வாலரும் கன்னியரும் பாலரோடு விரத்தரும் சர்வேசுரனுடைய நாமத்தை ஸ்துதிக்கக்கடவார்கள்.
முதல் - பாலர்களை நமது அண்டையில் வரவிடுங்கள்,
துணை - ஏனெனில் மோட்ச இராச்சியம் அப்படிப்பட்டவர்களுடையது.
பிரார்த்திக்கக்கடவோம்
சர்வத்துக்கும் வல்லவருமாய் நித்திய சீவியருமாய் மாசற்ற கற்புடையோருக்குப் பிரசன்ன கருணையுள்ளவருமாயிருக்கிற சர்வேசுரா! தேவரீர் இந்தப் பாலனுடைய ஆத்துமத்தை இன்று மோட்ச இராச்சியத்துக்கு அழைத்தருளக் கிருபை செய்தீரே, அடியோர்களுக்கும் கிருபை செய்து நாங்கள் பாவ தோஷமின்றிச் சீவித்து, உம்முடைய உபத்திரவமான திருப்பாடுகளின் பலன் களினாலும் மோட்சபாக்கிய சம்பன்னரான அர்ச். மரியாள் முதல் சகல மோட்சவாசிகளுடைய வேண்டுதலினாலும் உம்மாலே தெரிந்துக்கொள்ளப்பட்ட சகல அறவோர்களோடு முடிவில்லாத மோட்ச இராச்சியத்தில் களிகூர்ந்திருக்க அநுக்கிரகம் செய்தருளும். இந்த மன்றாட்டுகளை எல்லாம் சேசுநாதருடைய திருமுகத்தைப் பார்த்து தந்தருளும், ஆமென்.