ஆண்டவர் துணையிருப்பார் ஆபத்து 121

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


ஆண்டவர் துணையிருப்பார் ஆபத்து அணுகாது

மதில்போல் சூழ்ந்திருப்பார் துன்பங்கள் நெருங்காது

கலங்காதே மனமே கலங்காதே மனமே

அன்பான தேவன் அரவணைப்பார் கலங்காதே மனமே


1. உன்னைக் காப்பவர் அயர்வதில்லை

உன்கால் இடற விடுவதில்லை

உன்னைக் கைவிட்டுப் பிரிவதில்லை

உன்னோடு உயிராய் இணைந்திருப்பார்


2. பகலின் வெயிலோ இரவின் நிலவோ தீமை செய்யாது அஞ்சாதே

புயலும் மழையும் புவியைச் சூழ்ந்தால்

தீமை செய்யாது திகையாதே

கண்ணான தேவன் எந்நாளும் காப்பார்

கவலையோ கலக்கமோ இனி வேண்டாம்


3. வானத்துப் பறவையை காக்கின்றவர்

வறுமையில் உன்னை விடுவாரோ

வயல்வெளி மலரை மகிழ்விப்பவர்

நோயினில் விடுதலை தருவாரே (2)

உலகம் ஆயிரம் பேசினாலும் சோர்ந்து வீழ்ந்து போகாதே

தீங்கு செய்வோர் சூழ்ந்து கொண்டால் வாடி வதங்கி போகாதே

இஸ்ராயேல் இறைவன் மாறாத தேவன்

இன்றும் என்றும் உடனிருப்பார்