உனது உத்தரியத்துக்கு முக்கியத்துவம் அளிக்கவும் ***

" உத்தரியத்தை அணித்து யார் மரிக்கிறார்களோ அவர்கள் நரக நெருப்பில் துன்பப்படமாட்டார்கள் " .
( 1251 ஆம் ஆண்டு ஜீலை 16 ஆம் நாள் மரியன்னை சைமன் ஸ்டாக்குத் தந்த உறுதிமொழி )

    உன்னுடைய உத்தரியம் உனக்கு பொருள் செரிந்த ஒன்றாகும். " நம் தாய் மரியன்னையே விண்ணுலகிலிருந்து நமக்குக் கொண்டு வந்த ஒரு பொக்கிஷம் பக்தியோடு என்றும் அதை நீ அணிந்து கொள் " . என ஒவ்வொருவருக்கும் அவள் கூறுகிறாள். " அது என் உடை ;அதை அணிவதின் மூலம் என்றும் எப்பொழுதும் என்னை நீ நினைக்கிறாய். நான் பிரதிபலனாக உன்னையே நினைக்கிறேன். உனக்கு உதவி புரிகிறேன். விண்ணுலகில் முடிவில்லா வாழ்வை உனக்குப் பெற்றுத் தருகிறேன் " . என்றார் நமது அன்னை.

    புனித அல்போன்ஸ் கூறுகிறார், " மக்கள் எவ்வாறு தமது பணியாடையை அணிவதில் பெருமை கொள்கிறார்களோ அவ்வாறே புனித அன்னை மரியாள் உத்தரியத்தை அணிந்து அவளது சேவையில் தங்களை அர்பணித்து இறை அன்னையின் குடும்பத்தில் அங்கத்தினர்களாகும்போது பூரிப்படைகிறாள் " .

   மரியாயின்பால் உண்மையான பக்தி மூன்று காரியங்களில் அடங்கியுள்ளது. வணக்கம், நம்பிக்கை, அன்பு . எப்படி என்றால் உத்தரியத்தை அணிவதின் மூலம் மரியே உம்மை வணங்குகிறேன் உம்மை நம்புகிறேன், உம்மை அன்பு செய்கிறேன் என்று வெளிப்படையாக சொல்லாமல் வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு நிமிடமும் கூறுகிறோம். எனவே உத்தரியம் ஒரு செபமாகும்.

   நம் ஆண்டவர் நமக்கு பரலோக செபத்தைக் கற்பித்தார். அன்னை மரியாள் உத்தரியத்தின் மகிமையை கற்பிக்கிறாள். நாம் அதை செபமாக அணிகிறோம். மரியாள் நம்மை நம் ஆண்டவரின் திரு இருதயத்தண்டை இழுக்கிறாள். எனவே உத்தரியத்தை கையில் ஏந்தி சொல்லப்படும் செபம் சிறந்த செபமாகும். சோதனை காலங்களில் முக்கியமாக இறை அன்னையின் உதவி நமக்கு அதிகம் தேவை. பசாசின் சோதனையிலிருந்து காக்க உத்தரியத்தை அணிந்து மவுனமாக மரியாயின் உதவியோடு சோதனையை வெல்லலாம்.
" உன்னை என்னிடம் கையளித்தால் துன்பத்துக்கு நீ ஆளாகமாட்டாய் ". புனித ஆலனுக்கு மரியாள் சொன்ன புத்திமதி .

காலை செபம் :-
                 
                              என் இறைவா ! புனித மரியன்னையின் இருதயத்தோடு ஒன்றித்து ( இங்கு உத்தரியத்தை முத்தி செய்யவும். இது உனது அர்பணிப்பின் அடையாளம் சில பூரணபலன்கள் கூட உண்டு ) இயேசுவின் புனித இரத்தத்தை இவ்வுலகின் எல்லாப் பீடங்களிலும் உமக்கு ஒப்படைக்கிறேன். இதோடு என் ஒவ்வொரு எண்ணம், வாக்கு, செயலையும் ஒப்புக்கொடுக்கிறேன். இயேசுவின் எல்லா பலன்களையும் இன்றுபெற ஆசிக்கின்றேன். இவையெல்லாம் என்னோடு மரியாயிக்கு ஒப்புக்கொடுக்கிறேன். உமது திரு இருதய விருப்பப்படி அவைகளை உபநோகிக்கட்டும். இயேசுவின் திரு இரத்தமே எங்களை மீட்டருளும் . இயேசுவின் திரு இருதயமே, எங்கள் மேல் இரக்கமாயிரும்.  ஆமென்