தேவமாதா யார்? பகுதி-48 : கெட்ட கள்ளனிடம் இல்லாதது நல்ல கள்ளனிடம் இருந்தது அது என்ன?

“ கடவுள் மட்டில் உனக்கு அச்சமே இல்லையா?”

லூக்காஸ் 23 : 40

கெட்ட கள்ளனிடம் இல்லாதது நல்ல கள்ளனிடம் இருந்தது அது என்ன?

இரண்டு பேருமே ஒரே குற்றவாளிகள்.. இருவருமே திருடர்கள்..

இங்கே ஒரே ஒரு விசயத்தில் ஒருவன் இன்னொருவனிடமிருந்து வேறுபடுகிறான்..

அந்த கடைசி நேரத்தில் அதாவது அவனுடைய ஆயுளின் இறுதி நேரத்தில் ஒரு விசயத்தைக் கண்டுபிடிக்கிறான்..

அவன் செய்த முதல்  நற்செயல் இயேசு சுவாமியை உற்று நோக்கியதுதான்..

அந்த சிலுவையில் அத்தகையை கொடிய வேதனைகளுக்கு மத்தியிலும் அவருடைய நடவடிக்கைகளைப் பார்த்து அதனால் அவன் முதலில் ஈர்க்கப்படுகிறான்..

அடுத்து அவரைக் கண்டுபிடிக்கிறான்..

“ ஆகா, இவர் சாதாரன ஆள் அல்ல.. கீழே உள்ளவர்கள் எதற்காக இவரைத் தீர்ப்பிட்டிருக்கிறார்களோ, அவர்தான் இவர்.. இவர் கண்டிப்பாக கடவுளின் மகன்தான். கீழே உள்ளவர்கள் அவரைக் கண்டுபிடிக்கவில்லை நான் கண்டுபிடித்துவிட்டேன் “

அதன் பிறகு அவன் செய்த துரிதமான காரியம் என்னவென்றால்..

“ நான் சாகப்போகிறேன். ஆனால் எனக்கு உடனடியாக ஒரு கருணை தேவை. என் பாவத்திற்கு முதலில் மன்னிப்பு தேவை. அதன் பிறகு பரிகாரம் தேவை. நான் இப்போது என்ன செய்ய வேண்டும். எனக்கு இப்போது கடவுளிடத்தில் கருணை கிடைக்க அவர் இரக்கம் கிடைக்க நான் என்ன செய்ய வேண்டும் “

அப்போதுதான் அவன் தேவ மாதாவை உற்று நோக்குகிறான். அவருடைய உதவியை நாடுகிறான். ஒரு ஏக்கத்தோடு இந்த கல்வாரி மலையில் தனக்கு கிடைத்த புதிய தாயை நோக்குகிறான்..

“ அம்மா! எனக்கென்று இங்கு யாரும் இல்லை. நீர் மட்டும்தான் இருக்கிறீர். எனக்கு உதவி வேண்டும். உங்கள் உதவி வேண்டும்.. என்னுடைய தாயாக இருந்து அதை செய்வீர்களா அம்மா”

என்று கண்களால் கேட்கிறான்..

அந்த தாய்தான் யாருக்கும் இரக்கம் காட்ட மறுப்பதில்லையே.. அவன் எப்பேர்ப்பட்ட பாவியாக இருந்தாலும் அவன் செய்த பாவத்தைப் பார்க்காமல் அவனுடைய ஆன்மாவைப் பார்க்கும் தாயாயிற்றே..

அவனை நிற்கதியாக விட்டுவிடுவார்களா என்ன?

“ இதற்காகத்தானே மகனே !  நான் காத்துக்கொண்டிருக்கிறேன்.. உனக்காக/உங்களுக்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறேன். நீயும் என் செல்ல மகன்தான், உன்னை நிற்கதியாக நான் விட மாட்டேன். அம்மா ! நான் இருக்கிறேன் மகனே ! கவலைப்படாதே ! “

என்று கூறி இப்போது கல்வாரியில் தனக்கு இரண்டாவதாக கிடைத்த மகனுக்காக தன் தலைமகனின் இரக்கத்தைக் கேட்டு ஏக்கத்தோடு தன் தலைமகனை அத்தனை வியாகுலங்கள் உள்ள நெஞ்சத்தோடு பார்க்கிறார்..

