தேவமாதா யார்? பகுதி-27 : மாதா நல்ல மரம்!

“ஏனெனில் ஒளிக்குப் பின் இருள் சூழ்கிறது, ஆனால், தீமை ஒரு போதும் ஞானத்தை மேற்கொள்ளாது.”

ஞான ஆகமம் 7 : 30

மாதா நல்ல மரம்.. மாதாவை அவமதிப்பவர்களுக்கு ஐயோ கேடு!

அதே மத்தேயு 12-ம் அதிகாரத்தில் இயேசு சுவாமி தன் தாயாரைப் பற்றி மறைமுறைகமாக குறிப்பிடுகிறார்.. அவருக்கு அப்போதே தெரிந்துவிட்டது.. பிற்காலத்தில் இந்த அதிகாரத்தை வைத்து என் தாயை அவமதிக்க ஒரு கூட்டம் வரப்போகிறது என்று.. 

“ மரமும் நல்லது, கனியும் நல்லது என்று சொல்லுங்கள்; அல்லது மரமும் தீயது, கனியும் தீயது என்று சொல்லுங்கள் “

மத்தேயு 12 : 33

ஆண்டருடைய தாராளத்தைப் பாருங்கள்.. “ நீ மரம் கெட்டதுன்னு சொன்னா; கனியும் கெட்டதுன்னு சொல்லு”-னு ஆண்டவர் சொல்கிறார்.. அப்படியும் சொல்ல துணிவீர்களா நீங்கள்? அப்புறம் ஏன் மரத்தின் மீதே கல் எரிகிறீர்கள்..?

இன்னொன்னு பாருங்க.. நல்லவன் என்ன செய்வானாம்..

“ நல்லவன் நல்ல கருவூலத்திலிருந்து நல்லவற்றை எடுக்கிறான் “

மத்தேயு 12 :35

தீயவன் என்ன செய்வானாம்..

“ தீயவனோ  தீய கருவூலத்திலிருந்து தீயவற்றை எடுக்கிறான் “

மத்தேயு 12 : 35.

ஆனால் இவர்கள் மிகவும் வித்தியாசமானவர்கள். பைபிள் என்ற நல்ல கருவூலத்தில் உள்ள நல்லவற்றை எடுத்து அதற்கு தீய விளக்கம் கொடுத்து அவற்றை தீமையாக மாற்றி மற்ற ஆன்மாக்களில் தீமையை.. தீய எண்ணங்களை ஊற்றுவது/விளைவிப்பது என்பதை செய்தால் அவர்களை அது எந்த அளவுக்கு  தீயவர்கள் ஆக்குகிறது என்று பாருங்கள்..

இப்போ ஆண்டவர் சொல்ற வார்த்தைதான் ரொம்ப பயங்கரமானது..

“ மனிதர் பேசும் பயனற்ற சொல் ஒவ்வொன்றுக்கும் தீர்வை நாளில் கணக்குக் கொடுக்க வேண்டும் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்”

மத்தேயு 12 : 36

மனிதர் பேசும் ஒவ்வொரு பயனற்ற வார்த்தைக்குமே கணக்கு கொடுக்கனும்னா நீ கடவுளின் தாயைப் பழித்துப்பேசும் பேசும் வார்த்தைக்கு உனக்கு என்ன கிடைக்கும்.. ?

அவர்கள் கடவுளை மட்டும் பழிக்கவில்லை. கடவுளின் குடும்பத்தையே பழிக்கிறார்கள்..கடவுளின் கார்டியன் மற்றும் வளர்ப்புத்தந்தை புனித சூசையப்பரை பழிக்கிறார்கள்.. மாதாவையும், சூசையப்பரையும் பழிப்பதால் மறைமுகமாக ஆண்டவர் இயேசுவையும் பழிக்கிறார்கள்..

(இதில நம்ம ஆளுங்க ரொம்ப சந்தோசப் படாதாதீங்க.. நாமும் ஒவ்வொரு நாளும் எவ்வளவோ பயனற்ற வார்த்தைகள் பேசிக்கொண்டுதான் இருக்கிறோம் அதற்கு நாமும் கணக்கு கொடுக்கத்தான் வேண்டும்..)

ஆண்டவர் சொன்னவற்றை அப்படியே மாற்றி  நீங்கள் என்ன சொல்றீங்கன்னா?

மரம் ரொம்ப கெட்டது.. ஆனா கனி ரொம்ப நல்லது.. இது பொருந்துமா?

அப்போ ஆண்டவருக்கு தெரியாத பல விசயங்கள் உங்களுக்கு மட்டும் தெரிஞ்சிருக்கு.. அதாவது இயேசு சுவாமியை விட நீங்கள் அறிவாளின்னு சொல்றீங்க… இது லூசிபர் வேலை மாதிரியல்லவா இருக்கு..

ஆண்டவர் ஒன்றுக்கு இரண்டு இடத்துல தெளிவா சொறாரு..

இப்போ லூக்காஸில் என்ன சொல்றார்னு பார்க்கலாம்..

“ கெட்ட கனி தரும் நல்ல மரமும் இல்லை.  நல்ல கனி தரும் கெட்ட மரமும் இல்லை. ஒவ்வொரு மரத்தையும் அறிவது அதனதன் கனியாலே “

லூக்காஸ் 6 : 43

வார்த்தையான சர்வேசுவரன் யார்னு எல்லாருக்கும் தெரியும்.. ஆனா மானிட மகனான இயேசு சுவாமி என்ற கனியை அறிய வேண்டும் என்றால் முதலில் மரத்தை எப்படிப்பட்டது என்று தெரிந்துகொள்.. அதாவது மாதா யார் என்று தெரிந்து கொள்.

இப்பவும் ஆண்டவருக்கு அறிவி கம்மி.. உங்களுக்கு ஜாஸ்தின்னு எடுத்துக்கலாமா?

நான் மூன்று பதிவுகளா திட்டனும்… திட்டனும்னு நினைச்சி கடைசி நேரத்தில மனசு மாறி டெலிட் பண்ணி அனுப்பிட்டேன்.. இப்போ திட்டுவது நானல்ல ஆண்டவர்..

மரத்தைப் பழிப்பவர்களை ஆண்டவர் என்ன சொல்கிறார்னு பார்ப்போம்..

“ விரியன் பாம்புக் குட்டிகளே, நீங்கள் பொல்லதவராயிருக்க எவ்வாறு நல்லவை பேச முடியும்?. ஏனெனில் உள்ளத்தின் நிறைவினின்றே வாய் பேசும்”

மத்தேயு 12 : 34

அதாவது உள்ளத்துல என்ன இருக்கோ அதைத்தான் வாய் பேசுமாம்.. உள்ளத்துல எந்த அளவுக்கு மோசமான எண்ணம் இருந்தா, செருக்கு இருந்தா கடவுளின் தாயையே பழித்துப்பேச ஒருவனால் முடியும்..

அப்படி பேசுறவங்க யாருன்னு ஆண்டவரே சொல்லிவிட்டார்.. பாம்பு குட்டிகள்னு சொன்னா கூட விஷம் கொஞ்சதான் இருக்கும். ஆனா விரியன் பாம்பு குட்டிகள்னு சொன்னதுனால அதிகமான விஷமுள்ள பாம்புக்குட்டிகள்னு ஆண்டவர் சொல்றார்.. அப்ப நீங்க பிசாசு குட்டிகளா? பிசாசு குட்டி போட்டா.. பிசாசுதானே வரும்.. சம்மனசு வராதுல்லா.. அதனால் நீங்க லூசிபர் குட்டின்னு மறைமுகமா சொல்றீங்க..

இன்னும் தாங்கள் செய்றது என்னன்னு தெரியாம செஞ்சாங்கன்னா.. அதற்கும் அவர்கள் மேற்கோள் எடுக்கும் அதே அதிகாரத்திலே அவர்களுக்கு என்ன கதி கிடைக்கும்கிறதையும் அவரே சொல்றார்..

“எனவே, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: எந்தப் பாவமும் தேவதூஷணமும் மனிதருக்கு மன்னிக்கப்படும்.

ஆனால், ஆவியானவரைத் தூஷிப்பது மன்னிக்கப்பெறாது. மனுமகனுக்கு எதிராகப் பேசுகிறவன் எவனும் மன்னிப்புப்பெறுவான். ஆனால், பரிசுத்த ஆவிக்கு எதிராகப் பேசுகிறவன் இம்மையிலும் மறுமையிலும் மன்னிப்புப் பெறான்.”

மத்தேயு 12 : 31-32

அந்த அதிகாரத்தில் ஆண்டவரின் அடுத்த பேச்சு மரத்தைப் பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது..

லூக்காஸிலும் இதையே பார்க்க முடியும்..

"உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: மக்களுக்கு எல்லாம் மன்னிக்கப்படும். பாவங்களும் அவர்கள் சொல்லும் தேவ தூஷணங்களும் மன்னிக்கப்படும்.

ஆனால், பரிசுத்த ஆவியைத் தூஷிப்பவன் எவனும் ஒருபோதும் மன்னிப்புப் பெறான், என்றென்றும் தீராத பாவத்திற்கு ஆளாவான்."

மாற்கு 3 : 28-29

மனுமகனுக்கு எதிரா பேசுறது தப்புதான்.. பாவம்தான்.. ஆனா.. அதைக் கூட நான் மன்னிச்சுருவேன்.. ஆனா பரிசுத்த ஆவியானவருக்கு எதிரா பேசுறவனுக்கு மன்னிப்பே கிடையாது.. அதுவும் இம்மையிலும் கிடையாது.. மறுமையிலும் கிடையாது.. அதாவது செத்ததுக்கு அப்புறமும் மன்னிப்பு கிடையாதுன்னா அவனுக்கு நேரா நரகம்னு அர்த்தம்..

அவர்கள் இருப்பது எப்பேற்பட்ட ஆபத்தில் என்பது அவர்களுக்கே தெரியாது.. பாவம்..

பரிசுத்தஆவியானவர் நிழலிட்டதால்தானே தேவமாதா தாயானர்கள்.. 

பரிசுத்த ஆவி நிழலிட்டார்.. வார்த்தையானவர் மனுவுருவானார்..  அந்தக்கருவரை ஒரு ஆலயம் .. அவர்கள் வயிறு ஒரு ஆலயம்.. நீ அந்த வயிற்றை.. கருவரையை நீ கொச்சைப் படுத்தினால் நீ யாரையெல்லாம் கொச்சைப்படுத்துகிராய்.. யாரைப் பழிக்கிறாய்..

பிதாவின் வாக்குறுதியை கபரியேல் சம்மனசானவர் சொல்கிறார்..

“இதோ! உம் வயிற்றில் கருத்தரித்து ஒரு மகனைப் பெறுவீர். அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர்.”

லூக்காஸ் 1 : 31

மாதாவுக்கு 7 பிள்ளைகள்னா.. பிதாவை நேரடியா நீ பழிக்கிறாய்..

கடவுளுக்கே மாதா தாயான பின்பு.

“என் ஆண்டவருடைய தாய் என்னிடம் வர நான் வாய்ப்புப் பெற்றது எப்படி?”

பரிசுத்த ஆவியானவர் சொன்னபின் நீ அதை மறுத்து.. கடவுளுக்கு தாயான என்ன? அப்புறம் பிள்ளை பெத்துக்குவாங்கன்னு.. சொல்றே..

இயேசு பிறந்த வயித்துல உன்னை மாதிரியும், என்னை மாதிரியும் பிள்ளை பிறக்கும்னு நீ சொன்னா.. இயேசுவும்.. நீயும்.. நானும் ஒன்னா?

ஆப்படின்னா… நீயும் கடவுளும் ஒன்னுன்னு சொல்றே..

திரும்பவும் லூசிபர் வேலையைதான் பார்க்கிறே..

குறுக்கு புத்தியும், துருப்பிடித்த புத்தியும் அடையாளம் காட்டுவது யாரை..

இதுக்கு மேலே திட்ட முடியாது.. விட்டுறுவோம்… இப்பவாவது.. திருந்தி மாதா கால்ல விழுந்தா தப்பிக்கலாம்.. அட்லீஸ்ட் ஆண்டவர் கால்ல விழுந்தாவது தப்பிக்கலாம்.. இல்லன்னா கஷ்ட்டம்தான்..

இதுல மிகப்பெரிய வேதனை… வலி என்னன்னா.. நம்ம ஆளுங்க.. சாத்தான் வேதம் ஒதுனுன்னு.. தெரியாம அவங்கள ஏதோ அறிவாளிங்கன்னு நினைச்சி அவங்க குரலுக்கு செவி கொடுக்கிறாங்களே இது ஜீரணிக்க முடியாத வேதனை.. பிசாசு வாயிலயிருந்து தேவாமிர்தமா வரும் சாக்கடைதான் வரும் இந்த அடிப்படை உண்மை கூட நம்ம ஆளுங்களுக்கு தெரிய மாட்டேங்குது..

“ அவரு.. அப்படி சொன்னாரே… இவரு இப்படி சொல்றாரு”-னு பைபிள புரட்டிக்கிட்டே அலையிறது..

 கத்தோலிக்கர்களான நமக்கு எவ்வளவோ வேலை இருக்கு.. அவங்ககிட்ட பேசுறதுக்கு பதில் அவர்களுக்கும் சேர்த்து ஒரு ஜெபமாலை சொன்னா பாவம் அவங்க தப்பிக்கிறது வழி இருக்கு..

நேரத்தை அவர்களிடம் பேசி வீணாக்காதீர்கள்.. வார்த்தைகள் கடவுளால் கவனிக்கப்படுகிறது..

“ ஜெபமாலை இராக்கினியாய் வந்து ஜெயம் தரும் மாமரி வாழியவே..

ஜெபிப்போம் ஜெபிப்போம்.. ஜெபமாலை..

பரிசுத்த ஆவியானவர் போற்றி !

நம் நேசப்பிதா வாழ்த்தப்பெறுவாராக !

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !