அறுவடையின் ஆண்டவர்…
“ அறுவடையோ மிகுதி; வேலையாட்களோ குறைவு. ஆதலால் , தம் அறுவடைக்கு வேலையாட்களை அனுப்பும்படி அறுவடையின் ஆண்டவரை மன்றாடுங்கள் “ என்றார்.
மத்தேயு 9 : 37-38
“ நீங்கள் போய் எல்லா இனத்தாரையும் சீடராக்குங்கள் “
மத்தேயு 28 : 19
“ உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியினை அறிவியுங்கள் “
மாற்கு 16 :15
“ பாவ மன்னிப்படைய மனந்திரும்ப வேண்டுமென்று யெருசலேமில் தொடங்கி, புறவினத்தார் அனைவருக்கும் அவர் பெயரால் (இயேசுவின்) அறிவிக்கப்படும் “
லூக்காஸ் 24 : 47
இப்போது எல்லா வேலைக்கும் ஆட்கள் இருக்கிறார்கள்.. ஆன்லைனில் ஆர்டர் செய்தால் பொருட்கள் வீட்டிற்கு வந்து விடுகிறது.. முன்பெல்லாம் அறிதாக பார்க்கப்பட்ட பொருட்கள் கூட எளிதாக கிடைக்கின்றன..
ஆபீஸில் வேலை.. ஆன்லைனில் வேலை.. சொந்த தொழில்.. என்று மக்கள் பிஸியாக பரப்பரப்பாக இருக்கிறார்கள்..
எல்லா வேலைக்கும் ஆட்கள் கிடைக்கிறார்கள்… ஆனால் ஒரே ஒரு பணியை செய்வதற்கும் மட்டும் ஆட்கள் கிடைப்படிதில்லை.. தட்டுப்பாடு.. Shortfall..
அது எந்த வேலை.. கடவுள் வேலை.. கடவுள் பணி.. கடவுளோடு பணி.. அதுதான் ஆன்மீகப்பணி..
நிறைய பேர் நினைக்கிறார்கள்.. ஏன் உலகமே நினைக்கிறது..
ஆன்மீகப்பணியை ஒரு தாழ்வான பணி என்று..
இப்போது இந்த உலகத்தில் இருக்கக்கூடிய மிகப்பெரிய பணக்காரர்கள்..
மிகப்பெரிய கம்பேனிகளை தலைமையிடத்திலிருந்து நிர்வகிப்பவர்கள்..
இந்த உலகில் மிகப்பெரிய வல்லரசுகளின் அதிபர்களாக, தலைவர்களாக, பிரதமர்களாக இருப்பவர்கள்..
மேலும் புகழின் உச்சத்திலும், பணத்தின் உச்சத்திலும், சொத்து மதிப்புகளின் உச்சத்தில் இருப்பவர்கள்..
ஒரு குருவானவருக்கு முன் ஒன்றுமே இல்லாதவர்களாகிவிடுவார்கள்..
குருத்துவம் என்பது உலகத்தின் கண்களால் பார்க்கப்படும் எந்த வித உயரிய செல்வத்தையும், அந்தஸ்தையையும் விட மிக மிக உயர்வானது.. ஒப்புயர்வற்றது, விலை மதிப்பில்லாத பொக்கிஷ செல்வம்..
அந்த மாபெரும் உன்னத பணியை ஒருவர் தேர்ந்தெடுத்து அதற்காக தன் வாழ்வை அர்ப்பணம் செய்கிறார் என்றால் அது மிக மிக அசாதாரன விசயம்..
தேவ அழைத்தல்கள் உலகத்தின் எதனோடும் ஒப்பிட முடியாதது..
குருத்துவத்தையும், குருவானவர்களைப்பற்றியும் நிறைய பேச வேண்டும்..
சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால்..
ஒவ்வொரு குருவும் திருப்பலியின்போதும், பாவ சங்கீர்த்தனம் கேட்கும்போதும் இயேசுவாக உருமாற்றம் அடைகிறார்கள்..
ஒவ்வொரு திவ்ய பலி பூசையின்போது அவர்கள் இயேசு சுவாமியாக உருமாற்றம் அடைவதால்தான் நடுப்பூசையின் போது,
“ இது உங்களுக்காக கையளிக்கப்படும் என் உடல் “
“ இது உங்களுக்காகவும், பலருக்காகவும் சிந்தப்படும் என் இரத்தம் “
என்று சொல்கிறார்கள்..
பாவசங்கீர்த்தனத்தின் போது..
“ நான் உங்கள் பாவங்களை மன்னிக்கிறேன்.. சமாதானமாய் போ “
என்கிறார்கள்..
குருக்கள் ஆண்டவரை இமிடேட் செய்ய வில்லை.. ஆண்டவர் இயேசுவாகவே மாறிப்போய்விடுகிறார்கள்..
இயேசுவைக் கொண்டு வருகிறார்கள்.. இயேசுவாகவும் மாறுகிறார்கள்.. இயேசுவை பிதாவுக்கு ஒப்புக்கொடுக்கிறார்கள்..
இயேசு சுவாமியே பலி பீடமாகவும், பலியாகவும், அந்த பலியை பிதாவுக்கு ஒப்புக்கொடுப்பவராகவும் இருப்பதால் பலி பீடத்தை தவிர மற்ற இரண்டு பொறுப்புக்களை செய்யும் போது ஒவ்வொரு குருவானவரும் இயேசு சுவாமியாக மாறுகிறார்கள்..
இத்தகைய பாக்கியம் எந்த உலகப்பெரிய பணக்காரர்களுக்கோ.. வல்லரசுகளின் அதிபர்களுக்கோ அல்லது ஒரு மிகப்பெரிய கம்பேனியை நிர்வகிப்பவர்களுக்கோ கிடைப்பதில்லை..
குருவானவருக்கு மட்டுமே உள்ள சொத்து.. யாரும் அவர்களிடமிருந்து அதை பறிக்க முடியாது.
குருத்துவத்திற்கு அடுத்தபடியான விலையேறப்பெற்ற ஒப்பிட முடியாத உன்னத பொக்கிஷம், செல்வம், பாக்கியம் அருட்கன்னியர் அழைத்தல்கள்..
இந்த இரண்டு உன்னதமான தேவ அழைத்தல்களுக்கு முன்னால் உலகம் மதிப்பிழந்து ஒன்றுமில்லாமல் ஒரு குப்பைபோல் காட்சியளிக்கிறது..
இந்த இரு தேவ அழைத்தல்களிலும் அவர்கள் தங்கள் விலையேறப் பெற்ற செல்வமான கற்பை கடவுளுக்கு காணிக்கையாக்குவதால் அது உலகையும், அதில் உள்ளவைகளையும் விட ஒப்பிட முடியாத உயர்வானதாகிவிடுகிறது..
இந்த இரகசியம் தெரியாததால்தான் இந்தக்கால இளைஞர்களும், இளம்பெண்களும் உலகத்தை அதிகம் நாடுபவர்களாக மாறிக்கொண்டிருக்கிறார்கள்..
மேலும் உலகமும், அதில் இருப்பவைகளும் யாருக்கோ சொந்தமாக இருப்பதுபோல் தோன்றினாலும் உண்மையில் அது அவர்களுக்கு சொந்தமானது அல்ல..
அதற்கும் அதிபர்.. அதிபதி..அரசர்.. கடவுளே..
ஆக கடவுள் பணியை செய்வதுதான் இந்த உலகத்தின்.. உலகத்தை விட மிக உயர்வான உன்னத பணியாகிறது..
அதற்கு அடிப்படையாக அமைவது தேவ அழைத்தல்களே..
அதே போல் ஒவ்வொரு குருவானவருக்கும், கன்னியருக்கும் தலையாய பணி ஆன்மீகப்பணி மட்டுமே..
கடவுள் முன்னிலையில் ஒவ்வொரு ஆன்மாவும் விலையேறப்பெற்ற பொக்கிஷமாக இருப்பதால்.. ஆன்மீகப்பணியே தலையாய, தலைமைப் பணியாக அமைகிறது..
பாவத்தில் இருக்கும் ஆன்மாக்களை மனம் திருப்புவது, மக்களை நல்ல ஆன்மீக பாதையில் அழைத்துச் செல்வது, மக்களுக்கு தேவ திரவிய அனுமானங்களை தேவைப்படும்போது தாராளமாக வழங்குவது.. போன்ற இவைகளே அவர்களின் பணியாகவும், பணிகளின் சிகரமாகவும் அவர்களுக்கு அமைகிறது..
ஆன்மாக்கள் மனம் திருப்பி, அவர்களை இயேசு கிறிஸ்துவுக்குள் கொண்டு வருவதே .. அதற்காக உழைப்பதே ஆன்மீகப் பணி.. நற்செய்திப்பணி..
அதுவே விலையேறப்பெற்ற பணி..
அறுவடையில் ஏற்கனவே இருக்கும் வேலையாட்களின் ஆன்ம- சரீர நன்மைகளுக்காகவும், அறுவடைக்கு புதிதாக அதிகமான வேலையாட்களை நம் ஆண்டவர் தரும்படியாகவும் ஜெபிப்போம்..
“உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியினை அறிவியுங்கள் “
மாற்கு 16 :15
அறிவிப்போம்..
பரிசுத்த ஆவியானவர் போற்றி !
சுதனாகவும், வார்த்தையாகவும் இருந்து மனுவுருவான இயேசுவுக்கே புகழ் !
மனுவுருவாக, கடவுளுக்கு தன் சரீரத்தைக் கொடுத்த மா மரியாயே வாழ்க !