குழந்தை மனம் வேண்டும் இறைவா குழந்தை மனம் வேண்டும்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


குழந்தை மனம் வேண்டும் இறைவா

குழந்தை மனம் வேண்டும் (2)


1. மதம் இனம் மொழி பேதங்கள் தெரியா

குழந்தை மனம் வேண்டும்

சமத்துவம் அன்பில் நாளும் மலர்ந்திடும் குழந்தை ...

பகைமை கயமை சிறிதும் அறியா குழந்தை ...

மன்னித்து மறக்கும் பண்பொன்றே கொண்டிடும் குழந்தை ...


2. மண்ணக வாழ்வின் மாண்பினைக் காத்திட குழந்தை ...

விண்ணக வாழ்வை இகமதில் கண்டிட குழந்தை ...

வான்புகழ் இயேசுவின் நல்லாசீர் பெற்றிட குழந்தை ...

வானக அரசின் திறவுவோல் அடைந்திட குழந்தை ...