1571 லேபந்தோ போரில் செபமாலையின் சக்தி துருக்கிய முஸ்லிம்களின் பெரும்படையை தோற்கடித்தது!


ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவின்  சான் யூலாலியா பேராலயத்தில் உள்ள லேபந்தோ கிறிஸ்துவின் சிற்றாலயத்தின் தோற்றம். 

இந்த சிலுவையில் தொங்கும் நமதாண்டவர் இயேசுகிறிஸ்துவின் சுரூபம் லேபந்தோ போரில் ஆஸ்திரியாவைச்  சேர்ந்த டான் யுவான் கப்பலில் இருந்தது.

முன்னால் வந்த துருக்கிய முஸ்லிம்களின் கப்பலானது இதனை நோக்கி ஒரு பீரங்கி குண்டை  வீசியது. அதிசயிக்கத்தக்க வகையில்  நமதாண்டவர்  இயேசுகிறிஸ்துவின் திருவுடலானது பீரங்கி குண்டினை தவிர்த்து வலதுபக்கம் விலகியது, அன்றிலிருந்து  இன்று வரை அதே நிலையில் இருக்கின்றார். இது  விலைமதிப்பற்ற  நினைவுச்சின்னமாக ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா வின்  சான் யூலாலியா பேராலயத்தில் மக்களின் வணக்கத்திற்காக வைக்கப்பட்டுள்ளது.


லேபந்தோ போர், அக்டோபர் 7, 1571 ~~

அக்டோபர் 7 ஆம் நாள் அதிகாலையில், பத்ராஸ் வளைகுடா முகத்துவாரத்தில், லேபந்தோ போரின் முடிவை நிர்ணயிக்க கடைசி  கட்டமாக கிறித்துவ மற்றும் முஸ்லீம் போர்க்கப்பல்கள் நேருக்கு  நேர் மோதியது. 

காற்று மற்றும் போர்நிலைகள் முஸ்லிம்களுக்கு ஆதரவாக இருந்தாலும், கிறிஸ்துவர்களை தலைமை ஏற்று நடத்திய டான் யுவான் வெற்றி பெறுவோம் என உறுதியாக இருந்தார்.

அவர் ஒரு அதிவேக கப்பலில் ஏறி தனது போர்க்கப்பல்களை பார்வையிடும் போது உற்சாகப்படுத்தும் வார்த்தைகளை உரக்க தனது படையினரை நோக்கி கூறினார். அவர்களும் உற்சாகமாய் அவருக்கு பதிலுரைத்தனர்.

டான் யுவான் தனது கப்பலுக்கு வரும் முன்னரே அதிசயிக்க விதமாய் காற்றின் போக்கு கிறிஸ்துவர்களுக்கு சாதகமாக மாறியது. இதனை முதன் முதலில் கண்டவர்கள் இத்தருணைத்தை  குறித்து கூறும்போது" கண்ணுக்கு புலப்படாத ஏதோ ஒரு காரணத்தால் ஏற்பட்ட மிக முக்கியமான திருப்புமுனை'' என்று எழுதியுள்ளனர்.

அதே நேரத்தில், அக்டோபர் 7 ஆம் நாள் அதிகாலையில்,  பாப்பரசர் ஐந்தாம் பத்திநாதர் தனக்கு நம்பிக்கைக்குரிய பலருடன் சந்தா மரியா மஜ்ஜியோரே பேராலயத்தில் (ரோம்) செபமாலை செபித்து கொண்டு இருந்தார் என்று பிற்காலத்தில் வத்திக்கான் ஆவணங்கள் வெளிப்படுத்தியது.

 அதிகாலையில் இருந்து அந்தி மாலை வரை லேபந்தோவில் கிறிஸ்துவர்களும் முஸ்லிம்களும் போரிட்டுக்கொண்டு இருக்கும் பொது, ரோமில் பாப்பரசர் தலைமையில் செபமாலை செபித்துக்கொண்டு இருந்தனர். கிறித்துவ படைகள் வெற்றி பெற்ற அதே  சமயத்தில் நூற்றுக்கணக்கான மைல்களுக்கு அப்பால் ரோமில் நமது பாப்பரசர் திடீரென எழுந்து  சன்னல் அருகே சென்று " கிறிஸ்துவர்களின் படை வெற்றி வாகை சூடியது" என்று உணர்ச்சி வசப்பட்டு,  இறைவனின் பேரிரக்கத்துக்கு நன்றியாக கண்களில் கண்ணீர் ததும்ப  முழங்கினார். 

போரானது முடிவுக்கு வந்தபோது முஸ்லிம்கள் தோற்க்கடிக்கப்பட்டனர். அவர்களின் 270 போர்கப்பல்களில் 200 போர்க்கப்பல்கள் தீக்கிரையாக்கப்பட்டது, துருக்கியர்கள் அவர்களது படையில் 30000 போர்வீரர்கல் அழிக்கப்பட்டனர். கிறிஸ்துவர்கள் தரப்பில் 4000 முதல் 5000 பேர் இறந்தனர்.

செபமாலையானது ஒரு மிகப்பெரிய ராணுவ வெற்றியை கிறிஸ்துவர்களுக்கு பெற்றுத்தந்தது.

மிகப்பெரிய ராணுவ வீரர்கள் போரை வெறுத்து அமைதியை நாடுவது போல் டான் யுவானும் லேபந்தோ வெற்றிக்கு பிறகு தனிமையில் ஒதுங்கி  தனது 31 வது வயதில் உயிர்நீத்தார். 

இன்னுமொரு முக்கிய விடயம் என்னவென்றால், போரில் கத்தோலிக்க படைகளுக்கு தலைமை தாங்கிய அட்மிரல் ஆண்ட்ரியா டோரியா, நமது  குவாதலூப்பே அன்னையின் சிறு படத்தை தன்னுடன் வைத்திருந்தார். குவாதலூப்பே அன்னையின் அந்த படமானது தற்பொழுது இத்தாலியில் உள்ள அவேட்டோ நகரின் சான் ஸ்டெபனோ  பேராலயத்தில் மக்களின் வணக்கத்துக்காக வைக்கப்பட்டுள்ளது.

மரியே வாழ்க !!! எம் தாயே வாழ்க!!!