திருப்பலி நின்றால் உலகம் என்னவாகும்?

“ ஆயினும் மனுமகன் வரும்போது மண்ணுலகில் விசுவாசத்தைக் காண்பாரோ?” லூக்காஸ் 18:8

ஒரு புறம் வேதனை.. மறுபுறம் விசுவாச சோதனை…

“ பூமி நிற்காமல் இன்றுவரை சுழன்று கொண்டிருப்பதற்கு காரணம் உலகில் எப்போதும் ஏதாவது ஒரு மூலையில் திருப்பலி நடந்து கொண்டிருப்பதால்தான். இல்லையென்றால் உலகம் என்றோ அழிந்திருக்கும் “ – 

ஆண்டவருடைய திருக்காயங்களை தன் உடலில் 50 ஆண்டுகள் சுமந்த முதல் கத்தோலிக்க குரு.. புனிதர்... தந்தை பியோ (அவருடைய உடல் இன்னும் அழியாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது).

திருப்பலி எதற்காக நிறைவேற்றப்படுகிறது.. பிதாவாகிய சர்வேசுவரனுடைய கோபத்தை அமர்த்துவதற்கு சுதனாகிய சர்வேசுவரனாக இயேசு சுவாமியே பலிப்பொருளாக மாறி தந்தைக்கு தன்னையே ஒப்புக்கொடுக்கிறார்.. “ அப்பா ! தந்தையே.., தயவு செய்து இந்த உலகத்தை அழித்துவிடாதீர்கள்.. மனுமக்களின் பாவங்கள் உங்களுக்கு கோபமூட்டும் போது நான் அவர்களை மீட்க பாடுபட்ட என் திருப்பாடுகளை நினைவு கூர்ந்து தயவு செய்து எனக்காக அவர்களை மன்னித்து மனுமக்களை… உலகத்தை காப்பாற்றுங்கள்.. இரக்கமும்… அன்பும் உருவான என் தந்தையே.." என்று நமக்காக பிதாவாகிய சர்வேசுவரனிடம் பரிந்து பேசுகிறார்..

அதில் நமக்கு என்ன வாய்ப்பு என்றால் ‘நம்மையும் பலிப்பொருளாக மாற்றி நம் பாவங்களுக்காக நாம் மனம் வருந்தி மன்னிப்பு கேட்பதோடு நமக்கு தேவையான உடல் உள்ள நலன்களையும் பெற்றுக்கொள்ள முடியும்’.

மேலும் முக்கியமானது ஆண்டவர் இயேசுவையே உணவாக உட்கொண்டு நாம் ஆன்ம சரீர நன்மை பெற்று ஆண்டவர் இயேசுவாக மாற அவரைப்பின் செல்ல நமக்கு ஆன்ம, சரீர வலிமை கிடைக்கிறது.. திருப்பலி ஏதோ ஒரு இடத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டால் கூட அது உலக மக்கள் அனைவருக்காகவும் ஒப்புகொடுக்கப்படுகிறது.. திருப்பலியின் மகிமையும், அற்புதங்ளும் ஏறக்குறைய  நிறைய  மக்களுக்கு தெறியும்… இதில் இன்னொரு புனிதமான விசயம் திருப்பலி நிறைவேற்றும் ஒவ்வொரு குருவானவரும்  கிறிஸ்துவாக மாறுகிறார்கள்...

சூரியனை மூடி மறைத்துவிட்டு நீங்கள் ஒளி வரவேண்டும் என்று ஜெபியுங்கள் என்றால் என்ன அர்த்தம்..? கொரோனோ வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை எப்படிக் காப்பாற்றுவது? அது மேலும் பரவாமல் எப்படித் தடுப்பது? அந்த வைரஸை உலகைவிட்டு எப்படி அனுப்புவது..?

நாம் வீட்டுக்குள் முடங்கியிருந்தால் நாம் காப்பாற்றப்பட்டுவிடுவோமா?

கிறிஸ்தவர்கள் மற்றவர்கள் போல் இருக்கக்கூடாது… நமக்கு கடமை உண்டு.. அதை செய்தாக வேண்டும். இதுவரை உலகை அச்சுறுத்தி மிகப்பெரிய நோய்கள் எல்லாம் தாக்கியபோது கிறிஸ்தவர்கள் சும்மா இருக்கவில்லை.. எத்தனையோ குருக்கள், கன்னியர்கள், பொது நிலையினர் அவர்களுக்கு சேவை செய்து புனிதர்களாக உயர்ந்துள்ளார்கள்…

ஒவ்வொரு ஞானஸ்தானம் பெற்ற கத்தொலிக்கருக்கும் கடமை உண்டு… பொறுப்பு உண்டு… வீட்டுக்குள் முடங்கி கிடந்தால் வீட்டின் கதவைத் தட்டாமல் வீட்டிற்குள் வரவும் வாய்ப்பு உண்டு.. ஏற்கனவே வந்திருக்கிறது…

திருப்பலி நிற்காமல் பார்த்துக்கொள்ள ஒரு சில ஆலோசனைகள்…

1.     முதலில் பங்குத்தந்தையர்கள், அருட்தந்தையர்கள் தனித் தனியாகக் கூட திருப்பலி நிறைவேற்றலாம்…ஒப்புக்கொடுக்கலாம்…

2.     பங்கில் இருக்கும் கன்னியர்களையும் அழைத்து திருப்பலி  நிறைவேற்றலாம்…

3.     அன்பியங்களை ஒவ்வொன்றாக அழைத்தும் ஒப்புக்கொடுக்கலாம்…

4.     குழு குழுவாக அழைத்து அதாவது மக்களை கொஞ்சம் கொஞ்சமாக அழைத்தும் ஒப்புக்கொடுக்கலாம்…4 பேர் 5 பேர் இருந்தாலும் ஒப்புக்கொடுக்கலாம்.

5.     அல்லது அனைத்து இறை மக்களையும் ஒன்றாக அழைத்து எங்கள் ஆண்டவர் காப்பாற்றும் கடவுள் அழிக்கும் கடவுள் அல்ல நோய் பரப்பும் கடவுள் அல்ல  என்று பகிரங்கமாக அறிக்கையிட்டு திவ்ய பலி பூசைகளை ஒப்புக்கொடுக்கலாம்..

6.     இன்னும் எத்தனையோ பல வழிகள் உள்ளன…  ஆதித்திருச்சபை கடைபிடித்த எத்தனையோ வழிகள் உள்ளது. வீடுகளில், காடுகளில் ஏன் குகைகளிலும் கூட திருப்பலி நிறைவேற்றப்பட்டுள்ளது..

“ இதை என் நினைவாகச் செய்யுங்கள் “ என்ற ஆண்டவரின் வார்த்தைக்கு நாம் கீழ்ப்படியவில்லை என்றால்.. என்ன நடந்தாலும் அதற்கு பொறுப்பு யார் என்று நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்..

விசுவாசத்திற்கு பெயர் மடமை அல்ல.. முட்டாள்தனம் அல்ல… சாட்சியம்… உண்மைக்கு சாட்சியம்.. உண்மை தேவனுக்கு சாட்சியம்..

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !