நரகம் : ( சில கேள்விக்கான விளக்கங்கள்) :

ஆண்டவர் இயேசுவின் வார்த்தையை மீறீ யாரும் தப்பரையை போதிக்க முடியாது.. அந்த அருட்தந்தை உத்தரிக்கும் ஸ்தலத்தை தவறுதலாக நரகம் என்று சொல்லியிருக்கலாம். நரகம் என்பது முடிவில்லாதது.. அதில் விழுந்தவர்கள் யாரும் அதிலிருந்து தப்ப முடியாது…

ஆனால் அங்கு செல்லாமல் நம்மைக் காப்பாற்றிக் கொள்ள கத்தோலிக்க திருச்சபை எத்தனையோ அருட்சாதனங்களை நமக்கு தந்து காப்பாற்றி வருகிறது...

அதில் பாவசங்கீர்த்தனம் என்னும் தெய்வீக அருட்சாதனம் மிக மிக முக்கியம். நாம் செய்த பாவத்திற்கு மனஸ்தாபப்பட்டு பாவசங்கீர்த்தனம் செய்தால் கடவுள் எப்பேர்பட்ட பாவத்திற்கும் மன்னிப்பு தருவார்..மேலும் நம் தெய்வீக திருப்பலி, ஜெபமாலை, உத்தரியம் என்று எத்தனையோ வாய்ப்புக்களை நம் தாய் திருச்சபை தந்துள்ளது. சாவான பாவத்திலிருந்தும், அற்ப பாவத்திலிருந்தும் நம்மை பாதுகாப்போம்.. முடிந்தவரை பாவ சந்தர்ப்பங்களை தவிர்த்து பாவம் செய்யாமல் இருப்போம்..

இதோ நரகம் குறித்து நம் தேவனின் இருபுறம் தீட்டப்பட்ட கூர்மையான வார்த்தைகளுள் ஒன்று…

பின்னர், இடப்பக்கம் உள்ளோரை நோக்கி, 'சபிக்கப்பட்டவர்களே, என்னை விட்டு அகன்று போங்கள். அலகைக்கும் அதன் தூதருக்கும் ஏற்பாடுசெய்துள்ள முடிவில்லா நெருப்புக்குள் செல்லுங்கள். மத்தேயு 25:41

எலியாஸ், ஏனோக் இறைவாக்கினர்கள் : மண்ணிலிருந்து இவர்கள் மறிக்காமல் எடுத்துக்கொள்ளப்பட்டது உண்மை.. ஆனால் அவர்கள் எங்கு தங்க வைக்கப்பட்டுள்ளார்கள் என்பது கடவுளுக்கு மட்டுமே தெறிந்த இரகசியம்..

ஆதாரம் : ஆதியாகமம் 5 :24 (21-24), 2 அரசர் 2: 11 (1-11)

இவர்கள்தான் அவர்களா? மீண்டும் வருவார்களா? திருவெளிப்பாடு 11:3 (1-3)

நம் பரிசுத்த தேவமாதா : நம் பரிசுத்த மாதாவிற்கு மறிக்காமல் ஆன்ம சரீரத்தோடு பரலோகம் செல்ல சுதனாகிய சர்வசுவரனே வாய்ப்பு கொடுத்தும், நம் தெய்வீகத்தாய் புண்முறுவலோடு தம் விருப்பத்தை தெறிவித்தார்..

தன் ஒரே மகன் இயேசு சுவாமி இந்த உலகத்தை மீட்க எத்தனையோ பாடுகள்பட்டு முள்முடி தாங்கி, சிலுவையில் அறையப்பட்டு தன் இன்னுயிரை இழந்து அதாவது மரணவேதனையை அனுபவித்து உலகை மீட்டிருக்க அவரின் அன்பான தாய் மரிக்காமல் பரலோகம் செல்ல அவரது ஆழ்ந்த தாழ்ச்சி சம்மதிக்குமா என்ன? தூய தமத்திருத்துவம் நம் பரிசுத்த மாதாவால் எத்தனையோ அளவில்லா ஆனந்தம் அடைந்திருந்தாலும் அவர்களை தீரா மகிழ்ச்சியில் ஆழ்த்தியது அன்னையின் இந்த முடிவே…

ஆம் நம் தேவ தாய் மரித்தார்கள்... ஆனால் சர்வசுவரனையே தாங்கிய தாயின் திருவுடலை மண்ணுக்கா கொடுப்பார்.. மரித்த மூன்றாம் நாள் நம் இயேசு தெய்வம் அவரே பரலோகத்தில் இருந்து எண்ணற்ற வானதுாதர்களோடு இறங்கி வந்து தன் தாயை உயிர்ப்பித்து தன்னோடு அழைத்து சென்றார்...

ஆதாரம் : “ Mystical of God “ (கடவுளின் மறைந்த நகரம் “, கடவுள்-மனிதனின் காவியம்

குறிப்பு : யாராவது…எங்காவது..ஏதாவது.. தப்பரையை தவறுதலாகக் கூட சொன்னால் தயவு செய்து நம்ப வேண்டாம்.. நம் திருச்சபை ஒரு முறை அறிவித்த வேத சத்தியத்தை மாற்றி இன்னொரு முறை அந்த திருச்சபையே மாற்றி அறிவிக்க நம் கடவுளால் அதிகாரம் கொடுக்கப்படவில்லை..

ஆதார இறைவசனம் : கலாத்தியர் 1:8

“ஆனால், நாங்கள் அறிவித்த நற்செய்தியினின்றும் வேறான ஒன்றை, நாங்களோ, விண்ணிலிருந்து வந்த ஒரு தூதரோ, யார் வந்து அறிவித்தாலும், அவன் சபிக்கப்படுக!”

அதனால் எதையாவது கேட்டுவிட்டு அதிர்சியாகாமல் நம் கத்தோலிக்க விசுவாசத்தில் உறுதியாக இருப்போம்..

அளவு கடந்த கருணையுள்ள கடவுள் கண்டிப்பானவரும் கூட என்பதை மறக்காமல் நாம் உயிரோடு இந்த உலகில் வாழும் வரை அவரது இரக்கத்தையும், அன்பையும், ஆறுதலையும் தேடுவோம்..நாடுவோம்… ஏனென்றால் அது,

அளவில்லா அன்பு…அதிசய அன்பு..

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !