ஆகமன காலத்தில் உலக இரட்சகர் பிரார்த்தனை

சுவாமி கிருபையாயிரும் - மற்றதும்.

மாமிசமான வார்த்தையே எங்களைத் தயை செய்து இரட்சியும் சுவாமி.

எல்லாவற்றையும் உண்டுபண்ணின தேவனே, எங்களைத் தயை செய்து இரட்சியும் சுவாமி.

சர்வேசுரனுடைய ஏக குமாரரே, எங்களைத் தயை செய்து இரட்சியும் சுவாமி.

அபிஷேகம் செய்யப்பட்ட ஆண்டவரான இரட்சகரே, எங்களைத் தயை செய்து இரட்சியும் சுவாமி.

ஆண்டவருடைய சர்வ வல்லமையுள்ள வாக்கே, எங்களைத் தயை செய்து இரட்சியும் சுவாமி.

காணக்கூடாத கடவுளுடைய சாயலே, எங்களைத் தயை செய்து இரட்சியும் சுவாமி.

யாக்கோபிலிருந்து உதித்த நட்சத்திரமே, எங்களைத் தயை செய்து இரட்சியும் சுவாமி.

யூதா வம்சத்தின் சிங்கமே, எங்களைத் தயை செய்து இரட்சியும் சுவாமி.

பூமியினின்று முளைத்த உண்மையே, எங்களைத் தயை செய்து இரட்சியும் சுவாமி.

வானம் பூமி பாதாளம் பணிந்தேற்றும் தேவனே, எங்களைத் தயை செய்து இரட்சியும் சுவாமி.

போதகரின் தலைவரே, எங்களைத் தயை செய்து இரட்சியும் சுவாமி.

இஸ்பிரீத்துசாந்துவாலும் அவர் வல்லமையாலும் அபிஷேகம் - செய்யப்பட்டவரே, எங்களைத் தயை செய்து இரட்சியும் சுவாமி.

எங்களுக்கு கற்பனை தரும் ஆண்டவரே, எங்களைத் தயை செய்து இரட்சியும் சுவாமி.

பூலோகத்தின் ஒளியே, எங்களைத் தயை செய்து இரட்சியும் சுவாமி.

மகா பிரகாசம் பொருந்திய விடியற்காலத்தின் நட்சத்திரமே, எங்களைத் தயை செய்து இரட்சியும் சுவாமி.

சீவியமும் உண்மையும் வழியுமாய் இருக்கிறவரே, எங்களைத் தயை செய்து இரட்சியும் சுவாமி.

உலகத்துக்கு உயிர்கொடுக்கும் தேவ அப்பமே, எங்களைத் தயை செய்து இரட்சியும் சுவாமி.

பூமியின் இராசாக்களின் அதிபதியே, எங்களைத் தயை செய்து இரட்சியும் சுவாமி.

மாசில்லாத செம்மறி புருவையே, எங்களைத் தயை செய்து இரட்சியும் சுவாமி.

எங்கள் அதிபதியும் இரட்சகருமாயிருப்பவரே, எங்களைத் தயை செய்து இரட்சியும் சுவாமி.

புது ஏற்பாட்டின் மத்தியஸ்தரே, எங்களைத் தயை செய்து இரட்சியும் சுவாமி.

விசுவாசத்தின் கர்த்தரும் முடிவுமானவரே, எங்களைத் தயை செய்து இரட்சியும் சுவாமி.

ஆண்டவரும் தேவனுமாய் இருக்கிறவரே, எங்களைத் தயை செய்து இரட்சியும் சுவாமி.

தளங்களின் ஆண்டவரே, எங்களைத் தயை செய்து இரட்சியும் சுவாமி.

மனது பொருந்தி மத்தியஸ்தரான கர்த்தரே, எங்களைத் தயை செய்து இரட்சியும் சுவாமி.

உயிருக்கும் மரணத்திற்கும் திறவுகோலை உடையவரே, எங்களைத் தயை செய்து இரட்சியும் சுவாமி.

இருக்கிறவரும் இருந்தவரும் வரப்போகிறவருமானவரே, எங்களைத் தயை செய்து இரட்சியும் சுவாமி.

வரப் போகிற யுகத்தின் ஆண்டவரே, எங்களைத் தயை செய்து இரட்சியும் சுவாமி.

எங்களுடைய நம்பிக்கையே, எங்களைத் தயை செய்து இரட்சியும் சுவாமி.

மகிமையின் இராசாவே, எங்களைத் தயை செய்து இரட்சியும் சுவாமி.

சீவியத்தின் விருக்ஷமே எங்களைத் தயை செய்து இரட்சியும் சுவாமி.

உயிருக்கு ஒளியே, எங்களைத் தயை செய்து இரட்சியும் சுவாமி.

ஆதியந்தம் இல்லாதவரே, எங்களைத் தயை செய்து இரட்சியும் சுவாமி.

சீவியர்களுக்கும் மரித்தவர்களுக்கும் நடுவரே, எங்களைத் தயை செய்து இரட்சியும் சுவாமி.

தயாபரராயிருந்து - எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும் சுவாமி.

பிதாவினிடத்தில் நீர் நித்திய சனனமானதைப் பார்த்து, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமீ.

உமது ஆகமனத்தைப் பார்த்து, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமீ.

உமது பிறப்பைப் பார்த்து, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமீ.

உமது தாழ்மையைப் பார்த்து, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமீ.

உமது வல்லமையைப் பார்த்து, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமீ.

உமது திரு மாதாவின் முகத்தைப் பார்த்து, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமீ.

உமது சம்மனசுகளைப் பார்த்து, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமீ.

உமக்குப் பிரியப்பட்ட சகலரையும் பார்த்து, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமீ.

எங்களுக்கு மோட்சப் பாக்கியத்தைத் தரவேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

மனத்தாழ்ச்சியையும் மதுர குணத்தையும் நாங்கள் அடைய வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

நாங்கள் எங்கள் சத்துருக்களைச் சிநேகிக்கும் தைரியத்தைத் தர வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

நாங்கள் எங்களையே அழிக்கச் செய்ய எங்களுக்குத் தயை புரிய வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

நாங்கள் பாம்பின் விவேகத்தையும் புறாவின் சாந்த குணத்தையும் அடைய உதவி செய்ய வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

நித்திய சீவியத்தை அடைய அநித்திய சீவியத்தை சட்டை பண்ணாதிருக்கும் வரத்தை எங்களுக்குத் தந்தருள வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

சரீரத்தை வதைக்கிறவர்களுக்குப் பயப்படாமல் ஆத்துமத்தையும் சரீரத்தையும் நரகத்தில் தள்ள வல்லமையுள்ள தேவரீருக்குப் பயந்திருக்கும் வரந்தர வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

பூமியில் பொக்கிஷந்தேடாமல் மோட்சத்தில் நித்திய பொக்கிஷம் சேர்க்கும் வரம் தரவேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

எங்கள் அயலாரைத் தகாதவகையாய்த் தீர்மானிக்காதிருக்க வரம் தரவேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

பிறர் எங்களுக்குச் செய்ய நாங்கள் விரும்பாத காரியத்தை நாங்களும் அவர்களுக்குச் செய்யாதிருக்க வரந்தரவேண்டுமென்று மன்றாடுகிறோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

உலக பெரும் பாதையை விட்டுத் தேவரீருடைய நெருக்கமான பாதையில் நடக்க வரந்தர வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

தேவரீர் எங்களுக்கு வைக்கும் மதுரம் பொருந்திய பாரத்தைப் பொறுமையோடு சுமக்க வரந்தர வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

நாங்கள் உமது கற்பனையைப் புத்தியில் வைத்துக்கொண்டு ஞானக்கனி விளைவிக்க வரந்தர வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

எங்கள் மரண நேரத்தில் நாங்கள் மிகுந்த எச்சரிக்கை யாயிருக்க வரந்தர வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

முடிவு பரியந்தம் நன்மையில் நிலைகொண்டிருக்க வரந்தர வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற - மற்றதும்

முதல்: உமது பெரும் இரக்கப்படி 

துணை: எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி

பிரார்த்திக்கக்கடவோம்

சுவாமி! ஒன்றுமில்லாமையிலிருந்து மனிதனை உண்டாக்கி அவன் ஈடேற புத்திக்கு எட்டாத இரட்சணியத்தை உமது திருக்குமாரனைக் கொண்டு உண்டு பண்ணினீரே, நாங்கள் உம்மை முழு புத்தியோடேயும் முழு மனதோடேயும், முழு நினைவோடேயும் நேசிக்கும் வரத்தைத் தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். இந்த மன்றாட்டை எங்கள் ஆண்டவராயிருக்கிற சேசுகிறீஸ்து மூலமாய் தந்தருள வேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.