுங்காலுடன் நடந்தார்கள்.. அவர் பயணம் முழுவதும் தனது உணவுக்காக பிச்சை எடுக்க வேண்டியிருந்தது.

ஆனால் யாத்திரைக்கு இது மட்டுமே காரணம் அல்ல..முன்னர் கூறியது போல ஒரு அன்பின் வெளிப்பாடும் கூட..

இன்றைய நாட்களில் புனித யாத்திரைகள் போவதற்கு நாம் கற்பனை செய்வதற்கும் இது முற்றிலும் நேர்மாறாக இருந்தது.

ஆடம்பர ஹோட்டல்களும், வழிகாட்டப்பட்ட சுற்றுப்பயணங்களும், வாழிகாட்டிகள், இணைய தொலைபேசி வசதிகள் இல்லை. பாதைகள் இன்றுபோல இல்லை..

உண்மையில் அன்று ஏன் இன்றும் கூட யாத்திரை என்பது மிகப்பெரிய தியாகத்தின் செயற்பாடே...இது அநுபவம்...எழுத்தில் எழுதி முழுவதும் புரிய வாய்ப்பில்லை...

#02. யாத்திரைகள் நம்மை  ஆழ்மனதில் செய்யும் பயணங்களாகும்...

ஒரு யாத்திரைக்கு, யாத்திரீகருக்கு தார்மீக மற்றும் ஆன்மீக முக்கியத்துவம் உண்டு.

பொதுவாக, யாத்திரீகர் தனது நம்பிக்கை மற்றும் மத நம்பிக்கைகளின் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதும் ஒரு இடத்திற்கு அல்லது அது சார்ந்த தளத்திற்கு ஒரு பயணத்தை மேற்கொள்வது இதில் அடங்கும்..

இதில் அவ்வாறு பயணிப்பவர் தன் நம்பிக்கை சார்ந்த இடங்களை நேரில் பார்த்து கற்று அறிந்துகொள்ள அதிக சந்தர்ப்பமுள்ளது...

இவ்வாறான புனித பயணங்களின் மூலம் ஒருவர் உள்மனம் சார்ந்து மிக பெறுமதியான மாற்றுங்களை, அனுபவம் பெறுகிறார்...

உதாரணத்திற்கு இயேசு நின்ற இடத்தில் நீங்கள் நிற்கும்போது வரும் அனுபவம் உள்ளுணர்வு இருக்கிறதே, அதேபோல மரியாள் காட்சிகொடுத்த இடத்தில் அதை குகையில் நிற்கும்போது வரும் உணர்வு அது வார்த்தைகளில் எழுதமுடியாது..

*இங்கு அனுபவத்தை குறித்து பேசுகிறேன்...

ஒரு யாத்திரை இயேசு மற்றும் புனிதர்களின் வாழ்க்கையின் கலாச்சார, வரலாற்று மற்றும் ஆன்மீக அம்சங்களில் நம்மைத் திட்டமிடவும், அந்த அனுபவத்தில் நாம் மூழ்கவும் உதவுகிறது..

கத்தோலிக்கர்களாகிய நம் வாழ்க்கைக்கு நமது ஆன்மீக ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சிக்கு நேரத்தை முதலீடு செய்வது முக்கியத்துவம் வாய்ந்தது...அதில் இவ்வாறான பயணங்களும் முக்கியமானது..

03..ஜெபத்தின் முக்கியத்துவம்

ஒரு புனித யாத்திரை என்பது சாதாரன விடுமுறை அல்லது விடுமுறைப் பயணம் அல்ல.

கத்தோலிக்கர்கள் நம் விசுவாசத்தில் வளரவும், இயேசுவின் மற்றும் புனிதர்களின் வாழ்க்கையை ஒரு புதிய வெளிச்சத்தில் காணவும் இது ஒரு அழகான வாய்ப்பு.

ஆகவே அதற்கான தகுந்த ஆயத்தங்கள் செய்துகொள்ளவேண்டியது கட்டாயமே..அது பணமாக, தேவையான பொருட்கள் இவ்வாறானவைகளாகவும் இருக்கலாம்..ஆனால் இவை நம் பயண நோக்கத்தை திசை திருப்ப கூடாது. 

ஒரு யாத்திரை என்பது ஒரு ஆன்மீக அனுபவம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது,

எனவே ஆன்மீக ரீதியிலும் அதற்கு நாம் தயாராக வேண்டும்.

ஜெபம் என்பது யாத்திரைக்கு முன்னர் நாம் செய்யக்கூடிய மிக அடிப்படையான மற்றும் மிக முக்கியமான ஆரம்ப தயாரிப்பாகும்..

உங்கள் இலக்கைத் தேர்ந்தெடுப்பதற்கு முன், நீங்கள் செல்ல சிறந்த இடத்தையும், தளங்களையும் உருவாக்க வழிகாட்டுமாறு கடவுளிடம் உருக்கமாக ஜெபம் செய்யுங்கள்.

கடவுள் ஒரு இலக்கை அல்லது இடத்தை வெளிப்படுத்திய பிறகு, ஒவ்வொரு நாளும் அதற்காக ஜெபம் செய்யத் தொடங்குங்கள்.  பயணத்தைப் பற்றி உங்களுக்கு என்ன கவலைகள் இருந்தாலும், ஒரு தாழ்மையான மற்றும் ஏற்றுக்கொள்ளும் இதயத்தையும் ஆவியையும் உங்களுக்கு வழங்கும்படி கடவுளிடம் கேளுங்கள். நீங்கள் அந்த இடத்திற்கு பிராயணம் செய்து வரும்போது, ​​பிரார்த்தனை மற்றும் பிரதிபலிப்பு (reflective) மனநிலையுடன் இருங்கள்.

தம்மைப் பின்பற்றியவர்களின் வாழ்க்கை மற்றும் அவர்கள் மூலம் கடவுள் உங்களுக்கு என்ன சொல்ல வேண்டும் என்பதை நீங்கள் சாட்சியாக  அனுபவரீதியாக உணர இது ஒரு மிக மிக முக்கியமான நேரம்.

ஜெபத்துடன் கூடிய பயணங்கள், மகிழ்ச்சியானவை எந்த நிலையிலும்...

This is a rare and important time for you to witness and feel what God has to say to you through the lives and legacies of his followers.

உங்கள் பிள்ளைகளை ஊக்குவியுங்கள்.. ஆண்டவருக்குள்ளான நடைபயணங்கள், பிரயாணங்களை மேற்கொள்ளுங்கள்..அவை நம்மை விசுவாசத்தில் ஊன்றச்செய்யும்..

ஐரோப்பாவுக்கோ இஸ்ராயேலுக்கோதான் புனித யாத்திரை மேற்கொள்ளவேண்டுமென அவசியமில்லை..அது உங்கள் அருகில் கூட இருக்கலாம்..

நம் நாடுகளிலும் பல யாத்திரை ஸ்தலங்கள் உண்டு..

**உண்மையான விசுவாச உணர்வோடு பயணிப்பதே முக்கியமானது... அது நம் மனதை ஒருநிலைப்படுத்தும்.. அநாவசியமான, வீணான சிந்தனை, செயல்களில் இருந்து நம்மை வெளியே கொண்டுசெல்லும்...

நம் கிறிஸ்தவ வாழ்க்கை கூட ஒரு புனித பயணமே..

-ஜோன் ஷரிஸ்-