கன்னிகையாயிருக்கிற அர்ச். தேவமாதாவே, உமது நேசத்தால் உமக்குப் பந்துவாயிருக்கிற எலிசபெத்தம்மாளை சந்திக்கப் போனபோது சர்வேசுரன் அவள் வீட்டிலே செய்த தயையைக் கண்டு அத்தியந்த சந்தோஷமானீரே, அச் சந்தோஷத்தைப் பார்த்து, உலகீயல் சந்தோஷத்தை நாங்கள் சட்டை செய்யாமல் ஞான சந்தோஷத்தின் இன்பமான இரசத்தை வருந்தித் தேடி அடையத்தக்கதாக உம்முடைய திருக்குமாரனை வேண்டிக் கொள்ளும். பத்து அருள். ஒரு திரி.
அர்ச். கபிரியேல் என்கிற சம்மனசானவரே, நாங்கள் எத்தனைப் பாவிகளாயிருந்தாலும் நாங்கள் வேண்டிக்கொண்ட இந்தப் பத்து மணிச் செபத்தையும் அர்ச். தேவமாதாவின் திருப்பாதத்திலே உம்முடைய தோத்திரங்களோடேகூட ஒன்றாகக் கூட்டிப் பாதகாணிக்கையாக வைத்து உம்மைப் பிரார்த்தித்துக் கொளளுகிறோம். ஒரு பர.