கதிர்ப் பாத்திரத்தைப் புனிதப்படுத்துதல்

 (இத்திருச்சடங்கைத் திவ்விய நற்கருணை வழிபாட்டுக்கு முன் வைத்துக்கொள்வது சிறந்ததாகும். உடனே திவ்விய நற்கருணை ஸ்தாபகம் தொடர்ந்து, வழக்கப்படி ஆசீர்வாதம் வழங்கலாம்.)

குரு: ஆண்டவர் பெயராலே நமக்கு உதவி உண்டு.

எல்: விண்ணையும் மண்ணையும் படைத்தவர் அவரே. 

குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.

எல்: உம்மோடும் இருப்பாராக.

குரு: மன்றாடுவோமாக:

எல்லாம் வல்ல இறைவா, உம் திருமகனும் எங்கள் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவின் திருவுடலைத் தாங்கி, விசுவாசிகளின் ஆராதனைக்காக வைக்கப்பட இப்பாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை ஆசீர்வதித்துப் புனிதப்படுத்தியருளும். இதன் வழியாக உம் திருமகனை இவ்வுலகில் பக்திப் பற்றுதலோடு வழிபடுவோர் அனைவரும் மறு உலகில் முடிவில்லாப் பேறுபலனைப் பெறவேண்டும் என அவர் வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல்: ஆமென்.

(குரு தீர்த்தம் தெளிக்கிறார்.)