3-ஆம் மகிமைத் தேவ இரகசியம்

தேவ நன்மைகளால் நிறைந்தவளுமாய் வானோர்களுக்கு அரசியுமாயிருக்கிற அர்ச். தேவமாதாவே, உம்முடைய திருக் குமாரனாகிய சேசுநாதருடைய சீடர்களோடு நீர் தியானத்தில் இருக்கிறபோது அக்கினி நாக்கு ரூபமாய் இஸ்பிரீத்துசாந்து இறங்கிவந்து, உமது இருதயத்தையும் சீடர்கள் இருதயத்தையும் அருள் வரங்களினாலே நிரப்பினதினால் அத்தியந்த சந்தோஷ மகிமை அடைந்தீரே, அந்த மகிமையைப் பார்த்து இஸ்பிரீத்துசாந்துவின் வரப்பிரசாதத்தை நாங்கள் அடைந்து தேவ சித்தத்தின் படியே நடக்கத்தக்கதாக உம்முடைய திருக்குமாரனை வேண்டிக்கொள்ளும். - பத்து அருள். ஒரு திரி.

அர்ச். இரஃபாயேல் என்கிற சம்மனசானவரே, நாங்கள் எத்தனைப் பாவிகளாயிருந்தாலும் நாங்கள் வேண்டிக்கொண்ட இந்தப் பத்து மணிச் செபத்தையும் அர்ச். தேவமாதாவின் திருப் பாதத்திலே உம்முடைய தோத்திரங்களோடேகூட ஒன்றாகக் கூட்டிப் பாதகாணிக்கையாக வைத்து உம்மைப் பிரார்த்தித்துக் கொள்ளுகிறோம். - ஒரு பர.