♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
விண்மீன்கள் ஒளிர்ந்து களிக்கின்றன
விண்தூதர் மகிழ்ந்து துதிக்கின்றனர்
மண்ணுலகில் பிறக்கும் தேவனின் மைந்தன் துதிபாடும் நேரம்
இருளோ துயரோ இனிமேல் உலகில் துணிந்தே வருமா ஹோய்
1. தீர்க்கர்கள் உரைத்த வாக்குகள் நிறைவேறிடும் நாளிதே
தேவனின் திட்டம் பாரினில் செயலாகும் நல் நேரமே
விடுதலை உலகிலே வந்ததே
அழியா வாழ்வைத் தரவே மனுவுருவாய் வரும் இறைமகனே
2. கீதங்கள் ஒலிக்க மானிடர் கொண்டாடிடும் காலமே
பாவங்கள் அகல தேவனைச் சரணாகும் வேளையே
இறைவனின் கிருபையின் வரமிதே
மனுவாய் நேரில் வரவே இனி வரும் நாள் ஒரு குறையிலையே