ஆண்டவர் பெயரைப் பாடிடுவோம் 66

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


ஆண்டவர் பெயரைப் பாடிடுவோம்

நாளெல்லாம் போற்றி ஆர்ப்பரிப்போம்

ஆண்டவர் பெயரைப் பாடிடுவோம் -2

போற்றிப் போற்றிப் பாடிடுவோம் -2


1. மாபெரும் அருஞ்செயல் கண்டு எதிரிகள் அங்கு அஞ்சினரே -2

உம்மை யாம் பணிந்து போற்றுவோம் இறைவா

உலகோர் எல்லாம் ஆனந்தம் காண்பர்

போற்றிப் போற்றிப் பாடிடுவோம் -2


2. இறைபயம் கொண்ட மாந்தரே புகழ்ப்பா பாடிப் போற்றிடுவீர் - 2

தீமைகள் செய்யா நல்லவர் தேடி

நீங்கா அன்பால் என்றுமே காப்பார்

போற்றிப் போற்றிப் பாடிடுவோம் -2