கல்லறையில் சென்றவுடனே சொல்லும் ஜெபம்

சுவாமி, கிருபையாயிரும்.
கிறீஸ்துவே, கிருபையாயிரும்.
சுவாமி, தயையாயிரும் 

(1 பரலோக மந்திரம்)

கிறீஸ்துவே, எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்.

கிறீஸ்துவே, எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.

பிரார்த்திக்கக்கடவோம்

சர்வேசுரா சுவாமி! இரக்கம் புரிகிறதும், பொறுத்தல் அளிக்கிறதும், எப்பொழுதும் உமது திருவுளத்தின் இயல்பாமே.  ஆதலால் இன்று இவ் வுலகத்தினின்று அழைக்கத் தேவரீர் திருவுளமான இந்த அடியானுடைய ஆத்துமத்தைச் சத்துருக் களின் வசமளிக்காமலும் கடைசி வரை அதைக் கைவிடாமலுமிருக்க உம்மைப் பிரார்த்திக்கிறோம்.  தேவரீரை அத்தியந்த விசுவாசத்தோடு நம்பியிருக்கிறபடியால் இந்த ஆத்துமம் பாதாள வாதனையை அனுபவியாமல் நித்திய ஆனந்தத்தை அடையும்படி பரிசுத்த தூதர் அதைக் கைப்பற்றிக் கொண்டு போய் பரகதியாகிய நித்திய பேரின்ப நாட்டில் சேர்த்தருளக் கட்டளையிட்டருளும் சுவாமி. இந்த மன்றாட்டுக்களையெல்லாம் சேசுநாதருடைய திருமுகத்தைப் பார்த்துத் தந்தருளும்.

ஆமென்.