புனித சூசையப்பர் ஆலயம்
இடம்: ரத்தின நகர், பெரிய ஏரிக்கொடி, பூசாரிப்பட்டி, கட்டிநாயனப்பள்ளி (po)
கிருஷ்ணகிரி மாவட்டம் -635001
மாவட்டம்: கிருஷ்ணகிரி
மறைமாவட்டம்: தருமபுரி
மறைவட்டம்: கிருஷ்ணகிரி
நிலை: கிளைப்பங்கு
பங்கு: புனித பாத்திமா அன்னை திருத்தலம், கிருஷ்ணகிரி
பங்குத்தந்தை அருட்பணி. இசையாஸ்
உதவி பங்குத்தந்தை அருட்பணி. செபாஸ்டின்
குடும்பங்கள்: 30
அன்பியம்: 1
ஞாயிறு திருப்பலி காலை 08:00 மணி
புதன் திருப்பலி மாலை 06:00 மணி
திருவிழா: மே மாதத்தில்
மண்ணின் இறையழைத்தல்:
அருட்பணி. A. சின்னப்பன்
வழித்தடம் : கிருஷ்ணகிரியில் இருந்து சென்னை பைபாஸ் சாலையில் கட்டினாம்பட்டி பேருந்து நிறுத்தத்தை அடுத்து, இடதுபுறம் செல்லும் பூசாரிப்பட்டி ரோடு உள்ளே சென்று, பூசாரிபட்டி கிராமத்தை அடுத்து வரும் எரிக்கு வலப்புறம் பெரிய ஏரிக்கொடியில் ஆலயம் அமைந்துள்ளது.
Location: https://maps.app.goo.gl/RhJWS8YzgmYYwBRV6
வரலாறு:
இறைமக்களிடம் குறையா விசுவாசம் குவிந்தே நிற்க, செபம் ஒன்றே செயலுக்கு அடித்தளம், செயல் ஒன்றே வெற்றிக்கு வழித்தடம் என்றே முயன்று எழும்பி நிற்கின்றது புனித சூசையப்பர் ஆலயம், பெரிய ஏரிக்கொடி.
1960 ஆம் ஆண்டு முதல் 1975 ஆம் ஆண்டு வரை 7 கிறிஸ்துவ குடும்பத்தினர் பெரிய ஏரிக்கோடியில் குடியேறி வாழ்ந்து வந்தனர். முதலில் பெரிய ஏரிக்கொடியில் புனித வனத்து அந்தோனியார் பொங்கல் மட்டுமே வைக்கப்பட்டு, 1975 ஆம் ஆண்டு கிருஷ்ணகிரி பங்குத்தந்தை அருட்தந்தை ஐசக் அடிகளார் அவர்களால் சிறிய பந்தல் அமைக்கப்பட்டு, அதில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.
இதே போன்று வருடம் ஒருமுறை வனத்து அந்தோனியார் திருவிழா அன்று திருப்பலி நிறைவேற்றப்பட்டது.
சுமார் 32 ஆண்டுகளாக ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே திருப்பலி நிறைவேற்றப்பட்ட நிலையில், 1994 ஆம் ஆண்டு கிருஷ்ணகிரி பங்குத்தந்தையாக பணியாற்றிய அருட்தந்தை P. சேவியர் அவர்கள் பெரிய ஏரிக்கோடியில் உள்ள மக்களை சந்தித்து, ஓடு போட்ட ஆலயம் ஒன்றை கட்டிட ஏற்பாடு செய்தார்.
பின்னர் புதிய ஆலயம் கட்டடுவதற்கான 50 சென்ட் நிலத்தை திரு. அந்தோணிசாமி அவர்கள் தானமாக கொடுத்தார். மேலும் 73 சென்ட் நிலத்தை ஆலயத்துக்காக மறைமாவட்டம், விலைக்கு வாங்கியது. இவை அனைத்தும் ஆயர் மேதகு ஜோசப் அந்தோணி இருதயராஜ் அவர்களின் முயற்சியால், பங்கு தந்தையாக அருட்தந்தை P. சேவியர் அவர்கள் பணியாற்றிய போது வாங்கப்பட்டது.
புனித சூசையப்பர் ஆலயம் கட்ட பரிந்துரைக்கப்பட்டு, ஓடு போடப்பட்ட ஆலயத்தில், வாரம் ஒருமுறை திருப்பலி, நிறைவேற்றப்பட்டு வந்தது. ஆயர் மேதகு ஜோசப் அந்தோணி இருதயராஜ் அவர்களின் ஆசியோடு பங்கு தந்தை அருட்பணி. ஜெகராஜ் அவர்களின் முயற்சியினாலும், மறைமாவட்டம் வழங்கிய பொருள் உதவியுடனும், இறைமக்கள் வழங்கிய நிதியுதவியுடனும், புதிய ஆலயம் கட்டப்பட்டு புனித சூசையப்பருக்கு அர்ப்பணிக்கப்பட்டு, 2002 ஆம் ஆண்டு மேதகு ஆயர் ஜோசப் அந்தோணி இருதயராஜ் அவர்களால் புனிதப்படுத்தப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் புனித சூசையப்பர் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குத்தந்தையின் வழிகாட்டலில் ஆலய உறுப்பினர் திரு. ஏசுதாஸ் அவர்கள்.