உன்னோடு இருக்கவேண்டும் என் சுவாமி உன்னைப் போல் மாறவேண்டும்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


உன்னோடு இருக்கவேண்டும் என் சுவாமி

உன்னைப் போல் மாறவேண்டும் (2)

இரவும் பகலும் விழித்திருந்து

உன் சன்னிதி நானே தொழவேண்டும் (2)

நானுந்தன் கண்ணில் படவேண்டும்

நானுந்தன் கருணை பெறவேண்டும்

ஜெய் ஜெய் இயேசு ராஜா 4


1. இவ்வாழ்வின் பெருமையெல்லாம் மண்

தூசியாய் மாறவேண்டும் - 2

உன் வார்த்தை ஒளியில் நான் நடந்து

உனக்காக வாழவேண்டும் உன் சாட்சியாய் மாறவேண்டும் (2)

ஜெய் ஜெய் இயேசு ராஜா - 4


2. நசிந்து போகும் ஆன்மத்திற்காய்

கண்ணீருடன் நான் தொழவேண்டும் (2)

ஒவ்வொரு நாளும் மன்றாடும்

மேய்ப்பனாய் நானே மாறவேண்டும்

உந்தன் அரசு வரவேண்டும் (2)

ஜெய் ஜெய் இயேசு ராஜா - 4