“ அம்மா ! நீங்கள் என்னிடம் கேட்கவே தேவையில்லை. ஒரு பார்வை பார்த்தாலே போதும். அந்த பார்வையில் என்ன இருக்கிறது ? எதற்காக அந்த பார்வை என்று நான் கண்டுபிடித்துவிடுவேன்”

“ உங்களுக்கு இந்த மண்ணுலகிலும், விண்ணுலகிலும், உத்தரிக்கும் ஸ்தலத்திலும் எதுவுமே மறுக்கப்படுவதில்லையே.. Granted… Granted… Always.. Granted.. எடுத்துக்கோங்கம்மா”

 “ எனக்குத் தெரியாதாம்மா உங்களைப்பற்றி ! இதைத்தானே அன்று கானாவூரிலும் செய்து மனுக்குலம் நிர்க்கதியாய் இருக்கும் சூழ்நிலை வரும்போதெல்லாம் என்ன செய்ய வேண்டும் என்று அன்று மாதிரி காட்டினீர்கள்.. எடுத்துக்கோங்கம்மா. Granted ”

அவ்வளவுதான் இங்கே ஒருவன் பிழைத்துக் கொண்டான்.. 

“ பாவிகளுக்கு அடைக்கலமே ! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் !”

அவனுக்கு இரக்கம் கிடைத்துவிட்டது.. முழுவதும் மனமாற்றம் அடைந்துவிட்டான்.. இயேசுவைக் கடவுளாக ஏற்றுக்கொண்டான் அவன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன..

“ இயேசுவே அரசுரிமையோடு வரும்போது, என்னை நினைவு கூறும் “

லூக்காஸ் 23 : 42

“ இன்றே நீ என்னோடு வான் வீட்டில் இருப்பாய் என்று உறுதியாக உனக்குச் சொல்கிறேன்”

லூக்காஸ் 23 : 43

ஏனப்பா !  அரசுரிமை வரும் நாள் வரை நீ காத்திருக்க வேண்டும். இன்றே என்னோடு வந்துவிடு .. 

எவ்வளவு பெரிய கொடை ஆசீர்வாதாம் அந்த நல்ல கள்ளனுக்கு..

வாழ்க்கையில் கடைசி நிமிடங்களில் தப்பித்து விட்டான்..

நல்ல கள்ளன் நமக்கு சிறந்த ஒரு பாடம்..

கெட்ட கள்ளன் செய்யத் தவறியது..

1. ஆண்டவர் இயேசு உற்று நோக்கவில்லை..

2. அதனால் ஆண்டவர் யார் என்று கண்டுபிடிக்கவில்லை.

3. அடுத்து மாதாவை உற்று நோக்கவில்லை..

4. மாதாவைத் தாயாக ஏற்றுக்கொள்ளவில்லை..

5. மாதாவின் உதவியைத் தேடவில்லை..

6. தான் செய்த பாவத்தை உணரவில்லை.

7. முக்கியமாக மனம் திரும்ப வேண்டும் என்று நினைக்கவில்லை.

8. கடவுளை நினைக்கவில்லை.

9. கடவுள் மேல் நம்பிக்கைகொள்ளவில்லை.

10. கடைசிவரை தன் பாவத்தில் உறுதியாய் நின்றான்..

அதனால் கடைசியில் கிடைத்த கடைசி அருமையான வாய்ப்பையும் இழந்தான்.. அதனால் அவன் மோட்சத்தை இழந்தான்..

 நல்ல கள்ளன்- கெட்ட கள்ளன், புனித இராயப்பர்- யூதாஸ் இந்த நால்வருக்குள்ளும் ஒரு ஒற்றுமை இருக்கிறது.. ஒரு ஒப்புமை இருக்கிறது.. கடவுளுக்கு சித்தமானால் அடுத்த பகுதியில்..

“ ஜெபமாலை இராக்கினியாய் வந்து ஜெயம் தரும் மாமரி வாழியவே.. ஜெபிப்போம் ஜெபிப்போம்.. ஜெபமாலை..

பரிசுத்த ஆவியானவர் போற்றி !

நம் நேசப்பிதா வாழ்த்தப்பெறுவாராக !

இயேசுவுக்கே புகழ் !   மரியாயே வாழ்க !