அர்ச். தேவ மாதாவே, இந்த திருவருகை காலத்திலே நான் உம்முடைய பாதத்தில் வேண்டிக்கொண்ட ஆயிரம் அருள் நிறைந்த மந்திரங்களை நீர் கைக்கொண்டு, அதனால் உம்முடைய திருக்குமாரனுக்கு ஒரு முடி செய்து சூட்ட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறேன். நான் ஒப்புவிக்கிற காணிக்கை வெகு கொஞ்சமுமாய், நிந்தைக்குப் பரிகாரமுமாயிருக்கிறதாலும், அது உம்முடைய திருக்கையிலிருந்து வருகிறதினால் அவருக்கு விலை யேறப்பெற்றதுமாய் பிரியமுமாயிருக்குமென்று நிச்சயத்துடனே நம்பியிருக்கிறேன். ஆகையால் இந்த முடியை நீர் சூட்டூவிக்கிறபோது, அவரைப் பார்த்து எனக்காகக் கேட்க வேண்டியது யாதெனில், உம்முடைய திருக்குமாரனுக்கு ஓர் அற்பகாரியத்திலும் நான் ஒரு குறை வருவிக்கிறதை விடவும், அவருடைய சித்தத்தை விட்டு எந்தக் காரியத்திலாகிலும் வேறே வழியாகப் போகிறதை விடவும் அவர் எனக்கு நல்ல மரணங்கொடுத்து என்னை அழைத்துக்கொள்ள வேண்டுமென்று மன்றாடுகிறேன். ஆமென்.