அர்ச். சந்தியாகப்பர் வாழ்க்கைப்பாதையில் பகுதி-21

பகைவர்களை முறியடிக்கும் படை மிரட்டி இவர் :

ஸ்பெயின் தேசத்தில் மன்னன் ராமிரோ ஆட்சி செய்த காலத்தில் ஸ்பெயின் தேசத்தை கைப்பற்றி அங்குள்ள கிறிஸ்தவ தேவாலயங்களை கைப்பற்றும் தீமையான எண்ணத்தில் பகைவர் படைஎடுத்தனர். மன்னனும் மக்களும் கலங்கினர். ஏனென்றால் எதிரியின் படை மிகவும் வலிமை வாய்ந்தது. படையும் மிகவும் பெரியது. இவர்கள் படை மிகவும் சிறியது. போருக்கு சென்றால் போரில் தோல்வி உறுதி என்ற சூழல். மன்னன் ராமிரோ கலங்கினான். புனித சந்தியாகப்பரின் ஜெபிக்கின்றான். மக்களும் ஜெபிக்கின்றனர். தூய சந்தியாகப்பர் மன்னன் ராமிரோவின் கனவில் தோன்றி “ பயப்படாதே போரில் உனக்குத்தான் வெற்றி. தைரியமாக போருக்கு போ” என்று உரைத்தார். மன்னனும் வீரர்களை உற்சாகப்படுத்தி சந்தியாகப்பர் நம்மோடு இருக்கிறார் வாருங்கள் போருக்கு செல்வோம் என்று கூறி போருக்கு விரைந்தனர். போர் ஆரம்பமானது..போர் வீரர்கள் சண்டியாகோ !!!! ( SANTIAGO) அதாவது சந்தியாகப்பரே ஏன்ற முழக்கத்துடன் போரிடுகிறார்கள். அந்த நேரத்தில் துன்புற்றோருக்கு ஆறுதலாக தூய சந்தியாகப்பர் வெள்ளைக்குதிரையில் ஒரு கையில் வாளும் ஒரு கையில் கேடயமும் ஏந்தியவராக சிலுவைக்கொடியும் பறக்க வானிலிருந்து வெண் குதிரையில் இறங்குகிறார். அந்த ஸ்பெயின் தேசத்து மக்களுக்காக தானே போர்க்களத்தில் போரிடுகிறார்.பகைவர்களை வெட்டி வீழ்த்துகிறார்.. இடியின் மைந்தன் கோபம் கொண்டால் பூமி தாங்குமா என்ன ?. இதை நேரிடையாக மன்னன் ரேமியோவும், படை வீரர்களும் பார்க்கிறார்கள்.. மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள். புது ரத்தம் பாய்ச்சப்பெற்றவர்களாக வீறு கொண்டு அவர்களும் போரிட்டார்கள். வெள்ளைக்குதிரையில் புனித சந்தியாகப்பரைப் பார்த்த பகைவர்கள் அலறி புறமுதுகிட்டு ஓடினாரகள். மன்னன் ராமிரோவின் படை வெற்றி வாகைசூடுகிறது. மக்கள் ஆர்ப்பரித்து தங்கள் மகிழ்ச்சியயும் நன்றியையும் வெளிப்படுத்தினார்கள். புனித சந்தியாகப்பரைக் கொண்டாடுகிறார்கள். தங்கள் தேசத்தின் பாதுகாவலாக புனித சந்தியாகப்பரை அறிவிக்கின்றான் மன்னன். அன்றிலிருந்து ஸ்பெயின் தேசத்தின் தேசிய பாதுகாவலரானார் தூய சந்தியாகப்பர். இந்தபோர் ஸ்பெயின் தேசத்தில் உள்ள கிளாவியோ என்ற இடத்தில் கி.பி 844- ம் ஆண்டு மே மாதம் 23-ம் தேதி நடக்கிறது. 

தூய சந்தியாகப்பர் தேசிய பாதுகாவலராக இருக்கும் நாடுகள் : கலீசியா, குவாத்தமாலா, நிக்கராகுவா, எசுப்பானியா &etc.,

ஜெபம் : படை மிரட்டி புனித சந்தியாகப்பரே ! நீர் துன்பத்தில் இருக்கும் போது “ துன்புற்றோருக்கு தேற்றரவே ! “ என்று கூவி அழைக்க அன்று தேவ மாதா உமக்கு துணையாக வந்தார்கள்.. இதோ இந்த ஸ்பெயின் தேசத்து மக்கள் தங்கள் துன்பத்தில் உம்மை நோக்கி “ துன்புற்றோருக்கு தேற்றரவே “ என்று கூவி அழைக்க வெள்ளைக் குரையோடு துணைக்கு வந்து அந்த மக்களுக்காக வாளேந்தி போர் புரிந்து வெற்றி தேடித்தந்தீர்.. அதே போல் நாங்கள் எப்போதெல்லாம் எங்கள் துன்பத்தில் உம்மை நோக்கி “ துன்புற்றோருக்கு தேற்றரவே “ என்று அழைக்கும் போதெல்லாம் எங்களுக்காக உடனே ஓடிவந்து ( சில நேரங்களில் வெண் குதிரையில் வந்து) எங்களை காக்கின்றீர்.. பாதுகாக்கின்றீர்..

இப்போது இந்த கொரானோ வைரஸ் அச்சுறுத்தலில் அச்சத்தோடு வாழும் நாங்கள் உம்மை நோக்கி கூவி அழைக்கின்றோம்.. எங்களுக்காக வானில் இருந்து “துன்புற்றோருக்கு தேற்றரவாக” வெள்ளைக் குதிரையில் வாளோடும், சிலுவைக் கொடியோடும் வந்து இந்த கொரானாவை விரட்டி அடித்து ( உலகம் முழுவதும் ) மக்கள் எல்லோரும் நிம்மதியாக, நல்லவர்களாக, இயேசுவின் சாட்சிகளாக, துன்புற்றோரின் தேற்றரவான தேவ மாதாவின் பிள்ளைகளாக வாழ்ந்திட படைமிரட்டி புனித சந்தியாகப்பரே ! எங்களுக்காக வேண்டிகொள்ளும்- ஆமென்..

கடவுளுக்கு சித்தமானால் மீண்டும் வருவேன் படை மிரட்டியின் துணையோடு..

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !