வானம் இன்று பூமியில் வாழ்த்துச் சொல்லுது வாடுகின்ற உள்ளங்கள் மகிழ்ந்து பாடுது

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


வானம் இன்று பூமியில் வாழ்த்துச் சொல்லுது

வாடுகின்ற உள்ளங்கள் மகிழ்ந்து பாடுது

எந்தன் நாவிலே புதிய பாடல்கள்

எந்தன் வாழ்விலே புதிய பாதைகள்

ஹேப்பி கிறிஸ்மஸ் ஹேப்பி கிறிஸ்மஸ் என்று பாடுது


1. வானமே லாலலா (வானமே) நீ பாட்டுப் பாட வா

மேகமே லாலலா (மேகமே) நீ தாளம் போட வா

தென்றலே தென்றலே நீ தாலாட்ட வா

பறவையே பறவையே பாட ஆட வா

உயர்ந்த மலையே கடலின் அலையே

மலையின் சிறப்பே அலையின் வனப்பே

மகிழ்ந்து மகிழ்ந்து புகழ்ந்து புகழ்ந்து நன்றி சொல்ல வா


2. கதிரோனே லாலலா (கதிரோனே) நீ கவிதை எழுத வா

கானமே லாலலா (கானமே) நீ இசையை சொல்ல வா

மனிதனே மனிதனே உறவை வளர்க்க வா

மரங்களே மரங்களே இனிமை கொடுக்க வா

வானின் நிலவே வயலின் மலரே

நிலவின் குளிரே மலரின் அழகே