தேவமாதா யார்? பகுதி-45 : இயேசு சுவாமி மாதாவிற்கு கொடுத்த இரண்டாவது வேலை!

“ அம்மா ! இதோ உம் மகன் “ – அருளப்பர் 19 : 26

மாதாவுக்கு கடவுள்  முழுமையான அருளையும், நிறைவான ஆசீரையும், உன்னதமான மகிமையையும், அதிகமான வல்லமையையும், நிறைய விதிவிலக்குகளையும் கொடுத்திருக்கிறார் என்று பார்த்தோம்..

அதுபோல மாதாவின் முதல் வெற்றிக்குப்பின் கடவுள் நிறைய பரிசுகளை மாதாவுக்கு வாரி வழங்கினார். இங்கே ஒன்று நாம் நினைவில் கொள்ள வேண்டும்.. முதல் வெற்றி என்றால் இரண்டாவது ஒரு வெற்றி இருக்கிறதுதானே, அதை நாம் பின்னால் பார்ப்போம்.. 

இப்படி மாதாவுக்கு கடவுள் கொடுத்த அத்தனை பரிசுகளும் விலை மதிப்பில்லாத, ஈடு இனை இல்லாதாத மகிமையும் மகோன்னதுமான ஒப்பற்ற பரிசுகள். ஆனால் அதில் ஒரே ஒரு பரிசுதான் ரொம்ப சுமாரான பரிசு. அது எது?

வேறு யாரு? நாமதான்…

நாமும் நல்லவர்களாக, பரிசுத்தர்களாக, கடவுளின் பிள்ளைகளாக வாழ்ந்தால் நாமும் ஒப்பற்ற விலைமிதிப்பில்லாத பரிசுகள்தான் என்பதில் சந்தேகம் இல்லை. ஏனென்றால் கடவுளின் சாயலும் பாவனையுமான ஆன்மா நம்மிடம் இருக்கிறது. அதனால் இந்த பரிசும் உயர்வான பரிசுதான்.

நாம் அதை சரியாக வைக்காதிருப்பதால் அந்த பரிசு சுமார் அல்லது ரொம்பவும் சுமார் என்ற இடத்திற்கு தள்ளப்படுகிறது. ஆனால் மனஸ்தாபம், பாவசங்கீர்த்தனம், என்னும் சோப்புகளால் அதை கழுவி அதன் பின் அதற்குள் அழுக்கு வராமல் பார்த்து ஜெப தவ பரிகார வாழ்வில் இனைந்து பரிசுத்த வாழ்க்கை வாழ்ந்தால் மாதாவுக்கு நம் பரிசுதான் பெரிசு மற்றவையெல்லாம் சிரிசு.

கடவுள் மாதாவுக்கு கொடுத்த அத்தனை விலை உயர்ந்த பரிசுக்கள் கொடுக்காத சந்தோசத்தையும், மகிழ்ச்சியையும் கொடுப்பது ரொம்ப சுமாரான பரிசான நாம்தான். 

ஆனால் அதை நம் மனமாற்றத்தின் வழியாகத்தான் நாம் கொடுக்க முடியும்..

ஆக அந்த ஒப்பற்ற பரிசுகள் கொடுக்காத சந்தோசத்தை நம்மால் கொடுக்க முடியும்.. என்பது நமக்கு சந்தோசம்தானே.. பெருமைதானே..

அதே நேரம் நாம் இப்போது அந்த சந்தோசத்தை தேவ மாதாவுக்கு கொடுத்துக்கொண்டிருக்கிறோமா?

பரிசின் அடிப்படையில் இங்கே சுமார் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருந்தாலும் நாம் அதற்கும் கீழே இருக்கிறோம் என்பதே உண்மை.

இப்போது நம் இயேசு சுவாமி மாதாவிற்கு கொடுத்த இரண்டாவது வேலைக்கு வருவோம்..

ஏன் ஆண்டவர் சிங்கக்குட்டியான தன்னை பெற்றெடுத்த தன் திருத்தாய்க்கு கழுதைக்குட்டிகளான நம்மை பிள்ளைகளாக கொடுக்கவேண்டும்..?

ஆண்டவர் மனதில் இப்படி நினைத்துதான் கொடுத்திருப்பார்..

“ அம்மா ! இந்த 770 கோடி (அதற்கும் மேலும் இருக்கலாம்) பிள்ளைகளுக்கும் உம்மை நான் தாயாக நியமிக்கிறேன் என்றால் நீங்கள் கண்டிப்பாக அவர்களை மனமாற்றி மனஸ்தாபப்பட வைத்து என்னுடைய சாயலையும், பாவனையையும் அவர்களுக்கு மீண்டும் கொண்டு வந்து என்னைப் போல் ( இயேசுவைப்போல்) அவர்களை மாற்றி விடுவீர்கள் என்ற நம்பிக்கை என்னிடம் இருக்கிறது.”

அதாவது கழுதைக்குட்டிகளாகவும், பன்றிக் குட்டிகளாகவும் ( இதில் நான் என்னை நினைத்துக் கொள்கிறேன்) இருக்கும் நம்மை நம் தேவ மாதா கண்டிப்பாக சிங்கக்குட்டிகளாக மாற்றி விடுவார் என்ற நம்பிக்கை இயேசு சுவாமியிடம் இருந்தது..

அதை எது செய்யும் ? எது சாதிக்கும்..

மாதாவின் தாய்மையே.. அதை உணர்ந்தவராய் இயேசு சுவாமி..

“ அதனால்தால் புதிய ஏவாளாக உயிர் வாழ்வோர் எல்லோருக்கும் தாயாக மனுக்குலத்தில் தாயாக உங்களை நான் நியமிக்கிறேன் “

என்கிறார்..

இயேசு சுவாமியின் நம்பிக்கையை நாம் காப்பாற்றுகிறோமா?

இப்போது கூட இந்த உலகில் உள்ள 770 கோடி மக்களும் மாதாவை தங்கள் தாயாக ஏற்றுக்கொண்டால்  கண்டிப்பாக அதில் ஒருவர் கூட நரகம் போக மாட்டார்கள் என்று பாவியான நான் இரத்தத்தில் கையெழுத்திடவும் தயார்.

மாதாவின் தாய்மை எதை சாதிக்கும்? 

கண்டிப்பாக நம்மை ஆண்டவர் இயேசுவைப் போல் சிங்கக்குட்டிகளாக மாற்றும்..

மாதாவுக்கு இயேசு சுவாமி அந்தப் பொறுப்பை ஏன் சிலுவையில் வைத்து கொடுத்தார்..?

மாதாவின் இன்னொரு வெற்றி என்ன?

மாதாவுக்கு இயேசு சுவாமி கொடுத்த புதிய பொறுப்பை எப்போதிருந்து செய்ய ஆரம்பித்தார்?

எந்த முதல் பன்றிக்குட்டி.. சிங்கக்குட்டி ஆனது?

இந்த சிந்தனைகளோடு கடவுளுக்கு சித்தமானல் அடுத்த பகுதியில்..

“ ஜெபமாலை இராக்கினியாய் வந்து ஜெயம் தரும் மாமரி வாழியவே.. ஜெபிப்போம் ஜெபிப்போம்.. ஜெபமாலை..

பரிசுத்த ஆவியானவர் போற்றி !

நம் நேசப்பிதா வாழ்த்தப்பெறுவாராக !

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !