இப்போதாவது நவீனம் நம்மை விட்டு விடை பெறுமா?

என்னவெல்லாம் செய்தோம், எதையெல்லாம் மாற்றினோம், வேதாகம வார்த்தைகளை மாற்றினோம்; ஜெபங்களை மாற்றினோம்; பொது மொழிபெயர்ப்பைக் கொண்டு வந்தோம்.

1. அருள் நிறைந்தவள் – அருள் மிகப்பெற்றவளானாள்- மீண்டும் அருள் நிறைந்தவளானாள் ஆனால் விவிலியத்தில் இன்னும் அருள் மிகப்பெற்றவள் என்றுதானே இருக்கிறது.

2. “ உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்குமிடையே பகையை உண்டாக்குவோம்; அவள் உன் தலையை நசுக்குவாள்; நீயோ அவளுடைய குதிங்காலைத் தீண்ட முயலுவாய் “ என்றார் (ஆதியாகமம் 3:15) – இப்படி இருந்த வேதாகம வசனத்தை ஏன் மாற்றினீர்கள்; யாருக்காக மாற்றினீர்கள்; எது உங்கள் கண்களை உறுத்தியது. மாதா பிசாசின் தலையை மிதிக்கமாட்டார்களா? அதற்காகத்தானே அவர்கள் படைக்கப்பட்டார்கள். ஒரு பெண்ணை வைத்து விளையாடிய சாத்தானை இன்னொரு பெண்ணை வைத்துதானே கடவுள் ஒழித்துக்கட்டுவார். மேலும் “ உண்டாக்குவோம் “ என்ற வார்த்தை பன்மையில் வருகிறது. அவர்கள் தமத்திருத்துவம். எப்போதுமே கடவுள் பிதா, சுதன், பரிசுத்தஆவியாகத்தானே இருக்கிறார்கள். அவர்களை நான் என்று ஒருமைப்படுத்தியது சரியா.. 

3. கன்னி இளம்பெண்ணாகிறாள் கனி குழந்தையாகிறது.. இதையெல்லாம் மாற்ற வேண்டும் என்று யார் கேட்டார்கள்..

4. விசுவாசம் நம்பிக்கையாகிறது, நம்பிக்கை எதிர் நோக்காகிறது. பிதா சுதன், பரிசுத்த ஆவி, மாதா என்ற வார்த்தைகளெல்லாம் வண்டி ஏறுகிறது.. புதுசு புதுசா வார்த்தைகள் கண்டு பிடிக்கப்படுகிறது..

5. ஜெபத்தில் ஏகப்பட்ட மாற்றங்கள்… குடும்பத்தோடு உட்கார்ந்தும், பாராமலும் சொல்லிய ஜெபங்கள் எல்லாம் புதுசாக இருப்பதால கூட்டத்தோடு சொல்ல முடியவில்லை சொன்னாலும்.. தப்பு தப்பாக வருகிறது…

6. மாதா பிராத்தனையை மாற்றி.. இப்போது நித்திய ஸ்துக்குறியவையும் மாற்றியாகிவிட்டது..

7. அழைக்கப்பட்ட நாம் ஆன்மாக்களை மீட்க சேவை செய்ய வேண்டுமா? அல்லது மொழியை வளர்க்க சேவை செய்ய வேண்டுமா? எது முக்கியம் ? எது அவசியம் ? எதை ஆண்டவர் எதிர்பார்க்கிறார்..

8. சரி தேர்தெடுத்த வார்த்தைகளாவது உருப்படியான தமிழில் இருக்கிறது அதுவும் இல்லை…

மாதா பிதா குரு தெய்வம் : இந்த வார்த்தைகள் எல்லாம் தமிழ் இல்லையென்றால்.. தமிழுக்கு பெருமை சேர்த்த அவ்வையாருக்கு தமிழ் தெறியாதா?

ஆதி பகவன் முதற்றே உலகு என்று சொல்லிய திருவள்ளுவருக்கு தமிழ் தெறியாதா? ( ஆதி – தொடக்கமாம்).

விசுவாசம் வடமொழி என்று சொல்பவர்கள் தமிழ் அகராதியை எடுத்து பார்க்கவும்.

9. எல்லவற்றையும் மாற்றி மக்களை குளப்பி என்ன சாதித்து விட்டீர்கள்..

10. எதையாவது கேட்கப்போனால் மூலப்பைபிளில் அப்படித்தான் இருக்கிறது.. என்று வாயை அடைத்து விடுவது…

11. பெரிய பெரிய புனிதர்களுக்கும், வேதாகம அறிஞர்களுக்கும், தாய்திருச்சபைக்கும் தெறியாத இரகசியங்களையா நீங்கள் கண்டு பிடித்தீர்கள்.

12. புதிய வார்த்தைகளை கண்டு பிடித்த தமிழ் அறிஞர்களைப் பார்த்தால் காலில் விழுந்துவிடலாம்.

13. சரி..இப்போது என்ன சாதித்திருக்கிறீர்கள். அதே கவனத்தை  ஆன்மாக்களை கடவுளோடு ஒன்றிக்க எத்தனையோ முயற்சிகள் எடுத்திருக்கலாமே..அழைக்கப்பட்டோரிடம் கடவுள் எதிர்பார்க்கும் ஒரு விஷயம் இருக்கிறது. அதுதான் ஆத்மதாகம்.. அதுதான் சிறந்தது அதையே ஆண்டவர் எதிர்பாப்பது..

14. இப்போது கூட திருவிவிலியத்தில் உள்ள தப்பரைகள் திருத்தப்படவில்லையென்றால்… என்று சொல்வதை விட இப்போது நேரம் கிடைக்கிறது. அதைத் திருக்கொள்வோமே..

15. “ பூசை பலிபோல் பாக்கிய செல்வம் புவியில் இல்லையே “ என்று பாடிவிட்டு திருப்பலியில் என்னவெல்லாம் விளையாடினோம்..

16. திவ்ய நற்கருணை நாதரை வாங்கிய பின்பு அவருக்கு என்ன மரியாதை கொடுத்தோம்.. மக்களை ஜெபிக்க விட்டோமா? பராக்கு பார்க்க வைத்தோமா?

17. பொன்னாடை போர்த்துதல், கை தட்டல்கள், அவருக்கு பாராட்டு இவருக்கு பாராட்டு, பரிசுபோட்டிக்கு பரிசு வழங்குதல் என்று எது எது செய்யக்கூடாதோ எல்லாம் செய்தோம்.. அட்லீஸ்ட் நன்றி வழிபாடை முடித்துவிட்டாவது செய்தோமா? அது திருச்சபையின் ஒழுங்கு சட்டம்.. ஆனால் கீழ்படிய மாட்டோம்…தலை கீழாக மாற்றினார் அல்லவா.. இன்னும் திருத்தவில்லையென்றால் மேலும் மாற்றுவார்.

18. எப்போது பூசையின் முக்கியத்துவம் குறைந்ததோ அன்றே பிரச்சனை ஆரம்பமாகிவிட்டது.. கல்வாரித் திருப்பலியைக் கொண்டாட்ட திருப்பலியாக மாற்றியது பிதாவாகிய சர்வேசுரனை ரொம்பவே மகிழ்ச்சிப்படுத்தியிருக்கும்..

19. பூசை நிறைவேற்றும் போது கூட “நான் பாவி நான் பாவி” என்றுதான் அன்று புனிதர்கள் பூசை வைத்தார்கள் சர்வேசுவரனை மட்டுமே முன்னிலைப்படுத்தினார்கள், மகிமைப்படுத்தினார் எந்த தனிப்பட்ட மனிதரையும் அல்ல.

20. நற்கருணை ஆண்டவரை படாதபாடு படுத்திவிட்டோம்.. கரங்களில் கொடுப்பது, இடக்கையில் கொடுப்பது யார் வேண்டுமானாலும் கொடுப்பது, அவர்கள் முக்காடு போட்டால் என்ன? போடாவிட்டால் என்ன? இதுல பொது நிலையினரை வேறு சேர்த்தாச்சு..

21. நற்கருணை கொடுத்து முடிக்க கூட ஒரு அரைமணி நேரம் ஆனால்தான் என்ன? அதுவரை அவர்கள் மவுனமாக ஜெபித்துக் கொண்டாவது இருப்பார்கள்..

22. நாங்கள் நற்கருணை ஆண்டவரைக் கண்டிப்பாக கரங்களில்தான் கொடுப்போம் என்றீர்கள் பூசையே நின்று போனது..

23. மூவொரு கடவுளுக்கு கொடுக்க வேண்டிய ஆராதனையும், வணக்கமும், பக்தியும், மரியாதையும் உரிய விதத்தில் கொடுக்கப்படவில்லையென்றால்… விளைவு விபரீதம்தான். சும்மா இருக்கும் இந்த நேரத்திலாவது அதற்காக எதாவது செய்யலாமே..

24. மாதாவை இறக்கியது மிகப்பெரிய தவறு.. இப்போது வெறும் வார்த்தைகளில் மட்டுமே கத்தோலிக்க குருக்கள் பலரிடம் மாதா இருக்கிறார்கள்.. விவிலியத்தில் இறக்கியது போதாது என்று மகா பரிசுத்த கன்னி மரியாளை வெறும் “ மரியா” என்று ஆக்கிவிட்டோம் அல்லவா..   நம் ஆண்டவர் ரொம்பவே சந்தோசப்படுவார்..

25. நம் மக்களுக்கும் மாதா காட்சிகளை விளக்குகிறோமா.. முக்கியமான பாத்திமா காட்சி, லூர்து காட்சி பற்றி எடுத்துச் சொல்கிறோமா?

26. கத்தோலிக்க குடும்பங்களை குடும்ப ஜெபமாலை சொல்ல தூண்டுகிறோமா?

27. மாதா தன் காட்சிகளில் முக்கியமாக சொல்லும் “ ஜெபம், தவம், பரிகாரம் மற்றும் ஜெபமாலையின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைக்கிறோமா?  அதான் ‘ பரிகாரம் ‘ என்ற வார்த்தையே காணாமல் செய்துவிட்டோமே… “ ஜெபம்; தவம்; தானம் “ என்று மாற்றியாச்சே… எல்லாத்தையும் மாற்றுவதில் நாங்கள் கில்லாடிகளாச்சே..

28. எத்தனை இடங்களில் தேவ மாதா இரத்தக்கண்ணீர் வடித்தார்கள் ? அது அவர்களுக்காகவா?

29. புனிதர்கள் வாழ்க்கை வரலாறுகள் பற்றி அடிக்கடி பிரசங்கத்தில் குறிப்பிட வேண்டும். அப்போதுதான் இளைஞர்களுக்கு கத்தோலிக்க கிறிஸ்தவத்தில் ஒரு ஆர்வம் வரும்..

30. எல்லாம் பிரிவினை சபையினரைக் காப்பியடித்து காப்பியடித்து கத்தோலிக்கத்தின் அடையாளத்தை தொலைத்து நாமும் ஒரு பிரிவினை சபையினராய் மாறி விட்டோமோ என்று எண்ணத்தோன்றும் அளவுக்கு எல்லைகளையெல்லாம் தாண்டிபோயாகிவிட்டது.

31. கத்தோலிக்க தேவாலங்களில் சிலுவை அடையாளத்தில் இருந்த கொடி மரங்கள் ஏன் ஏன் இந்து கோவில் கொடி மரங்களாய் ஆனது.. யார் கேட்டது.. ஏன் செய்தீர்கள்..

32. பல ஆலயங்களில் கத்தோலிக்க குருக்கள் கத்தோலிக்க விசுவாசத்திற்கு எதிரான பல தப்பரைகளை சர்வ சாதரணமாக பிரசங்கம் தருகிறார்கள் ( முக்கியமாக மோட்சம், நரகம், உத்தரிக்கும் ஸ்தலம் குறித்து தப்பான போதனைகள்.

33. பல இடங்களில் அவர்கள் சொந்த கருத்தையெல்லாம் கத்தோலிக்க போதனைகளாக சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். உங்கள் கருத்து என்னவாகவும் வைத்துக்கொள்ளுங்கள். அதை ஏன் மக்களுக்கு போதிக்கிறீர்கள்.

34. பிரசங்கம் கவர்ச்சிகரமாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை. தப்பரைகள் இருக்கக்கூடாது..

35. கத்தோலிக்க ஒழுங்குகள் சிதைந்து வருகிறது… நவீனங்கள் கொஞ்சமாக விசுவாசத்தையையும், கத்தோலிக்கர்களின் கடமைகளையும் இல்லாமல் செய்துகொண்டு இருக்கிறது. ஏன் கத்தோலிக்கர்கள் எப்படி வாழ வேண்டும் என்பதையே தலைகீழாக மாற்றிப் போட்டுவிட்டது..

36. நிறைய ஆலயங்களில் திருப்பலிக்கு முன்பு சொல்லும் ஜெபமாலையும் நின்று வருகிறது.. அதை ஏதோ திருப்பலிக்கு முன் நேரம் கடத்துவதற்காக பயன்படுத்தப்படுகிறது. பங்குத்தந்தையினரின் தலை தெறிந்துவிட்டால் ஜெபமாலையை அப்படியே விட்டுவிட்டு அதாவது மாதாவை அப்படியே விட்டுவிட்டு வருகைப்பாடலுக்கு சென்று விடுகிறார்கள்.

37. திருப்பலியின் புனிதத்துவமும், நற்கருணை ஆண்டவரின் புனிதத்துவமும், மாதாவின் பக்தியும், ஜெபமாலை பக்தியும் காக்கப்படாவிட்டால்… இதைவிட பெரிய அழிவுகள் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை…

எல்லாவற்றையும் திருத்த கடவுள் ஒரு நல்ல வாய்ப்பு தந்துள்ளார்..   நேரமும் தந்துள்ளார். அழகாக சீரமைக்கலாம்.  நம் கத்தோலிக்க பாரம்பரியத்தை நம் அடையாளத்தைப் புதுப்பிக்கலாம்..

இதையும் இவர்களுக்கு வேறு வேலை இல்லை. குறை கூறுவதுதான் இவர்கள் வேலை.. எல்லாவற்றிக்கும் ஆயிரம் காரணங்களை சொல்லுவார்கள் என்று இப்போதும் எல்லாவற்றையும் ஒதுக்கி நவீனம் நவீனம் என்று தொடர்ந்தால்.. பொறுப்பு நீங்கள்தான் நீங்கள் மட்டும்தான்.. 

உண்மையான தேவ அழைத்தலால் ஆன்ம தாகத்தோடு பணிபுரிந்து வரும் கத்தோலிக்க குருக்கள், பங்குத்தந்தையர்கள், ஆயர்கள் மேலே உள்ளவற்றைப் படித்துவிட்டு  தங்கள் நெஞ்சில் கை வைத்து சொல்லுங்கள் மேலே குறிப்பிட்டது உண்மையா? இல்லையா?

அழைக்கப்பட்ட ஒரே நோக்கம் கலார்ச்சார சேவையோ.. மொழிச்சேவையோ அல்ல … ஆன்மீகச் சேவை மட்டும்தான்..

“சில நாகரீக பாணிகள் புகுத்தப்படும். அவை நமதாண்டவரை மிகவும் நோகச்செய்யும். சர்வேசுரனுக்கு ஊழியம் செய்பவர்கள் இப்பாணிகளைப் பின்பற்றக் கூடாது. திருச்சபையில் நாகரீகப் பாணிகள் கிடையாது. நமதாண்டவர் மாற்றமடைவதில்லை “ – புனித ஜெசிந்தா (1918).

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !