859 தூய மிக்கேல் அதிதூதர் ஆலயம், மேல துவரைகுளம்

  


தூய மிக்கேல் அதிதூதர் ஆலயம்

இடம்: மேல துவரைகுளம், பத்மநேரி அஞ்சல், 627502

மாவட்டம்: திருநெல்வேலி

மறைமாவட்டம்: தூத்துக்குடி

மறைவட்டம்: வடக்கன்குளம்

நிலை: கிளைப்பங்கு

பங்கு: புனித ஜெபமாலை அன்னை ஆலயம், வடக்கு மீனவன்குளம்

பங்குத்தந்தை அருட்பணி. அருள்மணி

குடும்பங்கள்: 24

ஞாயிறு திருப்பலி காலை 10:15 மணி

திருவிழா: மே மாதம் 03ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை. 

வரலாறு:

மேல துவரைக்குளம் தூய மிக்கேல் அதிதூதர் ஆலய வரலாறு 1986 ஆம் ஆண்டிலிருந்து தொடங்குகிறது. இவ்வூரைச் சேர்ந்த திரு. தங்க துரை (ஆசிரியர்) கத்தோலிக்க கிறிஸ்தவராக மாறிய பின்னர், 100 சதுர அடியில் ஓடு வேயப்பட்ட கூரையுடன் கூடிய தூய மிக்கேல் அதிதூதர் ஆலயத்தை1986 ஆம் ஆண்டு கட்டினார். இந்த கிராமத்தில் உள்ள பெரும்பாலான நிலங்கள் வேறு இடத்தில் வசிக்கும் ஒரு குறிப்பிட்ட பண்ணையாருக்குச் சொந்தமானது. 

1986 ஆம் ஆண்டு 8 குடும்பங்களைச் சேர்ந்த 36 உறுப்பினர்கள் அருட்பணி. என். எஸ். பன்னீர் செல்வம் அவர்களிடம் திருமுழுக்கு பெற்றனர்.

மரத்தாலான கொடிமரம் நிறுவப்பட்டு, ஜூன் 23 முதல் ஜூலை 2 வரை திருவிழா கொண்டாடப்பட்டது.

குடும்பங்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்ததால், அருட்பணி. ஜெரோசின் A. கற்றார் பணிக்காலத்தில் புதிய ஆலயம் கட்ட முயற்சி மேள்கொள்ளப்பட்டு, நிலம் உரிமையாக்கப்படாததால் திட்டம் கைவிடப்பட்டு, 1998 ஆம் ஆண்டு ஆலயம் சற்று விரிவாக்கம் செய்யப்பட்டது.  அருட்பணி. ஜெரோசின் A. கற்றார், மற்றும் திரு. தங்க துரை ஆகியோரின் முயற்சியால், திருவிழா மே மாதம் 03 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. 

2003 ஆம் ஆண்டு அருட்பணி. விக்டர் சாலமன் பணிக்காலத்தில் அவரது முயற்சி மற்றும் ஆசிரியர் தங்கதுரை ஆகியோரின் முயற்சியால் மக்களின் ஒத்துழைப்பு மற்றும் நிதியுதவியுடன் புதிய ஆலயம் கட்டப்பட்டு, கூரை கல்நார் (ஆஸ்பெஸ்டாஸ்) வேயப்பட்டது. 

மேலும் மரத்தாலான கொடி கம்பத்திற்கு பதிலாக, 30 அடி உயரமுள்ள இரும்பு கம்பம் அமைக்கப்பட்டது.  சுற்றுச்சுவர் கட்டப்பட்டது.  வளாகத்தில் ஆழ்துளை கிணறு தோண்டி மரங்கள் நடப்பட்டன.

2014 முதல், அருட்பணி. ஜேசு நசரேன் அவர்களின் முயற்சியின் காரணமாக, வாரந்தோறும் திருப்பலி வழங்கப்படுகிறது.  

2021 ஆம் ஆண்டில், மாதா கெபி அடித்தளப் பணிகளை மக்கள் தொடங்கினர். ஆனால் இன்னும் பணிகள் முடிவடையவில்லை. 

இவ்வாலய அடிப்படைத் தேவைகள் நிறைவேறவும், ஆலயம் மென்மேலும் வளரவும் இறைவனிடம் ஜெபிப்போம்...

வழித்தடம்: களக்காடு -திருநெல்வேலி வழித்தடத்தில், பத்மநேரி -பொத்தைசுத்தி -மேல துவரைகுளம்.

Location map: https://g.co/kgs/kT31od

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குத்தந்தை அருட்பணி. அருள்மணி மற்றும் ஆலய நிர்வாகி.