கிறிஸ்தவர்கள் தவிர்க்ககூடாத சிலுவை!

இயேசுவின் பெயருக்கு உள்ள மாபெரும் வல்லமை மற்றும் கிறிஸ்தவர்கள் தவிர்க்ககூடாத சிலுவை : இன்று திருச்சிலுவை திருநாள்..

“இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிட, இயேசுகிறிஸ்து ஆண்டவர்' என்று தந்தையாகிய கடவுளுடைய மகிமைக்காக எல்லா நாவுமே அறிக்கையிடும்.”

மோட்சம் மகிழும், நரகம் நடுநடுங்கும் இயேசுவின் பரிசுத்த நாமத்தை நாம் அடிக்கடி உச்சரிப்போம்..

“ இயேசு “ “ இயேசுவின் இரத்தம் ஜெயம் “ “ இயேசுவுக்கே புகழ் “

இயேசுவின் நாமத்திற்கு அடுத்தபடியாக மாபெரும் வல்லமை உள்ள மரியாயின் நாமத்தையும் நாம் அடிக்கடி உச்சரிப்போம்..

“ மரியாயே வாழ்க ! “ – மரியாயின் நாமத்தை சொல்லும் போதும் மகிமை அடைபவர் இயேசுவே.. மற்றும் தூய தமத்திருவமே..

சிலுவை ஸ்பெசல்…

"என்னைப் பின்செல்ல விரும்புகிறவன், தன்னையே மறுத்துத் தன் சிலுவையைச் சுமந்துகொண்டு என்னைப் பின்தொடரட்டும்.”

மத்தேயு 16 : 24, மாற்கு 8 : 34

"என்னைப் பின்செல்ல விரும்புகிறவன், தன்னையே மறுத்துத் தன் சிலுவையை நாள்தோறும் சுமந்துகொண்டு என்னைப் பின்தொடரட்டும்.”

லூக்காஸ் 9 : 23

“தன் சிலுவையைச் சுமந்துகொண்டு என்னைப் பின்சொல்லாதவன் என் சீடனாயிருக்க முடியாது.”

லூக்காஸ் 14 : 27

இயேசுவின் பெயருக்கு இத்தகைய வல்லமை.. மகிமை.. கிடைக்க என்ன காரணம்..

மீண்டும் பிலிப்பியர் 2.

“தம்மையே வெறுமையாக்கி, அடிமையின் தன்மை பூண்டு மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி,

தம்மைத் தாழ்த்திச் சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிபவரானார்.

ஆதலால் தான் கடவுள் அவரை எல்லாருக்கும் மேலாய் உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார்.”

பிலிப்பியர் 2 : 7-9

சிலுவை இல்லாமல் கிறிஸ்தவம் இல்லை.. துன்பங்கள் இல்லாமல் கிறிஸ்தவம் இல்லை.. யாராவது..

“சிலுவை வேண்டாம்” “ சிலுவை நமக்குத் தேவையில்லை” “ இயேசு சிலுவை சுமந்து கொண்டார் நாம் சுமக்கத் தேவையில்லை “ என்று கூறினாலோ, பாடினாலோ அவர்கள் கிறிஸ்தவர்கள் அல்ல.. 

மீண்டும் ஒருமுறை மேலே உள்ள ஆண்டவரின் உயிருள்ள திடமான போதனையை வாசிப்போம்..

இயேசு சுவாமியே சொல்லிவிட்டார் அவரைப் பின் செல்ல என்ன வழி..? என்ன தகுதி ? என்ன செய்ய வேண்டும்? என்று..

சிலுவை.. சிலுவை.. சிலுவை..

சிலுவைகளில் துன்பங்கள் இருந்தாலும் அது மகிழ்ச்சி தரும் சிலுவையே.. அவ்வப்போதும் மகிழ்ச்சி தரும் இறுதியில் மாபெரும் மகிழ்ச்சி தரும்.. சிலுவை என்பது துன்பங்கள் தெரிந்தாலும் அது மகிழ்ச்சியே.. அசைக்க முடியாத முடிவில்லாத மகிழ்ச்சியே..

ஆனால் ஒரே ஒரு கண்டிசன்..

சிலுவை சுமக்கும்போது.. முனுமுனுக்க கூடாது.. அதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.. ஆண்டவருடைய சிலுவைப்பாடுகளோடு ஒப்புக்கொடுக்க வேண்டும்..

அது சிறிய சிலுவையாக இருந்தாலும் சரி.. பெரிய பெரிய சிலுவைகளாக இருந்தாலும் சரி..

காய்ச்சல், தலை வலி, பல் வலி, வயிற்று வலி என்று நோய்கள் சார்ந்த சிலுவைகளாக இருந்தாலும் சரி.. மருந்து மாத்திரை சாப்பிட்டுக்கொண்டே அனுபவிக்கும் வேதனைகளை வலிகளை ஒப்புக்கொடுக்க வேண்டும்..

அசவுரியமான சூழ்நிலைகளாக இருந்தாலும் சரி.. மழை, வெயில், குளிர், பேருந்து நெருக்கடி, சீட் கிடைக்காத, திடீரென்று கரண்ட் போதல், அசவுகரீகமான பயணங்கள்..

மன வேதனைகளாக இருந்தாலும் சரி.. பிரச்சனைகள், துன்பங்கள், வேலையில் இடையூறு, நெருக்கடிகள், பசி, பட்டினி, உறவுகளால் பிரச்சனை, புரிந்து கொள்ளத நிலை, 

அதே போல் சின்ன சின்ன இடையூறுகள், துன்பங்களாக இருந்தாலும் சரி அவைகளை பரிகாரமாக ஒப்புக்கொடுக்க வேண்டும் (நன்றி வாழும் ஜெபமாலை இயக்கம்)

அதுவும் பாத்திமாவில் மாதா கேட்டுக்கொண்டபடி அமைந்த உள்ளத்தோடு ஏற்றுக்கொண்டு நமது பாவங்களுக்கு பரிகாரமாகவும், பிறரின் பாவங்களுக்கு பரிகாரமாகவும் ஒப்புக்கொடுக்க வேண்டும்.. அதுவும் ஆண்டவருடைய சிலுவைப்பாடுகளோடு சேர்த்து..

அப்போது சிலுவைகள் நமக்கு ஆசீர்வாதங்களாக அமையும்..

ஆனால் முனுமுனுத்தால்… இஸ்ராயேல் மக்களின் முனுமுனுப்பாக மாறி கொள்ளி வாய்ப்பாம்புகளாக மாறி கடித்துக்கொண்டே இருக்கும்.. அதே போல் கடித்த பாம்பை ஆண்டவரின் கட்டளையால் வெண்கல உருவம் செய்து உயர்த்தியபோது அதே பாம்பு உருவம் கடியிலிருந்து அவர்களுக்கு விடுதலையாக அமைந்தது. அதே போல்தான் நமக்கும் துன்பங்களில் முனுமுனுத்தல் ஒரு பயனும் தராது.. ஆனால் ஒப்புக்கொடுத்தல் அதிக பலனையும் ஆசீர்வாதங்களையும் தரும்..

இதில் உண்மை என்னவென்றால்.. எப்படியிருந்தாலும் அதை நாம் அனுபவித்துத்தான் ஆக வேண்டும்..

அந்த துன்பங்களை, சிலுவைகளை வீணாக்காமல் இயேசு சுவாமி சொல்லியதுபோல், மாதா சொல்லியதுபோல் அமைந்த மனதோடு ஏற்றுக்கொண்டு அதை பரலோக பேங்கில் போட்டுக்கொண்டே இருந்தால் வட்டி ஏறிக்கொண்டே இருக்கும்..

“சிலுவையிலேதான் மீட்சியுண்டு

தேடும் வானக மாட்சியுண்டு”

“It is imposible to follow Jesus without cross” ( நன்றி ஒரு அருட்தந்தை, வேளாங்கண்ணி)

நம் சிலுவைகளைத் தூக்காமல் சேசு ஆண்டவரை பின் செல்ல முடியாது..

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !