பாலர் அடக்கம்

இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றைக்கும் சர்வேசுரனுடைய திருநாமம் வாழ்த்தப்படக்கடவதாக.

சுவாமீ கிருபையாயிரும்,

சுவாமீ எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும். - பர. (தீர்த்தம்)

பிரார்த்திக்கக்கடவோம்

சர்வ வல்லபமும் அளவற்ற தயாளமுமுள்ள சர்வேசுரா! ஞானஸ்நானத்திலே ஞானப் பிறப்பை அடைந்து, இந்தப் பரதேசத்தை விட்டு நீங்குகிற குழந்தைகளுக்குச் சொந்தப் புண்ணியப் பேறுகள் ஒன்றுமில்லாதிருந்தாலும், தேவரீர் உடனே அவர்கள் எல்லாருக்கும் நித்திய பேரின்ப சீவியத்தைத் தந்தருளு கிறபடியால், இந்தப் பிள்ளையின் ஆத்துமத்துக்கு இன்று தந்தருளுவீர் என்று விசுவசிக்கிற அடியோர்கள் எப்பொழுதும் கன்னியாஸ்திரீயாயிருக்கிற அர்ச். மரியாயினுடைய மன்றாட்டி னாலும் சகல அர்ச்சியசிஷ்டவர்களுடைய வேண்டுதலினாலும் இவ்வுலகத்தில் பரிசுத்த இருதயத்தோடு உம்மைச் சேவிக்கவும், பரகதியில் முத்தரான மாசில்லாத குழந்தைகளோடே கூடத் தேவரீரைச் சதாகாலமும் தரிசிக்கவும் எங்களுக்குக் கிருபை செய்தருளும் சுவாமீ. இந்த மன்றாட்டுகளை எல்லாம் சேசுகிறிஸ்து நாதருடைய திரு முகத்தைப் பார்த்துத் தந்தருளும், ஆமென். 

(பின்பு தேவமாதாவின் பிரார்த்தனை சொல்லவும்)