“ அநீத செல்வத்தைக்கொண்டு நண்பர்களைச் சம்பாதித்துக்கொள்ளுங்கள். அது உங்களைக் கைவிடும்பொழுது, இவர்கள் உங்களை முடிவில்லாக் கூடாரங்களில் ஏற்றுக்கொள்வார்கள்”. லூக்காஸ் 16 : 9
யார் அந்த நண்பர்கள்???? அநீத செல்வம் என்றால் என்ன ????
அநீத செல்வம்: நம் பாவங்களுக்குத் தண்டனையாக.. அதுவும் இந்த பூலோகதத்தில் இருக்கும் போதே சர்வேசுவனுடைய இரக்கத்தினால் நமக்கு கொடுக்கப்படும் துன்பங்கள், கஷ்ட்டங்கள், நோய்கள், அசவுகரீகங்கள், வலிகள், வேதனைகள், மழை, வெயில், பணி, நெரிசல் (பஸ், ரயில்) என்று எதுவெல்லாம் நமக்கு துன்பம் தருகிறதோ அவையெல்லாம் செல்வங்களே.. சிலுவைகளே.. அவற்றை நாம் நம் பாவங்களுக்காகவும், உத்தரிக்கும் ஆன்மாக்களுக்காகவும், பாவிகள் மனந்திரும்பவும் ஒப்புக்கொடுக்க வேண்டும்…
அதிலும் நம் ஆண்டவர் குறிப்பிடுவது அவைகளைக்கொண்டு உத்தரிக்கும் ஆன்மாக்களை நம் நண்பர்களாக்க வேண்டும் என்பதே…அதாவது நம் ஜெபத்தால்.. தவத்தால் உத்தரிக்கும் ஸ்தலத்தில் இருந்து மோட்சம் செல்லும் ஆன்மாக்கள் நமக்காக ஜெபித்து நாம் உத்தரிக்கும் ஸ்தலம் செல்லாமல் முடிவில்லாத கூடாரமான மோட்சத்தில் நம்மை ஏற்றுக்கொள்வார்கள்…அதாவது நாம் மோட்சம் செல்ல காரணமாயிருப்பார்கள்..
எப்படி அவர்களை நண்பர்களாக்குவது???
1. நம்முடைய அனுதின ஜெபமாலையில் ஒரு பத்து மணியாவது அவர்களுக்காக ஒப்புக்கொடுக்க வேண்டும்....( அதற்கு அதிகமாகவும் கொடுக்கலாம்)
2. உத்தரிக்கும் ஆன்மாக்கள் யாரும் நினையா ஆன்மாக்களுக்காக,.. நம் குடும்பத்தில், பங்கில் மரித்தவர்களுக்காக வாரம் ஒரு முறையோ…மாதம் ஒரு முறையோ திருப்பலி ஒப்புக்கொடுக்க வேண்டும்..
3. நாம் பங்கேற்கும் ஒவ்வொரு திருப்பலியிலும்.. “ இவர் வழியாக…இவரோடு…இவரில்… “ அதாவது நம் ஆண்டவராகிய இயேசுவை தந்தையாகிய பிதாவுக்கு ஒப்புக்கொடுக்கும் நேரத்திலும், திவ்ய நற்கருணை ஆண்டவரை வாங்கிய பின்பும் ( அவரை ஆராதித்து நன்றி செலித்திவிட்டு நம் தேவைகளை கேட்கும் போது அவர்களுக்காகவும் சில நிமிடங்கள் ஜெபிக்க வேண்டும்) உத்தரிக்கும் ஆன்மாக்களை ஆண்டவருக்கு ஒப்புக்கொடுத்து ஜெபிக்க வேண்டும்..
4. நாம் அனுபவிக்கும் துன்பங்களில், இன்னல்களில் நாம் செய்யும் ஒறுத்தல் முயற்சிகளில் ஒரு பகுதியை அவர்கள் மோட்சம் சேர ஒப்புக்கொடுக்க வேண்டும்…
நாம் அவர்களுக்காக ஜெபித்தால் ஒரு காலத்தில் நமக்கும் அத்தகைய சூழ்நிலை வரும்போது அவர்களும், இந்த மண்ணில் நமக்காக ஜெபிக்க பலரும் நமக்கு கிடைப்பார்கள்…
ஒரு புதுமை : ஜெபமாலைப்புனிதை புனித ஜெத்ரூத்தம்மாள் வாழ்வில் நடந்தது..
புனித ஜெத்ரூத்தம்மாள், தனது மரணத்தருவாயில் பசாசின் சோதனைகளால் மிகவும் அழைக்கழிக்கப்பட்டார். கெட்டஆவி கொடிய வஞ்சகமான சோதனைகளை தமது கடைசி நேரத்திற்காகவே திட்டமிட்டு வைத்திருக்கும்.
இப்புனிதையை தன்னுடைய எந்த வஞ்சகத் திட்டத்தாலும் வீழ்த்தப்பட முடியாததால் அவருடைய அழகான ஆன்ம சமாதானத்தை குறைக்க எண்ணி, புனிதை தாம் செய்த அனைத்து நற்செயல்களின் பலன்களையும் உத்தரிக்கும் ஆன்மாக்களுக்கு ஒப்புக்கொடுத்து விட்டதால், இவர் நீண்ட காலம் உத்தரிக்கிற ஸ்தலத்து நெருப்பில் வேதனையுற வேண்டியிருக்கும் எனக்கூறியதாம்.
நமது பரிசுத்த தேவனோ, ஆறுதல் அளிக்க புனிதையால் மீட்பு பெற்ற ஆயிரக்கணக்கான ஆன்மாக்களையும், தமது வானதூதர்களையும் அனுப்பியதோடு திருப்தியடையாமல், தானே நேரிடையாக வந்து அலகையை விரட்டியடித்து புனிதையை தேற்றினார். உத்தரிக்கிற ஆன்மாக்களுக்கு புனிதை செய்த உதவிகளுக்கு கைமாறாக மோட்சத்திற்கு நேராக அழைத்துச் சென்று, அவருடைய கிரியைகளுக்கு நூறு மடங்கான பலன்களையும் அளிப்பதாக வாங்குத்தந்தார்…
நன்றி : புதுமை,, ‘என்னைப்படி அல்லது வருத்தப்படு நூல். ஆசிரியர் “ சங்.பவுல் ஓ.சலைவன்.. புத்தக தொடர்புக்கு சகோ.பால்ராஜ் Ph: 9487609983, சகோ.ஜேசுராஜ் Ph: 9894398144
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !