உண்மைக்கு சாட்சியம் கூறுவதே எனது பணி. இதற்காகவே பிறந்தேன் இதற்காகவே உலகிற்கு வந்தேன். உண்மையைச் சார்ந்தவன் எவனும் எனது குரலுக்கு செவிமடுக்கிறான்

உண்மைக்கு சாட்சியம் கூறுவதே எனது பணி. இதற்காகவே பிறந்தேன் இதற்காகவே உலகிற்கு வந்தேன். உண்மையைச் சார்ந்தவன் எவனும் எனது குரலுக்கு செவிமடுக்கிறான் “ – அருளப்பர் 18 : 37

எவ்வளவு தெளிவான உண்மையான திடமான பதில்....

பிலாத்துவிற்கு உண்மை என்றால் என்னவென்று தெறியவில்லை.. அதனால்தான் கேட்கிறான்.

“ உண்மையா அது என்ன ? “ – அரு 18: 38..

கடவுள் குற்றமற்றவர் என்பது அவனுக்குத் தெறியும். யூதர்கள் அவரைக் கையளியத்தது பொறாமையால்தான் என்பதும் அவனுக்குத் தெறியும். அடிக்கடி “ இவனிடம் குற்றம் ஒன்றும் காணவில்லை “ என்றும் சொல்லிக்கொள்கிறான். பின்பு ஏன் ஆண்டவருக்கு மரணதண்டனை கொடுத்தான். ஏனென்றால் உண்மை என்றால் என்ன என்பது அவனுக்குத் தெறிந்தும் தெறியாதது போல் நடிக்கிறான். எது நீதி ? எது செய்யப்பட வேண்டும் என்று தெறிந்தும் மக்களுக்கு பயப்படுகிறான்.

ஏன் அவன் பதவியைக் காப்பாற்றிக்கொள்ள உண்மைக்கு பதிலாக பொய்யை வைத்துக்கொள்கிறான்...

அவன் முதலில் கடவுளுக்கு பயந்தான்... அவரை விடுதலை செய்ய வழி தேடினான்.. ஆனால் அவனால் அதில் உறுதியாக நிற்க முடியவில்லை.. பதவிக்காக.. தன்னுடைய அதிகாரத்தை விட மனமில்லாமல் அதை துஷ்பிரயோகப்படுத்தி உண்மையைத் தூக்கி எரிந்து பொய்யை அணிந்து கொண்டான்.. பணம், பதவி, அதிகார சுகத்திற்காக பரலோக பொக்கிஷத்தை இழந்தான்..

இன்று நம்மில் அந்த பிலாத்தைப்போல் எத்தனை பேர் இருக்கிறோம்,

1. எத்தனை பேரை தவறாக தீர்ப்பிட்டுள்ளோம்.

2. அவர் குற்றமற்றவர் என்று தெறிந்தும் நம் தாய்க்காக அல்லது மனைவிக்காக அல்லது உறவினர்களுக்காக “ அவன்(ள்) செய்தான்(ள்) என்று பொய்யாக தீர்ப்பிட்டிருக்கிறோம்.

3. பணத்திற்காக, பதவிக்காக, வேலை உயர்வுகளுக்காக, சுய லாபத்திற்காக நம் சகோதரர் மேல் உள்ள தவறான குற்றச்சாட்டுகளுக்கு பணிந்திருப்போம்.

4. உண்மையை உரக்க கூற வேண்டிய இடத்தில் கூறாமல் அவர் என்ன நினைப்பார்? இவர் என்ன நினைப்பார் என்று பேச வேண்டிய இடத்தில் பேசாமல் முகத்தாட்யன்யம் பார்த்து பேசாமல் இருந்திருப்போம்.

5. பயத்தினால் உண்மையை மூடி மறைத்திருப்போம்..

6. அவன் நல்லவன்.. அவள் நல்லவள் என்று நன்றாகத் தெறிந்திருந்தும் அவர்கள் பக்கம் நில்லாமல்.. பண படை பலத்தில் இருப்பவர்கள் தீயவர்கள் என்று தெறிந்திருந்தும் அவர்கள் பக்கம் இருந்து ஜால்ரா போட்டிருப்போம்..

இன்னும் எத்தனையோ சொல்லிக்கொண்டே போகலாம்.. நாம் பல நேரங்களில் பிலாத்துவாகத்தான் இருந்து கொண்டிருக்கிறோம்..

