அர்ச். சந்தியாகப்பர் வாழ்க்கைப்பாதையில் பகுதி-22

படை மிரட்டியின் அதிரடி தொடர்கிறது..

நேற்றைய பகுதியைப் போல நடந்த இன்னொரு சம்பவம்..

கி.பி 1483 ( 15 ம் நூற்றாண்டு கிறிஸ்தவ மத்திய ஆப்ரிக்கா கோங்கோ என்ற இடத்தில் ஆட்சி செய்த அஃபோன்சோ- I of Kongo ( Name Mvemba a Nzinga) (கோங்கோவின் இரண்டாவது கிறிஸ்தவ மன்னன்) ஆட்சி செய்த காலத்தில் அவனுடைய சகோதரன் ம்பான்சு கிட்டிமா (Mpanzu a Kitima) கிளர்ச்சி செய்து படைகளை திரட்டி படையெடுத்தான். மன்னன் அஃபோன்சோ தூய சந்தியாகப்பரை நோக்கி மன்றாடிய பின் நம்பிக்கையோடு போருக்கு சென்றான். போரின் போது வானில் தூய சந்தியாகப்பர் வெண்குதிரையின் மீது வாள் ஏந்தியவராக காட்சி அளித்தார். 

அதைப்பார்த்து எதிரிகள் பயந்து ஓடினார்கள். மன்னன் முதலாம் அஃபோன்சோ வெற்றி வாகை சூடினான். இது நிகழ்நதும் ஜூலை 25. அன்று முதல் ஜூலை 25 அரசாங்க விடுமுறையாக அறிவிக்கப்பட்டது. ஒரு ஆண்டுக்கு பிறகு கோங்கோ தேசத்திற்கே மத்திய விடுமுறை ( Central Hoilday) தினமாக அறிவிக்கப்பட்டது. அன்றைய தினம் வரி வசூலிக்கப்பட்டு போர் தளவாட சாமான்கள் வாங்கப்பட்டது. மேலும் அன்றைய தினம் தகுதியான ஆண்கள் படைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அதாவது இராணுவத்திற்கு ஆள் எடுத்தார்கள். பின்னாளில் புதுப்பகுதிக்கு புலம் பெயர்ந்த கோங்கோவை சேர்ந்த அடிமைகள் புனித யாகப்பர் பக்தி முயற்சிகளையும், அவர்  விழாக்களையும் அந்த ( celebration of Saint James Day July’25) எடுத்துச்சென்றார்கள். இன்றும் அவர்கள் சென்ற பகுதிகளில் எல்லாம் புனிதரின் பக்தி முயற்சிகள் உள்ளன. அதில் ஹைட்டி மற்றும் பூயர்டொ ரிக்கோ (Haiti and Puerto Rico) என்ற பகுதிகளும் அடங்கும். இன்னும் பல பகுதிகள் இருக்கிறது.

துன்ப நேர நெருக்கடியில்.. பகைவர்கள் படையெடுக்கும்போது அவரே ஒரு வீரராக வெண்குதிரையில் வந்து தம்மை அழைத்த மன்னர்களுக்காக, மக்களுக்காக வாளேந்தி போர் செய்ததால் புனித சந்தியாகப்பர் ‘படை மிரட்டி’ என்று அழைக்கப்படுகிறார். அதுவே அவருக்கு மிக பொருத்தமான அடை மொழியாக இருக்கிறது. அன்று இயேசு சுவாமி ‘ இடியின் மகன் ‘ என்று அழைத்தார். இன்று அவர் பக்தர்கள் ‘ படை மிரட்டி ‘ என்று அழைக்கிறார்கள்.. அழைக்கிறோம்.. இரண்டு அடைமொழிக்கும் சொந்தக்காரர்தான் துடிப்பான புனித சந்தியாகப்பர்.. அவர் மக்கள், பிள்ளைகள் அவரை ‘ துடிப்பானவர் ‘ என்று அழைக்கக் காரணம் அவர்கள் (எங்கள்) வாழ்க்கையின் அவர் புரிந்த அற்புதமும் அனுபவமுமே..

மேலும் அவருடைய நவ நாள் ஜெபங்கள் எல்லாம் (குறிப்பாக பாரம்பரியமாக) ‘ புனித படைமிரட்டி சந்தியாகப்பரின் நவ நாள் ஜெபம்’ என்றே குறிப்பிடப்படுகிறது..

படைமிரட்டி புனித சந்தியாகப்பரே ! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் !

ஜெபம் : புதுமைகள் புரிந்திடும் படைமிரட்டி புனித சந்தியாகப்பரே ! அன்று உம்மை நம்பிய அந்த மக்களை நோக்கி எதிரிகள் படையெடுத்தார்கள். இன்று எங்களை நோக்கி ஆன்ம எதிரிகள் படையெடுக்கிறார்கள். எதிரிகளை வீழ்த்துவதில் ஜாம்பவானச்சே நீர்.. அன்று போல இன்றும் நீர் வெள்ளைக்குதிரையில் படையெடுத்து வந்து எங்கள் ஆன்ம எதிரிகளை முறியடித்து ஆண்டவர் இயேசுவின் பாதம் எங்களை சேர்த்தரும் அது போல இன்று உலகம் முழுவதும் அச்சுறுத்தலாக இருக்கும் கொரானோ வைரஸை நீர் வெண் குதிரையில் வாளோடும், சாட்டையோடும் வந்து முறியடித்து உலகத்தை அந்த நோயின் பிடியிலிருந்து காப்பாற்றவும் அந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களை சுகமாக்கவும் வேண்டுமென்று படை மிரட்டி புனித சந்தியாகப்பரே உம்மை மன்றாடுகிறோம்.

- ஆமென்

கடவுளுக்கு சித்தமானால் மீண்டும் வருவேன் ஆற்றல் தரும் அருட்துணையோடு..

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !