திவ்ய நற்கருணை நாதர் பகுதி-19

“ ஒருவன் எனக்கு அன்பு செய்தால் என் வார்த்தையைக் கேட்பான்; என் தந்தையும் அவன் மேல் அன்புகூர்வார்; நாங்களும் அவனிடம் வந்து, அவனோடு குடிகொள்வோம்.”

அருளப்பர் (யோவான்) 14 : 23

எப்படி அவர்கள் நம்மிடம் குடிகொள்வார்கள்? திவ்ய நற்கருணை வடிவில் நம்மிடம் வந்து குடிகொள்வார்கள்..

ஆண்டவரின் வார்த்தை எது?

“ இது உங்களுக்காக கையளிக்கப்படும் என் உடல்” – லூக்காஸ் 22 : 19

“ இதை வாங்கி உண்ணுங்கள், இது என் உடல் “ -  மத்தேயு 26  : 26

“ இதிலே அனைவரும் பருகுங்கள். ஏனெனில் உடன்படிக்கைக்கான என் இரத்தம் இது. பாவ மன்னிப்புக்கென்று பலருக்காக சிந்தப்படும் இரத்தம் “

மத்தேயு 26 : 27

இந்த வார்த்தையைக் கேட்டு நடந்தால் நாம் எப்படி இருப்போம்?

“ நான் திராட்சைக் கொடி; நீங்கள் அதன் கிளைகள். ஒருவன் என்னுள்ளும் நான் அவனுள்ளும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனி தருவான். ஏனெனில் என்னைப் பிரிந்து உங்களால் ஒன்றும் செய்ய முடியாது”

அருளப்பர் 15 : 5

ஆனடவரைப் பிரியாமல் அவரோடு நிலைத்திருக்க என்ன செய்ய வேண்டும்?

மீண்டும் அதே பதில்..

நம்மை தயாரித்து தகுதியான உள்ளத்தோடும், சந்தேகமில்லா விசுவாசத்தோடும் திவ்ய நற்கருணை ஆண்டவரை உரிய மேரை மரியாதையோடு வாங்க வேண்டும்.. உட்கொள்ள வேண்டும்..

இதில் நாம் தவறு செய்தோம் என்றால் என்ன நடக்கும்?

“ ஒருவன் என்னுள் நிலைத்திராவிடில், கிளையைப்போல வெட்டி எரியப்பட்டு, உலர்ந்து போவான்; அக்கிளைகளை ஒன்று சேர்த்து, நெருப்பில் போட்டுச் சுட்டெரிப்பார்கள் “

அருளப்பர் 15 : 6

நெருப்பில் போட்டு வறுப்பது என்றால் நரகம்.. அவன் நரகத்திற்கு சென்று நெருப்பில் அகப்படுவான் என்கிறார்..

அதாவது திவ்ய நற்கருணை ஆண்டவரை தகுதியான உள்ளத்தோடு தன்னை தயாரித்து எந்த பயமுமில்லாமல் ( நோய் தொற்று குறித்தும்) வாங்கினால் ஆண்டவர் அவனில் நிலைத்திருப்பார்.. அப்படி இல்லாத பட்சத்தில் ஆண்டவர் அவனிடம் இல்லையென்றால் அவன் தரிகெட்டுப்போவான். அப்படிப் போனால் நரகம்தான் அவன் இருக்கப்போகிற இடம் என்கிறார்..

மீண்டும் பாருங்கள் ஆண்டவர் எவ்வளவு கருனையோடு பேசுகிறார்.. அதனால் யாருக்கு லாபம் ? நமக்குதானே..

“ நீங்கள் என்னுள்ளும், என் வார்த்தைகள் உங்களுள்ளும் நிலைத்திருந்தால் விரும்பியதெல்லாம் கேளுங்கள். உங்களுக்கு அருளப்படும்”

அருளப்பர் 15 : 7

இப்பவும் திவ்ய நற்கருணை ஆண்டவரை விட்டால் நமக்கு கதியில்லை..

இது யாருக்கு மகிமையாம்..

“ நீங்கள் மிகுந்த கனி தந்து என் சீடராக விளங்குவதே என் தந்தைக்கு மகிமை”

அருளப்பர் 15 : 8.

இது பிதாவுக்கு மகிமை… பிதாவின் விருப்பமும் அதுவே.. ஏன்?

“ நானே உண்மையான திராட்சைக் கொடி; என் தந்தையே பயிரிடுபவர்..”

அருளப்பர் 15 : 1

எப்படிப்பார்த்தாலும் நாம் இயேசு என்ற திராட்சைக் கொடியோடு கிளையாக இணைந்து நல்ல கனி தரவேண்டும் என்றால்..

மாதாவின் திருவயிற்றின் கனியான திவ்ய நற்கருணை நாதரை தகுதியான உள்ளத்தோடும், பயமில்லாத விசுவாசத்தோடும், மரியாதை கலந்த பயபக்தியோடு வாங்கினால் மட்டுமே அவரில் இணைந்து கனி தர முடியும் இல்லாவிட்டால்,, பதராகி வெட்டி எரியப்பட்டு நரகம் என்ற தீச்சூளையில் சுட்டெரிக்கப்படுவோம் என்பதே உண்மை.. இது கிறிஸ்துவின் நற்செய்தி..

“ அன்பின் தேவ நற்கருணையிலே அழியாப் புகழோடு வாழ்பவரே !

அன்புப் பாதையில் வழி நடந்தே அடியோன் வாழ்ந்திட துணை செய்வீர் !”

நம் நேசப் பிதா வாழ்த்தெப் பெறுவாராக !

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !