மனிதனுடைய ஆதி அந்தஸ்து

38. அவர் எந்த அந்தஸ்திலே ஆதித்தாய் தகப்பனை உண்டாக்கினார்?

பரிசுத்தமும் பாக்கியமுமான அந்தஸ்திலே அவர்களை உண்டாக்கினார்.

1. சர்வேசுரன் மனிதனை வேறு எந்த அந்தஸ்திலாகிலும் உண்டாக்கியிருக்கலாமா?

சர்வேசுரன் மனிதனைப் பாவ அந்தஸ்திலாவது, தேவ இஷ்டப்பிரசாத அந்தஸ்திலாவது உண்டாக்காமல், சுத்த இயற்கை சுபாவ அந்தஸ்தில் மாத்திரமே, அதாவது ஆசாபாசம், நோவு, சாவு, முதலியவைகளுக்கு உள்ளானவனாக அவனை உண்டாக்கியிருக்க லாம். ஏனென்றால், சர்வேசுரன் தான் படைத்த வஸ்துக்களுக்கு அவைகளுடைய சுபாவத்துக்கு அத்தியாவசியமானதை மாத்திரமே கொடுக்க வேண்டியவராயிருக்கிறார்.

2. இந்தச் சுத்த இயற்கை சுபாவ அந்தஸ்தில் மனிதன் எப்பேர்ப் பட்டவனாயிருந்திருப்பான்?

(1) ஒரு அறிவுள்ள ஆத்துமமும், 

(2) யோசனையினால் உண்மையையும், ஒரே ஒரு சர்வேசுரன் இருக்கிறாரென்ற ஒருவித அறிவையும் அடையக்கூடிய புத்தியும், 

(3) தனது சுகத்தைத் தேடும் ஒரு மனதும், 

(4) தனக்கு நன்மையாகத் தோன்றுகிறவைகளைத் தெரிந்துகொள்ளக் கூடிய மனச்சுயாதீனமும், 

(5) மாற்றுதலுக்கும், அழிவுக்கும் உட்பட்டு ஐம்புலன் களுக்கு எட்டும் நன்மைகளின்மேல் சார்புள்ள சரீரமும் அவனுக்கு இருந்திருக்கும்.

3. மனிதன் சுபாவ அந்தஸ்தில் உண்டாக்கப்பட்டிருந்தால், மரணம் அடைந்த பிறகு அவனுடைய கதி எப்பேர்ப்பட்டதாயிருந்திருக்கும்?

அவன் சுபாவ ஒழுங்குப்படி நடந்திருந்தால், பேரின்ப தரிசனை அடையாமல் சுபாவ பாக்கியத்தை மாத்திரம் அனுபவித்துக் கொண்டிருந்திருப்பான்.

4. சர்வேசுரன் ஆதித்தாய் தகப்பனை அந்தச் சுத்த சுபாவ அந்தஸ்தில் உண்டாக்கினாரா?

சுத்த இயற்கை சுபாவ அந்தஸ்தில் மனிதனை உண்டாக் காமல், சுபாவத்துக்கு மேற்பட்ட அந்தஸ்தில், அதாவது பரிசுத் தமும், பாக்கியமுமான அந்தஸ்திலே அவர்களை உண்டாக்கினார்.

39. அவர்களுடைய அந்தஸ்து பரிசுத்தமாயிருந்ததெப்படி?

அவர்களுக்குத் தேவ இஷ்டப்பிரசாதம் இருந்ததினாலே தான்.

1. தேவ இஷ்டப்பிரசாதம் என்னும் வரம் எத்தன்மையானது?

மனித சுபாவத்துக்கு மேற்பட்டது.

2. இந்தத் தேவ இஷ்டப்பிரசாதத்தால் ஆதித்தாய் தகப்பனுக்கு உண்டான நன்மை என்ன?

தேவ இஷ்டப்பிரசாதமானது அவர்களைத் தங்கள் சுபாவத்துக்கு மேலான அந்தஸ்திற்கு உயர்த்தி, தேவ ஜீவியத்துக்குப் பங்காளிகளாக்கி, சர்வேசுரனுடைய சுவீகாரப் பிள்ளைகளாக இருக்கச் செய்து, மோட்சத்தை அடைவதற்குரிய பேறுபலனுள்ள கிரியைகளைச் செய்யும் வல்லமையை அளித்தது. அதனால் அவர்கள் சர்வேசுரனுடைய இராச்சியத்திற்குச் சுதந்தரவாளிகள் ஆனார்கள்.

40. அவர்களுடைய அந்தஸ்து பாக்கியமாயிருந்ததெப்படி?

விசேஷ அறிவு, ஆசாபாசமின்மை, சாகாமை, பாடுபடாமை என்னும் விசேஷ வரங்கள் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டதினாலேதான்.

1. இந்த நான்கு வரங்கள் எத்தன்மையாயிருந்தன?

இந்த வரங்கள் மனுஷ சுபாவத்துக்கு உரித்தான வரங்களாயிராமல், அதற்குப் பிரத்தியேகமாயிருந்தன.

2. இந்த நான்கு வரங்கள் எத்தனை வகைப்படும்?

முதல் இரண்டு வரங்களும் ஆத்துமத்தைச் சிறப் பிக்கும். மற்ற இரண்டு சரீரத்தை அலங்கரிக்கும்.

3. சர்வேசுரன் அவர்களுக்கு எப்பேர்ப்பட்ட அறிவைக் கொடுத் திருந்தார்?

சர்வேசுரன் அவர்களுக்கு ஒரு மேலான அறிவைக் கொடுத்தபடியால், அவர்களின் புத்தி பூரண விருத்தி அடைந்து, ஆத்துமத்துக்கும் சரீரத்துக்கும் வேண்டியதையெல்லாம் அவர்கள் தெளிவாய் அறிந்து கொண்டார்கள். ஆகையால் அவசியமான வரை உலகத்துக்குரிய எல்லா சாஸ்திரங்களையும், சுபாவத்துக்குரிய சகல சத்தியங்களையும், மோட்சத்தை அடைவதற்காக அறிய வேண்டிய சத்தியங்களையும் பிசகின்றி அறிந்து கொண்டார்கள். உலகத் திலுள்ள சகல பொருட்களின் தனிப்பட்ட குணங்கள் அவர் களுக்குத் தெரிந்ததினால், ஆதாம் அந்தந்தச் உயிரினத்துக்கு இட்ட பெயர் அந்தந்தப் பிராணியின் இயல்புக்குரிய பெயரா யிருந்தது (ஆதி. 2:19).

4. ஆசாபாசமின்மை என்னும் வரத்தால் அவர்களுக்கு விளைந்த நன்மை எது?

கீழாங்கிஷமாகிற சரீர இச்சை, கோபம் முதலிய ஆசாபாசங்கள், மேலாங்கிஷமாகிற புத்திக்கு எப்போதும் முற்றிலும் அடங்கியிருந்து, அவர்களுடைய மனது பொய்யான நன்மையை மெய்யான நன்மையாக மதிக்காமல், எப்போதும் மெய்யான நன்மையையும் பாக்கியத்தையும் நாடிக் கொண் டிருந்தது.

5. சாகாமை என்கிற வரத்தினால் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட நன்மை எது?

அவர்களுடைய சரீரம் ஒருக்காலும் செத்து அழியாம லிருந்து என்றென்றைக்கும் சீவித்திருக்கும். ஆதலால் ஆதித்தாய் தகப்பன் இவ்வுலகத்தில் சிலகாலம் வாழ்ந்தபின், சர்வேசுரன் குறிப் பிட்ட நாளில் சாகாமலே ஆத்தும சரீரத்தோடு சம்மனசுகளால் மோட்சத்துக்குக் கொண்டு போகப்பட்டு, அங்கே நித்திய பாக்கியத்தை அனுபவித்திருப்பார்கள்.

6. பாடுபடாமை என்னும் வரத்தால் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட நன்மை என்ன?

அவர்களுடைய சரீரம் கஷ்டம், வியாதி, வேதனை, இக்கட்டு இடையூறு முதலிய துன்பங்களுக்குக் கொஞ்சமாகிலும் உட்படாமல், அவர்கள் எப்போதும் சகல சுக செல்வங்களையும் அனுபவித்திருப்பார்கள்.

7. சர்வேசுரன் பரிசுத்ததனத்தையும், இன்னும் மற்ற வரங் களையும் என்ன கருத்தோடு நமது ஆதித்தாய் தகப்பனுக்குக் கொடுத் தருளினார்?

(1) சர்வேசுரன் இந்த மேலான வரங்கள் மனித சுபாவத்துக்குச் சாசுவதமாக, அதாவது ஒருக்காலும் ஒழியாமலும், மாறாமலும், என்றென்றைக்கும் நிலைத்திருக்கும் தெய்வீக வரங்களாய் இருக்க வேண்டும் என்னும் கருத்தோடு தயவாய்க் கொடுத்தருளினார்.

(2) ஆதாம் மனுக்குலத்தின் ஆதித் தகப்பனாயிருந்த படியால், அவர் தமது சந்ததியாருக்கு மனுஷ சுபாவத்தோடு மேற்கூறிய மேலான வரங்களையும் சேர்த்துக் கொடுக்க வேண்டும் என்னும் நோக்கத்தோடு, இவை நமது ஆதித்தாய் தகப்பனுக்கு அளிக்கப்பட்டன.