கிறிஸ்து அனைத்தையும் வெல்க கிறிஸ்து அனைத்தையும் ஆள்க

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


கிறிஸ்து அனைத்தையும் வெல்க

கிறிஸ்து அனைத்தையும் ஆள்க கிறிஸ்து என்றுமே வாழ்க (2)

வெல்க ஆள்க கிறிஸ்து வாழ்க -2


1. காலங்கள் யாவும் கிறிஸ்துவுக்கே

வானமும் வையமும் கிறிஸ்துவுக்கே (2)

அனைத்து படைப்பும் கிறிஸ்துவுக்கே

அவர் வழியாய் எல்லாம் இறைவனுக்கே -3


2. ஆற்றலும் அரசும் கிறிஸ்துவுக்கே

ஆட்சியும் மாட்சியும் கிறிஸ்துவுக்கே (2)

ஆவி உடல்பொருள் கிறிஸ்துவுக்கே

அவர் வழியாய் எல்லாம் இறைவனுக்கே -3