பூலோகத்திற்கு ஆண்டவளாயிருக்கிற அர்ச். தேவமாதாவே, உம்முடைய திருக்குமாரனாகிய சேசுநாதரை யூதர்கள் கொல்ல வேண்டுமென்று நிச்சயம் செய்து, அவருடைய திருத்தோளின் மேலே பாரமான சிலுவைமரத்தைச் சுமத்திக் கபால மலை மட்டும் அவரைத் தள்ளிக்கொண்டு போகிறபோது நீருங்கூடத் துக்கப்பட்டு அழுதுகொண்டு போனீரே, அந்தத் துக்கத்தைப் பார்த்துப் பாவிகளாயிருக்கிற நாங்களும் எங்களுக்கு வருகிற துன்ப ஆக்கினையான சிலுவையை நல்ல மனதோடு சுமந்துகொண்டு அவர் திருவடியைப் பின்பற்றி நடக்கத் தக்கதாக உம்முடைய திருக்குமாரனை வேண்டிக்கொள்ளும். - பத்து அருள். ஒரு திரி.
அப்போஸ்தலர்களுக்குள்ளே பிரதான அப்போஸ்தலர் களாயிருக்கிற அர்ச். இராயப்பரே, சின்னப்பரே, நாங்கள் எத்தனைப் பாவிகளாயிருந்தாலும் நாங்கள் வேண்டிக்கொண்ட இந்தப் பத்து மணிச் செபத்தையும் அர்ச். தேவமாதாவின் திருப் பாதத்திலே உங்களுடைய தோத்திரங்களோடேகூட ஒன்றாகக் கூட்டிப் பாதகாணிக்கையாக வைத்து உங்களைப் பிரார்த்தித்துக் கொள்ளுகிறோம். - ஒரு பர.