திருமேனித்துகிலையும், பாத்திர அட்டையையும் புனிதப்படுத்துதல்

குரு: ஆண்டவர் பெயராலே நமக்கு உதவி உண்டு. 

எல்: விண்ணையும் மண்ணையும் படைத்தவர் அவரே. 

குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.

எல்: உம்மோடும் இருப்பாராக.

குரு: மன்றாடுவோமாக:

என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா, உமது வல்லமை சொல்லற்கரியது. உம்முடைய அருட்சாதனங்கள் மறைவான அருஞ் செயல்களால் கொண்டாடப்படுகின்றன. இறைவனும் உம் திருமகனுமான எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் திரு உடலையும் இரத்தத்தையும் தொடவும், தாங்கவும், பாதுகாக்கவும் பயன்படுகின்ற இவற்றை  ஆசீர்வதித்துப் புனிதமாக்கியருளும். உம்மோடு தூய ஆவியின் ஒன்றிப்பில் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாகவே உம்மை மன்றாடுகிறோம். 

எல்: ஆமென்.

(குரு அவற்றின் மீது தீர்த்தம் தெளிக்கின்றார்.)