874 புனித செபஸ்தியார் ஆலயம், முத்துலாபுரம்

       


புனித செபஸ்தியார் ஆலயம் 

இடம்: முத்துலாபுரம், பட்டர்புரம் அஞ்சல், நாங்குநேரி வழி, 627108

மாவட்டம்: திருநெல்வேலி

மறைமாவட்டம்: தூத்துக்குடி

மறைவட்டம்: வடக்கன்குளம்

நிலை: கிளைப்பங்கு

பங்கு: கிறிஸ்து அரசர் ஆலயம், நாங்குநேரி

பங்குத்தந்தை: அருட்பணி. டென்சில் ராஜா

குடும்பங்கள்: 152

அன்பியங்கள்: 2

ஞாயிறு காலை 10:00 மணிக்கு திருப்பலி

வெள்ளி மாலை 06:30 மணிக்கு ஜெபமாலை, 07:00 மணிக்கு திருப்பலி

மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை மாலை 06:15 மணிக்கு ஜெபமாலை, 06:40 ஆலயத்தைச் சுற்றி சப்பர பவனி, குணமளிக்கும் வழிபாடு, நற்கருணை ஆசீர், தொடர்ந்து சைவ அசன விருந்து. 

திருவிழா: தை மாதம் 15-ம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பித்து பத்து நாட்கள் (ஜனவரி மாதம் கடைசி வாரத்தில் ஆரம்பித்து, பிப்ரவரி மாதத் தொடக்கத்தில் நிறைவு பெறும்)

மண்ணின் இறையழைத்தல்:

அருட்சகோதரி. M. அருள் அபிஷா, அடைக்கலமாதா சபை

வழித்தடம்: வள்ளியூர் -நாங்குநேரி -வாகைக்குளம். வாகைக்குளத்திலிருந்து வலதுபுறமாக 5கி.மீ தொலைவில் முத்துலாபுரம் அமைந்துள்ளது.

மதுரை -திருநெல்வேலி -நாங்குநேரி -வாகைக்குளம். இங்கிருந்து இடதுபுறமாக 5கி.மீ தொலைவில் முத்துலாபுரம் அமைந்துள்ளது.

Map location: https://g.co/kgs/1HQryj

வரலாறு

நெல்லை மாவட்டம் நம்பி ஆற்றின் கரையோரம் விவசாயம், பனை தொழிலும் கொண்ட சிறிய ஊர்தான் முத்துலாபுரம். ஊரை சுற்றி கிராமங்களில் எல்லாம் இந்து சகோதரர்கள் தான் வசிக்கிறார்கள். இருந்தும் சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் முன்னோர்களால் சிறிய குடிசை கோயிலாக தொடங்கப்பட்டதுதான் முத்துலாபுரம் புனித செபஸ்தியார் கோயில்.

அந்த காலத்தில் போக்குவரத்துக்கு எந்த வசதிகளும் கிடையாது. நடந்துதான் போக வேண்டும். குருக்கள் கூட மாட்டு வண்டியில் தான் வந்து போய் இருந்தார்கள். பக்கத்து ஊர் இந்து சமய சகோதரர்கள் கூட ஆலயத்துக்கு வந்து காணிக்கை செலுத்தி வணங்கிப் போவார்கள். அப்போதிருந்தே கோயில் புதுமைகள் நடந்து வருகிறது. பிறகு காலபோக்கில், குடிசை கோயில் மாற்றப்பட்டு, 1805 ஆம் ஆண்டு சிறிய காரை கட்டிடமானது. வெளியூர் மக்கள் வரத்து அதிகமாகவே, பின்னர் கோயில் இடவசதிக்காக இருபக்கமும் கொஞ்சம் இடித்து சிலுவை கோயிலாக ஆக்கினார்கள்  முன்னோடிகள். இது அதிக நாட்கள் நீடித்தது. மக்கள் கேட்ட மன்றாட்டுகள் எல்லாம் நிறைவேறியதால், பக்கத்து ஊர்களில் இருந்து மக்கள் வரத்து அதிகரித்ததன் காரணமாக இடநெருக்கடி ஏற்பட்டது. 

ஆகவே சுமார் 1960 ஆம் ஆண்டு காலகட்டத்தில் தற்போது உள்ள ஆலயம் கட்டப்பட்டது. சுமார் 1980 காலகட்டத்தில் ஆலய முன்புற கோபுரம் கட்டப்பட்டுள்ளது. 

தொடக்கத்தில் அணைக்கரை பங்கிலிருந்து குருக்கள் வந்து திருப்பலி நிறைவேற்றி வந்தனர். 1937 ஆம் ஆண்டில் நாங்குநேரி தனிப்பங்கான போது, முத்துலாபுரம் புனித செபஸ்தியார் ஆலயமானது, நாங்குநேரியின் கிளைப் பங்காக மாற்றப்பட்டது.

கல் கொடிமரம்:

1938 ஆம் ஆண்டு பக்தர் ஒருவர் காணிக்கையாக வழங்கிய ஒரே கல்லில் செதுக்கப்பட்ட கல்கொடிமரம் நிறுவப்பட்டது.

கெபி மற்றும் சிலுவைப்பாதை நிலைகள்:

1. புனித மிக்கேல் அதிதூதர் பழைய கெபியானது முத்துலாபுரம் இறைமக்களின் ஒத்துழைப்புடன் விரிவாக்கம் செய்து புதுப்பிக்கப்பட்டு, 30.11.2007 அன்று பங்குத்தந்தை அருட்பணி.‌ V. V. சாலமோன் அவர்களால் அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது.

2. புனித அந்தோனியார் கெபி முத்துலாபுரம், மீனாட்சிநாதபுரம் மக்களின் ஒத்துழைப்புடன், பங்குத்தந்தை அருட்பணி.‌ சி. மணி அந்தோணி பணிக்காலத்தில் கட்டப்பாட்டு, 05.02.2018 அன்று பேரருள்பணி.‌ கிருபாகரன் அவர்களால் அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது.

3. பங்குத்தந்தை அருட்பணி. சி. மணி அந்தோணி பணிக்காலத்தில், சிலுவைப்பாதை தலங்கள் அழகுற கட்டப்பட்டு, மேதகு ஆயர். யுவான் அம்புரோஸ் அவர்களால் 30.12.2016 அன்று அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது.

வடக்கு முத்துலாபுரத்தில் புனித ஸ்நாபக அருளப்பர் ஆலயம் உள்ளது.

சைவ (Vegetarian) திருத்தலம்:

ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளிக்கிழமை மாலையில் சிறப்பு வழிபாடுகளைத் தொடர்ந்து சைவ அசன விருந்து வழங்கப்படுகிறது. குறிப்பாக பல ஆண்டுகளுக்கும் மேலாக இந்த சைவ விருந்து மாதந்தோறும் நடைபெற்று வருகிறது. சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் விருந்தில் கலந்து கொள்கின்றனர். அதிலும் குறிப்பாக இந்த விருந்திற்குத் தேவையான நிதியுதவியை, புனித செபஸ்தியார் பக்தர்கள் பல மாதங்களுக்கு முன்னரே முன்பதிவு செய்து வழங்கி வருகின்றனர். 

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: ஆலய பொருளாளர் திரு. S. மகான் அந்தோணி அவர்கள் மற்றும் ஆலய இளையோர்.