1. சர்வேசுரன் ஆதிமனிதரைப் படைத்தபின் அவர்களை எங்கே வைத்தார்?
பூலோக மோட்சம் என்னப்படும் செல்வம் நிறைந்த ஒரு சிங்காரத் தோப்பில் வைத்தார். “ஆண்டவராகிய கடவுள் ஆதியிலே தாம் படைத்திருந்த செல்வமும் இன்பமும் நிறைந்த ஒரு சிங்காரவனத்தில் தாம் உருவாக்கின மனிதனை வைத்தார்” (ஆதி. 2:8).
2. அந்தச் சிங்காரத் தோட்டத்தில் இருந்ததென்ன?
இனிமையான கனிவர்க்கங்களைத் தரும் மரங்களும், பரிமளம் வீசும் அழகிய புஷ்பங்களும், நேர்த்தியான பூச்செடிகளும் அந்தத் தோட்டத்தில் இருந்தன. பறவைகள் பகலெல்லாம் பாடிக் கொண்டிருந்தன. இப்போது தீய விலங்குகளாய்க் காணப்படுகிற சிங்கம், புலி, கரடி முதலிய மிருகங்களும் வெகு சாந்த குணமுள்ள தாயிருந்தன. பெரிய நதிகளின் தண்ணீர் அந்த அற்புதமான தோட்டத்தில் பாய்ந்து ஓடினதுடன், அதன் மத்தியில் பளிங்குக்கு ஒப்பான ஒரு நீரூற்றும் இருந்தது (ஆதி. 2).
3. ஆதிமனிதர் அந்தத் தோட்டத்தில் என்ன செய்தார்கள்?
சர்வேசுரன் மனிதனை “இன்பந்தரும் சிங்காரவனத் தைக் கையாளவும், அதைக் காக்கவும் வைத்தார்” என்று ஆதி யாகமத்தில் எழுதியிருக்கிறது (ஆதி. 2:15). ஆகையினால் சுவாமி கட்டளைப்படி அவர்கள் ஒரு கஷ்டமும் வருத்தமும் தெரியாமல், அத்தோட்டத்தைக் கையாண்டு சுக செல்வமாய் வாழ்ந்து வந்தார்கள்.
4. சர்வேசுரன் அவர்களை அந்தத் தோட்டத்தில் வைத்தபின் அவர்களுக்கு ஏதோ ஒரு கட்டளை கொடுத்தாரா?
ஆம்: சிங்காரத் தோட்த்தில் சகல மரங்களின் கனிகளைச் சாப்பிட உத்தரவு கொடுத்து, நன்மை, தின்மை அறியத் தக்க மரத்தின் பழத்தைச் சாப்பிடக் கூடாதென்று கட்டளை கொடுத்தார் (ஆதி. 2:16,17).
5. ஏன் சர்வேசுரன் அவர்களுக்கு அப்பேர்ப்பட்ட கட்டளை யிட்டிருந்தார்?
சிருஷ்டிக்கப்பட்ட வஸ்துக்களின்மேல் தமக்குச் சர்வ அதிகாரமுண்டென்று காண்பிப்பதற்காகவும், அவர்களுடைய பிரமாணிக்கத்தைச் சோதிப்பதற்காகவும், அவர்கள் மோட்சத்திற்குப் பேறுபலனை அடையும்படியாகவும்தான்.
6. விலக்கப்பட்ட பழத்தைத் தின்றால் என்ன சம்பவிக்கு மென்று சர்வேசுரன் அவர்களுக்கு அறிவித்திருந்தாரா?
ஆம். “நீ அதை எப்போதாவது புசிப்பாயாகில் சாகவே சாவாய்” என்று அவர்களுக்கு அறிவித்திருந்தார் (ஆதி. 2:17).
7. அவர்கள் விலக்கப்பட்ட கனியைப் புசியாதிருந்தால், சர்வேசுரன் அவர்களுக்கும், அவர்களுடைய சந்ததியாருக்கும் என்ன சம்பாவனை கொடுத்திருப்பார்?
இவ்வுலகத்தில் சிலகாலம் வாழ்ந்திருந்து, அவர்களும் அவர்களுடைய சந்ததியாராகிய சகல மனிதரும் சாவு நோவின்றி மோட்சத்தை சுதந்தரித்துக் கொள்வார்கள் என்று வாக்குக் கொடுத் திருந்தார்.
8. ஆதித்தாய் தகப்பன் தங்கள் பரிசுத்தமும், பாக்கியமுமான அந்தஸ்தில் நிலைகொண்டார்களோ?
இல்லை; அதைப் போக்கடித்து விட்டார்கள்.
41. அவர்கள் அதைப் போக்கடித்தது எப்படி?
பசாசை நம்பி சர்வேசுரனால் விலக்கப்பட்ட கனியைத் தின்றதினாலே போக்கடித்தார்கள்.
1. அது எப்படி சம்பவித்தது?
பசாசு பாம்பின் வேஷமெடுத்து, விலக்கப்பட்ட மரத் தின் கிளையில் ஏறி, ஏவாளை நோக்கி, “சிங்காரத் தோட்டத்தி லுள்ள எல்லா மரங்களின் பழங்களைப் புசிக்கலாகாது என்று உங்க ளுக்குக் கடவுள் ஏன் விலக்கம் பண்ணினார்?” என்று வினவினது (ஆதி. 3:1).
2. அதற்கு ஏவாள் என்ன சொன்னாள்?
“தோட்டத்தில் நடுவேயுள்ள மரத்தின் கனியை நீங்கள் புசிக்கவும் வேண்டாம், தொடவும் வேணடாம் என்றும்... புசித்தால் சாவீர்களென்றும்” சர்வேசுரன் திருவுளம்பற்றியிருக்கிறாரென்று மறுமொழி சொன்னாள் (ஆதி. 3:3).
3. அதற்கு பசாசு சொன்னதென்ன?
இல்லை இல்லை, “நீங்கள் நிச்சயம் சாகவே மாட் டீர்கள். உள்ளபடி நீங்கள் எந்நேரத்தில் அக்கனியைச் சாப்பிடு வீர்களோ, அந்நேரத்தில் உங்கள் கண்கள் திறக்கப்படுவதினால் நீங்கள் தேவர்கள் போலாகி நன்மையும் தின்மையும் அறிவீர்கள்” என்றது (ஆதி. 3:4,5).
4. அப்போது ஏவாள் என்ன செய்தாள்?
பசாசின் வார்த்தையை நம்பி, விலக்கப்பட்ட மரத்தின் கனியைப் பறித்து, தானும் புசித்தாள்; தன் புருஷனுக்கும் கொடுத் தாள். அவனோ அதை வாங்கிப் புசித்தாள் (ஆதி. 3:6).
5. ஆதித்தாய் தகப்பன் சுவாமி கட்டளையை மீறின போது தங்கள் மனதினால் என்ன பாவம் செய்தார்கள்?
சுவாமி போல் ஆக வேண்டுமென்ற ஆசையால் அந்தக் கனியைத் தின்றதால், அவர்கள் லூசிபர் கட்டிக்கொண்ட ஆங்காரம் என்னும் கனமான பாவத்தை மனதில் கட்டிக் கொண்டனர்.
6. விலக்கப்பட்ட கனியைப் புசித்தபின் நடந்ததென்ன?
அக்கணமே அவர்கள் இருவரின் கண்களும் திறந்தன. எப்படியென்றால், அதுவரையில் அவர்கள் நிர்வாணமாயிருந் தாலும், மாசற்ற குழந்தைகள் போல் ஆசாபாசம் ஒன்றும் இல்லாத வர்களானபடியால், அவர்களுக்கு நாணம் ஒன்றுமில்லை. சுவாமிக்கு துரோகம் செய்த மாத்திரத்தில், தாங்கள் நிர்வாணிகளென்று கண்டறிந்து, வெட்கி, அத்தி இலைகளைத் தைத்துத் தங்களுக்கு இடைக்கச்சுகளை உண்டுபண்ணி, தங்கள் நிர்வாணத்தை மறைத்து, சர்வேசுரனுடைய சந்நிதியை விலக்கத் தோட்டத்து மரங்களின் நடுவே ஒளிந்து கொண்டார்கள் (ஆதி. 3:7,8).
7. அதற்குப் பின் என்ன நடந்தது?
சர்வேசுரன் திடீரெனத் தரிசனையாகி, அவர் அவர் களைக் காணாதபடியால் ஆதாமைக் கூப்பிட்டு: “எங்கேயிருக் கிறாய்?” என்றார் (ஆதி. 3:9). அதற்கு அவன்: “நான் தேவரீருடைய குரற்சத்தத்தைக் கேட்டு நிர்வாணியாயிருக்கிறேனென்று பயந்து ஒளிந்துகொண்டேன்” என, கடவுள்: “நீ நிர்வாணியாயிருக்கிறா யென்று உனக்கு அறிவித்தது யார்? புசிக்க வேண்டாமென்று நாம் உனக்கு விலக்கி கனியை நீ புசித்ததினால் அல்லோ கண்டு பிடித்தாய்?” என்று சொன்னார் (ஆதி. 3:10,11).
8. அப்போது ஆதித்தகப்பன் தன் குற்றத்தை ஒப்புக் கொண்டாரோ?
இல்லை; தன் மனைவி தன்னைக் கெடுத்துப் போட்டதாக ஏவாளின் பேரில் குற்றம் சாட்டினார் (ஆதி. 3:12).
9. ஏவாள் தன் தப்பிதத்தை ஒத்துக் கொண்டாளோ?
பாம்பு தன்னைக் கபடமாய் ஏமாற்றினதென்று சாக்குப் போக்குச் சொல்லி, பசாசின் மேல் குற்றஞ்சாட்டினாள் (ஆதி. 3:13).
10. சர்வேசுரன் அவைகளுக்குக் காது கொடுத்தாரோ?
காதுகொடாமல் அவர்களைத் தண்டித்தார்.
11. சர்வேசுரன் பாம்பைத் தண்டித்தாரா?
பாம்பு வேஷம் எடுத்த பசாசைச் சபித்து, அதன் தலை ஒரு நாள் நசுக்கப்படும், அதாவது அதன் வல்லமை நிர்மூலமாகும் என்றார் (ஆதி. 3:14,15).
12. சர்வேசுரன் ஏவாளை எப்படித் தண்டித்தார்?
சர்வேசுரன் அவளை நோக்கி: “உனக்குத் துன்பங் களையும், கர்ப்ப வேதனைகளையும் அதிகப்படுத்துவோம்; வேதனை யோடு பிள்ளைகளைப் பெறுவாய்; புருஷன் அதிகாரத்தின் கீழ் இருப்பாய், அவன் உன்னை ஆண்டு கொள்ளுவான்” என்று சொன்னார் (ஆதி. 3:16).
13. ஆதாமுக்குச் சர்வேசுரன் இட்ட தண்டனை என்ன?
சர்வேசுரன் ஆதாமைப் பார்த்து: “நீ உன் மனைவியின் வார்த்தைக்குக் காதுகொடுத்து, நமது கட்டளையை மீறி நடந் ததினால் பூமியானது சபிக்கப்பட்டிருக்கிறது. நீ கஷ்டப்பட்டுச் சாப்பிடுவாய். அது உனக்கு முட்களையும் நெரிஞ்சிகளையும் முளைப்பிக்கும்; அதிகப் பிரயாசத்துடன் நெற்றி வேர்வை நிலத்தில் விழ உழைத்து, உன் அன்னத்தைச் சாப்பிடுவாய்; கடைசியிலே நீ எந்த மண்ணினின்று எடுக்கப்பட்டாயோ அந்த மண்ணுக்கே திரும்பிப் போவாய், ஏனெனில் நீ மண்ணாயிருக்கிறாய், மண் ணுக்குத் திரும்புவாய்” என்று அருளினார் (ஆதி.3:17,19).
14. கடைசியில் சர்வேசுரன் என்ன செய்தார்?
இருவருக்கும் தோற்சட்டைகளை உண்டுபண்ணி, அவர்களுக்குத் தரிப்பித்து, சிங்காரத் தோட்டத்திற்கு வெளியே துரத்தி, அவர்கள் இனிமேல் அதில் பிரவேசிக்காதபடி அக்கினி வாளையுடைய ஒரு சம்மனசை அதற்கு முன் காவலாக நிறுத்தினார் (ஆதி. 3:21,24).
15. ஆதித்தாய் தகப்பன் செய்த பாவத்தைக் கொண்டு நாம் அறிய வேண்டியதென்ன?
(1) பாவ சமயங்களை விட்டு விலக வேண்டும். ஏவாள் நன்மை தீமை அறிவிக்கும் மரத்து அண்டையில் போகா திருந்தால், அதின் “கனி புசிப்பதற்கு நல்லதென்றும், பார்வைக்கு நேர்த்தியானதென்றும், அதை நோக்கினால் கண் குளிருமென்றும்” (ஆதி.3:6) கண்டுணராதிருப்பதோடு, அதைப் பறித்துப் புசித் திருக்க மாட்டாள்.
42. (21) அதினால் அவர்களுக்கும் அவர்கள் சந்ததியாருக்கும் வந்த கேடென்ன?
பசாசுக்கு அடிமையாகி, சாவு, நரகம் முதலிய ஆக்கினை களுக்குப் பாத்திரவான்கள் ஆனார்கள்.
1. சந்ததியார் என்றால் யார்?
அதே குடும்பத்தில் பிறந்தவர்களாம்.
2. கேடு என்னும் பதத்துக்கு அர்த்தமென்ன?
தீமை, பொல்லாப்பு, கஷ்டங்கள் என்று அர்த்த மாகும்.
3. அடிமை என்றால் யார்?
ஊழியன், சிறை, தன்னிஷ்டப்படி நடக்க சுதந்தர மில்லாமல் மற்றொருவனுக்குச் சொந்தமாயிருக்கிறவன்.
4. எப்படிப் பசாசுக்கு அடிமையானார்கள்?
மனுஷ சுபாவத்துக்கு மேற்பட்ட வரமாகிய தேவ இஷ்டப்பிரசாதத்தை இழந்து, அதினால் தேவனின் சுவீகாரப் பிள்ளை என்னும் பட்டத்தையும், மோட்ச சுதந்தரத்தையும் இழந்து போய், நரகத்துக்குப் பாத்திரவான்களாகி, பசாசுக்கு மக்களும் ஆனார்கள்.
5. சாவு முதலிய ஆக்கினைகள் என்பதினால் நாம் கண்டு பிடிப்பதென்ன?
ஆத்துமத்தையும் சரீரத்தையும் அலங்கரித்த மனித சுபாவத்துக்குப் பிரத்தியேகமான வரங்கள் மனிதனை விட்டு விலக, அவர்கள் அறியாமை, ஆசாபாசம், துர் இச்சை, நோவு, சாவு முதலிய இச்சீவியத்திலுள்ள மற்ற கஸ்தி துன்பங்களுக்கு உள்ளானார்கள் என்று கண்டுபிடிக்கிறோம்.
6. அவர்களுடைய சந்ததியாருக்கும் என்று சேர்த்துச் சொல்வது ஏன்?
ஆதாம் தமது பாவத்தால் தம்முடைய சந்ததியா ருக்கும் கேடு விளைவித்தார். ஆதாம் தேவ கட்டளையை மீறின தால், சர்வேசுரன் ஸ்தாபித்த ஒழுங்கு அழிந்துபோய், அவர் ஆதித் தகப்பனுக்குக் கொடுத்த சுபாவத்துக்கு மேற்பட்டதும், பிரத்தி யேகமானதுமான வரங்களை அவர்களும் போக்கடித்தார்கள். ஆகையால் சகல மனிதரும் ஜென்மப் பாவ அந்தஸ்தில் பிறந்து, சர்வேசுரன் முன்பாக கோபத்துக்குரிய பிள்ளைகளாகி, ஆசாபாசத் தையும், மரணத்தையும், மற்ற தண்டனைகளையும் அனுபவித்து வருகிறார்கள்.
7. ஆதாமின் பாவம் எப்படி அவருடைய சந்ததியாருக்கும் வந்தது?
(1) சர்வேசுரன் தாம் ஆதாமுக்கு அளித்திருந்த நீதியும், பரிசுத்ததனமுமாகிய மேலான வரங்கள், அவருடைய சந்ததியில் பிறக்கும் சகலருக்கும் சாஸ்வதமான வரங்களாயிருக்க வேண்டுமென்று விரும்பினார்.
(2) ஆனால் ஆதாம் பாவம் செய்து நீதியையும், பரிசுத்ததனத்தையும் இழந்து போனார்.
(3) ஆதலால் அவர் மூலமாய் அவருடைய சந்ததியா ருக்கு வரும் மனுஷ சுபாவம் மேற்கூறிய வரங்களை இழந்து போன சுபாவமாயிருக்கிறது.
(4) இவ்வாறு இழந்துபோனதினால் உண்டாகும் குறை மனுஷ சுபாவத்தை ஒட்டிய ஓர் பாவமாயிருக்கிறது.
(5) ஆதாம் கட்டிக் கொண்ட ஒரே ஒரு பாவம் அவருடைய பிள்ளைகளாகிய நம்மோடுகூடப் பிறந்து மனுக்குல முழுவதிலும் பரவி வருகிறது.
8. ஆதாமின் சந்ததிக்கு இவ்வகையாய் வருவிக்கப்பட்ட இந்தப் பாவத்துக்குப் பெயரென்ன?
இந்தப் பாவத்துக்கு ஜென்மப்பாவம் என்று பெயர்.