பாத்திமா காட்சிகள் பகுதி- 25

அன்னையின் மூன்றாம் காட்சி

மூன்றாம் காட்சிக்குரிய நாளும் நெருங்கிவிட்டது ! ஜூலை மாதம் 12-ம் நாள். அன்று பிற்பகலில் லூசியா கோவா தா ஈரியாவுக்குத்தான் வரவில்லை என்று மற்ற இருவரிடமும் அறிவித்தாள். லூசியா இப்படிச் சொல்வாள் என்று பிரான்சிஸும், ஜஸிந்தாவும் எதிர்பார்க்கவில்லை. அவர்களுக்கு இது பெரும் அதிர்ச்சியும் வேதனையுமாயிருந்தது. அவர்கள் கண்டது கேட்டது எல்லாம் பசாசின் தந்திரமாக இருக்க முடியும், முடியாது என்பது பற்றி மூவருக்குள்ளும் ஒரு விவாதமே நடைபெற்றது.....

இறுதியில் லூசியா தன் தீர்மானத்தில் உறுதியாக இருந்தாள். மறுநாள் காலையிலும் அவள் தீர்மானம் தளரவில்லை. ஆடுகளை மேய்ச்சலுக்கு அவிழ்க்கும் நேரம் வந்தது. அப்போதுதான் லூசியாவின் மனதில் ஒரு திடீர் மாற்றம் ஏற்பட்டது. ஜஸிந்தாவையும், பிரான்சிஸையும்  உடனே பார்க்க வேண்டும் போலிருந்ததால் அவள் நேரே மார்ட்டோ வீட்டை நோக்கி ஓடினாள். அங்கே ஒரு கட்டிலருகே முழங்காலில் இருந்தபடி ஒரே அழுகையாக அழுதுகொண்டிருந்தார்கள்.

“ நீங்கள் போகவில்லையா?” என்று கேட்டாள் லூசியா,

“ நீ இல்லாமல் அங்கு எங்களால் செல்ல முடியவில்லை “

“ என் எண்ணத்தை மாற்றிவிட்டேன். நான் வருகிறேன் “ என்று லூசியா அறிவித்தாள். லூசியா இப்படி சொல்லவும் மற்ற இருவரும் மகிழ்ச்சியுடன் எழுந்தனர். முந்தைய இரவு முழுவதும் அவர்கள் லூசியாவுக்காக செய்த மன்றாட்டு கேட்கப்படட்டது, மூவரும் துரிதமாக புறப்பட்டனர்.

அல்யுஸ்திரலிலிருந்து கோவா தா ஈரியாவுக்கு இரண்டு மைல் தூரத்தையும் சீக்கிரமே அங்கு வந்து சேரவும், அங்கு முன் கூட்டியே கூடியிருந்த பெருந்திரளான மக்களை அங்கு கண்டனர். 2000 முதல் 3000 வரை கொண்ட பெருங்கூட்டம்!. ஆட்கள் இன்னும் வந்துகொண்டே இருந்தார்கள்....

குழந்தைகள் யாரையும் கவனிக்கவில்லை. அவர்கள் ஜெபமாலை சொல்லுவதில் ஈடுபட்டிருந்தார்கள். அவர்கள் பார்வை கிழக்கு திசை எதிர் நோக்கிய வண்ணம் இருந்த்து. அவர்களருகில் ஒரு முரட்டுப்பெண் வந்து அவர்கள் ஏமாற்றுக்கார்ர்கள் என்று வைததைக் கூட அவர்கள் கவனித்த்தாகத் தெறியவில்லை..

லூசியாவின் முகம் வெளிரிப்போயிருந்தது.

“ உங்கள் தொப்பிகளை அகற்றுங்கள். அம்மா வருவதைக் காண்கிறேன் என்று அவள் கூறுவதை மார்ட்டோ (ஜஸிந்தா, பிரான்சிஸின் தந்தை) கேட்டார். அதோடு ஒரு சிறு மேகம் வந்து. அசின்ஹேரா மரத்தில் தங்குவதையும் கண்டார். திடீரென சூரிய வெளிச்சம் மங்கியது. குளிர்ந்த காற்று வீசி வெப்பத்தை தணித்த்து. ஏதோ ஒரு வண்டின் இரைச்சல் போல் ஒளி கேட்டது. ஆனால் எந்த வார்த்தையையும் கேட்கவில்லை.

இதற்குள் அம்மூன்று குழந்தைகளும் உலகத்தை விட்டுப் பிரிக்கப்பட்டவர்கள் போல் பரவச நிலையை அடைந்தனர். தேவ அன்னையின் காட்சியைக் கண்டனர்.

“ உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டாள் லூசியா.

“ அடுத்த மாதம் 13-ம் நாளில் நீங்கள் இங்கு வர வேண்டும். உலகிற்கு சமாதானத்தைப் பெற்றுக்கொள்ளவும், யுத்தம் முடிவடையவும், தேவதாயின் மகிமைக்காக ஜெபமாலையைத் தினமும் தொடர்ந்து சொல்லி வாருங்கள். ஏனென்றால் தேவதாய் மட்டுமே இவற்றை பெற்றுத்தர முடியும் “ என்றார்கள் தேவ அன்னை.

“ அம்மா, நீங்கள் யார் என எங்களுக்குச் சொல்லுங்கள். நீங்கள் எங்களுக்குக் காணப்படுகிறீர்கள் என்று எல்லோரும் நம்பும்படியாக ஒரு புதுமையைச் செய்யுங்கள் “ என்றாள் லூசியா.

“ இங்கு மாதந்தோறும் தொடர்ந்து வாருங்கள். அக்டோபர் மாதம் நான் யாரென்றும், என்ன விரும்புகிறேன் என்றும் சொல்வேன். எல்லோரும் நம்பும்படி ஒரு புதுமையையும் செய்வேன் “ என்று கூறினார்கள் அன்னை...

தொடரும்....

தொடர்ச்சி மிக மிக முக்கியமான பகுதி...

நன்றி : மாதா அப்போஸ்தலர்கள் சபை, ரோசா மிஸ்திக்கா, 11/519, சகாயமாதாப்பட்டனம், இரண்டாவது தெரு, V.V.D. பள்ளி எதிரில் தூத்துக்குடி-628 002, Ph. 0461-2361989, 9487609983.

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !