நற்கருணைக்குரிய மரியாதை பகுதி-7

கரங்களிலேயே திவ்ய நற்கருணை ஆண்டவரை வாங்கக்கூடாது!

அபிசேகம் செய்யப்பட்ட கரங்களே நற்கருணை ஆண்டவரை தொட வேண்டும்… திவ்ய திருப்பலியின் போது ஒவ்வொரு குருவும் நம் ஆண்டவராகிய இயேசுவாக மாறுகிறார்கள். அதனால் குருக்களுக்கு மட்டுமே ஆண்டவரை கரங்களால் தொட தகுதி உண்டு…

இந்த கரங்களில் நற்கருணை வாங்கும் பழக்கம் எங்கிருந்து வந்தது. பிரிவினை சபையினர்கள் நடத்துவது திருப்பலியே அல்ல. நம் கத்தோலிக்க திருச்சபையில் நடப்பது மட்டுமே திருப்பலி…

ஆண்டவராகிய இயேசு பலியாகி தன்னையே பிதாவுக்கு ஒப்புக்கொடுத்து தானும் அதில் பிரவேசுத்து நம் உள்ளங்களில் கடவுளே உணவாக வருகிறார்.. குருவானவர் ஒரு குழந்தைக்கு தாய் உணவு ஊட்டுவதைப்போல ஆண்டவரை நமக்கு ஊட்டுகிறார்..

அதில் வேறு இடக்கையில் வாங்கினால் என்ன என்று ஒருவர் கேட்கிறார்..

ஏன் தாங்கள் இட்லி, தோசை பிரியானியை இடது கையில் சாப்பிடுங்கள்.. உங்கள் ஊருக்கு ஆயர் வந்தாரென்றால் அவருக்கு காணிக்கைகளையோ, அன்பளிப்பையோ இடது கையால் கொடுங்கள்…திருமணப்பத்திரிக்கை யாரும் கொடுத்தால் இடது கையால் வாங்குங்கள்…அரசாங்க அலுவலகத்துக்கு சென்றாலோ.. அல்லது கலெக்டரிடமோ மனு கொடுக்கும்போது இடது கையால் கொடுங்கள்…

காலைக்கடன்களை முடித்துவிட்டு வலது கையால் கழுவுங்கள்… கேட்கவே அசிங்கமாக இருக்கிறதா ??? இல்லையா???

சமீபத்தில் புனிதையான அன்னை தெரசா , “ கத்தோலிக்கர்கள் ஆண்டவரை கரங்களில் வாங்குவது வருத்தம் அளிக்கிறது “ என்று சொல்லியுள்ளார்..