என்னைக் காத்திடும் என் அன்பு தேவன்
கைவிடவே மாட்டார் என்னைக் கைவிடவே மாட்டார்
1. எப்போதும் காப்பார் இப்போதும் காப்பார்
என்னை அவர் தாங்கிக் கொள்வார்
என் முன்னும் செல்வார் என் பின்னும் வருவார்
என்னை அவர் சூழ்ந்து கொள்வார் இயேசு
2. என் பாவம் போக்கி தம் சொந்தப் பிள்ளையாய்
என்னை அவர் சேர்த்துக் கொள்வார்
என் சோகம் நீக்கி சந்தோஷம் நிறைத்து
என்னை அவர் மீட்டுக் கொள்வார் இயேசு