புனிதர்கள் நமக்கு ரோல் மாடல்கள் :

மெய்யான பன்பு நிறைவினாலும், சந்நியாச ஒழுக்கத்தினாலும் பிரகாசித்த அர்ச்சிஷ்ட்டவர்களுடைய உத்தம மாதிரிகைகளை கண்ணுற்று பார்த்தால் நாம் செய்வது சொற்பமென்றும் ஏறக்குறைய பூஜ்ஜியமென்றும் அறிவோம். ஐயோ அவர்களுடைய ஜீவியத்தையும், நம்முடைய ஜீவியத்தையும் இனையிட்டுப்பார்த்தால் எவ்வளவோ வித்தியாசம். அர்ச்சிஷ்ட்டவர்களும் கிறிஸ்து நாதருடைய நேசர்களும் பசியிலும், தாகத்திலும், குளிரிலும், உடை வறுமையிலும், பிரயாசையிலும், இளைப்பிலும், விழிப்பிலும், உபவாசத்திலும், ஜெபத்திலும், தியானத்திலும் திரளான இடையூறுகளிலும், அவமானங்களிலும் ஆண்டவருக்கு ஊழியம் பண்ணினார்கள்.

ஓ! அப்போஸ்தலர்கள், வேத சாட்சிகள், ஸ்துதியர்கள், கன்னியர்கள், இன்னும் கிறிஸ்து நாதரைப் பின் செல்ல மனதாயிருந்த மற்றெல்லாரையும் எத்தனையோ கடின உபத்திரவங்களை அனுபவித்துள்ளார்கள். ஏனெனில் நித்திய ஜீவியத்தடையும் பொருட்டாக, இவ்வுலகில் தங்கள் உயிரைப் பகைத்தார்கள்..

ஓ அர்ச்சிஷ்ட்டவனவாசிகள் எத்தனையோ கஷ்ட்டத்திற்கும், கொடூரத்திற்குறியதுமான வாழ்க்கை நடத்தி வந்தார்கள்.! எவ்வளவோ காலம் கொடிய தந்திர சோதனைகளைச் சகித்து வந்தார்கள்.!.எத்தனையோ முறை சத்துருவால் (பிசாசுகள்) தொந்தரவுப்பட்டார்கள். அவர்கள் இடைவிடாமல் சர்வேசுவரனை வேண்டிக்கொண்ட ஜெபங்கள் எத்தனை! அவ்வளவு கடினமாய் உபவாசம் பிடித்தார்கள் ! சாங்கோபாங்கத்தில் (புண்ணியங்களில்) மேலோங்க எவ்வளவோ சுறுசுறுப்பு உருக்கமுள்ளவர்களாயிருந்தார்கள் ! தங்கள் துர்க்குணங்களை அடக்குவதற்கு எத்தனையோ பலமாய் யுத்தஞ் செய்தார்கள் !

சர்வேசுவரன் மட்டில் எவ்வளவோ சுத்தமானதும் நேர்மையானதுமான கருத்துக் கொண்டிருந்தார்கள்.

பகலில் உழைத்து வேலை செய்வார்கள் : இரவில் நெடுநேரம் ஜெபத்தியானம் செய்வார்கள். வேலை செய்யும்போது மனத்தியானத்தை கொஞ்சமாவது விட்டவர்களல்லர். தங்கள் காலங்கள் எல்லாம் பிரயோசனமாய் செலவளிப்பார்கள். சர்வேசுவரனை சேவிக்கிறதில் செலவழித்த ஒவ்வொரு மணி நேரமும் அதிக விரைவாய் கடந்து போகிறதென்றும் எண்ணுவார்கள். தியான யோகத்தில் அவர்களுக்கு உண்டாகிற பேரின்பத்தால் சரீர பலத்திற்கு அவசியமான அன்னபானத்தை முதலாய் மறந்து விடுவார்கள்.