உண்மைக்காக பல இன்னல்களை அனுபவித்து தன் கடைசி சொட்டு இரத்தம் சிந்திய நம் பரிசுத்த தேவனைப்போல் நாம் நடக்கிறோமா?

உண்மையை எடுத்து சொன்னதிற்காக..போலிகளை சுட்டிக்காட்டியதிற்க்காக தன் தலைபோனாலும் பரவாயில்லை.. என்று கடைசி வரை அதில் நிலைத்து நின்ற புனித ஸ்நாபக அருளப்பரைப்போல் வாழ்கிறோமா?

உண்மை எப்போதும் தனித்துதான் நிற்கும் நம் ஆண்டவர் இயேசுவைப்போல்.. கூட்டமும் கும்பலும் பொய்யின் பக்கம்தான் நிற்கும்.. அன்று நின்றதைப்போல்.. பொய்யர்கள் எதை விரும்புவார்கள் என்பதற்கும் சாட்சி அன்று அவர்கள் கேட்டது உண்மையின் ஆண்டவரை அல்ல கொலைகார பரபாசையே கேட்டார்கள்…

பொய்களும் போலிகளும் சமையத்தில் விஸ்வரூபம் எடுத்து சர்வ வல்லமை உள்ளது போல் கோலியாத்தைப்போல் தோன்றும்.. ஆனால் உண்மைகள் சின்னஞ்சிறு இளைஞனான தாவீதைப்போல் சாதாரனமாக எளிமையாகத் தோன்றும்.. கோலியாத்திடம் மிகப்பெரிய ஆயுதங்கள் பாதுகாப்புக்கருவிகள் இருந்தன.. ஆனால் தாவீதிடம் ஐந்து கூலாங்கற்களும், ஆடு மேய்க்க பயன்படுத்தும் தடி மட்டுமே இருந்தன.. கூடவே ஒன்றும் இருந்தன சர்வ வல்லமை படைத்த கடவுளின் அருளும் இருந்தது. ஏன் சர்வேசுவரனே தாவீதின் பக்கம் இருந்தார்..

தாவீது ஒரே ஒரு கூலாங்கலால் அவனை நெற்றிப்பொட்டில் அடித்து வீழ்த்தினார்..

அது போல் பொய்களும், போலிகளும் அவர்கள் எதிர்பாராத நேரத்தில் நெற்றிப்பொட்டில் அடித்து வீழ்த்தப்படுவார்கள். அவர்கள் பக்கம் நின்று ஜால்ரா போடுபவர்களுக்கும்..அதே கதிதான்..

நாம் யார் பக்கம் நிற்கப்போகிறோம்.. அன்று ஊரே ஆண்டவருக்கு எதிராக நின்றது.. அவர் அருகில் ஒருவரும் இல்லை..ஆண்டவர் இயேசு தனித்து விடப்பட்டார்.. இன்றும் அதே ஆண்டவர் தனித்துத்தான் விடப்பட்டுள்ளார்.. ஏனென்றால் அவர் உண்மையின் கடவுளாயிற்றே..

அதே கல்வாரியில் தனித்து நிற்கின்றார்.. அவர் அருகே அவர் நடந்து செல்ல இருக்கும் கல்வாரிப்பாதை கரடு முரடான பாதை, கற்களும், முட்களும் நிறைந்த பாதை.. இருக்கிறது ஏனென்றால் உண்மையின் பாதை அப்படித்தான் இருக்கும்.. உண்மையைத் தாங்கியவர்கள் அப்பாதையில் நடந்தே ஆகவேண்டும்…

நம் ஒவ்வொருவரையும் பார்த்து கேட்கின்றார்…

“ உண்மையைச் சார்ந்த எவனும் என் குரலுக்கு செவிமடுக்கிறான். நீ உண்மையைச் சார்ந்தவனா? அப்படியானால் என்னைப்பின் செல். கற்களையும், முட்களையும் பார்த்துக் கவலைப்படாதே…பயப்படாதே.. நான் உன்னோடு இருக்கிறேன்… தைரியமாக என் பின்னே வா “

அன்று ஆண்டவரை துணிச்சலோடு பின் சென்ற தேவ மாதா, அருளப்பரைப்போல் நாமும் பின் செல்ல தயாரா?

ஆண்டரோடு அவரது சிலுவை சுமந்து கொண்டு அவரோடு நடக்க நாம் தயாரா?

எங்கள் பெயரில் தயவாயிரும் சுவாமி… எங்கள் பெயரில் தயவாயிரும்….

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !