♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
ஜெபிப்பதற்கு கற்றுத்தாரும் என் இயேசையா - 4
கற்களுமே முட்களுமே என் வழியில் காண்கின்றேன்
கரமெடுத்து நடப்பிப்பாய் என் இயேசையா (2)
ஜெபிப்பதற்க்கு கற்றுத்தாரும் என் இயேசையா - 4
1. சோதனையும் வேதனையும் வாழ்வினிலே வரும்வேளை
ஆதரிக்க யாருமின்றி அருள்வேண்டி நிற்கிறேன் (2)
நீயெனக்கு சரணமென உன்னிடமே வருகிறேன் - 2
கண்ணீரைத் துடைப்பதற்க்கு எழுந்து வருவாயே - 2
2. நோய்களுமே நொடிகளும் வாழ்வினிலே வரும்வேளை
காப்பாற்ற யாருமின்றி துணையின்றி தவிக்கிறேன் (2)
உன் கைகள் பற்றி வர நான் நினைத்து அழுகிறேன் - 2
என் வாழ்வில் ஒளியேற்ற விரைவில் வருவாயே - 2