ஆஸ்தி, பட்டம், கீர்த்தி (புகழ்), சிநேகிதர், பந்துக்கள் (சொந்தங்கள்?), முதலிய சகலத்தையும் வெறுத்து விட்டிருந்தார்கள். உலகத்திற்கு சம்பந்தமான யாதொன்றையும் வைக்காதிருக்க ஆசிப்பார்கள். உயிரைக் காப்பாற்றுவதற்கு அவசியமானதை மிகச் சொற்பமாய் உண்பார்கள். சரீரத்தின் தேவைகளுக்கு பணிய வேண்டியதை நினைத்து வருந்துவார்கள்.

ஆனதால் அவர்கள் உலக சம்பந்தங்களில் தரித்திரராய் இருந்தார்கள். ஆனால் வரப்பிரசாதங்களிலும், புண்ணியங்களிலுமோ மெத்த செல்வந்தவர்கள்.

புறத்தியில் (வெளியில்) அவர்களுக்கு அநேக காரியங்கள் குறைபட்டன. ஆனால் உள்ளத்திலோ வரப்பிரசாதத்தினாலும், தேவ ஆறுதலினாலும் போஷிக்கப்பட்டார்கள் ( அர்ச்சிக்கப்பட்டார்கள்)

நன்றி : அர்ச்.லூயிஸ் மரிய மோன்போர்ட் எழுதிய அன்னை மாமரியாளுக்கு முழு அர்ப்பண 33 நாட்கள் தயாரிப்பு புத்தகம். தொடர்புக்கு சகோ.பால்ராஜ், மாதா அப்போஸ்தலர்கள் சபை, தூத்துக்குடி. Ph: Ph. 0461-2361989, 9487609983, மேலும் சகோ.ஜேசுராஜ் Ph: 9894398144

சிந்தனை : புனிதர்களாக வாழ ஒவ்வொருவருக்கும் நம் ஆண்டவர் அழைப்பு விடுத்துள்ளார். எந்த நிலையிலும் புனிதர்களாக நம்மால் வாழ முடியும். துறவறத்திலும், இல்லறத்திலும் புனிதர்களாக வாழ முடியும். அரசர்கள் முதல் இல்லறவாசிகள், சிறுவர்கள், குழந்தைகள் வரை புனிதர்களாயுள்ளார்கள். போப் ஆண்டவர் முதல் குருக்கள், கன்னியாஸ்திரிகள், டீக்கன் வரை புனிதர்களாயுள்ளார்கள்...

மிகவும் அதிபரிசுத்தமான கடவுள் நம் ஆன்மாக்களில் புனிதத்தை எதிர்பார்க்கிறார்..அதில் வாழ ஆசிக்கிறார்.. நாம் புனிதர்களாக மாற முதலில் புனிதர்கள் வாழ்க்கை வரலாற்று நூல்களை படிக்க வேண்டும் அவைகள் நமக்கு நல்ல முன்மாதிரிகைகளாக இருக்கும்... புனிதர்களாக மட்டுமல்ல நல்ல மனிதர்களாக வாழவும் அவர்கள் வாழ்க்கை நமக்கு உதவும்..

குழந்தைகளுக்கு, சிறுவர்களுக்கு அவர்கள் வாழ்க்கை வரலாறுகளை சொல்லிக்கொடுக்க வேண்டும்... குழந்தைகளுக்கு மாடர்ன் பெயர்களை வைப்பதற்கு பதிலாக புனிதர்கள் பெயர்களை வையுங்கள்.. அவர்கள் பிறந்த அன்று எந்த புனிதரின் நினைவு நாளோ அவர் பெயரை விடுங்கள். சும்மா பெயரோடு சேர்த்து வைத்துவிட்டு அழைக்க மாடர்னை தேடாதீர்கள். மாடர்ன் நம்மையும், நம் குழந்தைகளையும் மோட்சத்திற்கு கூட்டிச் செல்லாது...

அனைத்துப் புனிதர்களே !! எங்களுக்குக்காக வேண்டிக்கொள்ளுங்கள்... உங்களைப்போல் வாழ எங்களுக்கு கற்றுத்தாருங்கள்...

இயேசுவுக்கே புகழ் !!! மரியாயே வாழ்க !!!