இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

எந்த ஒரு சாதரண மனிதரும் புனிதர் ஆகலாம் ***


எந்த ஒரு சாதரண மனிதரும் புனிதர் ஆகலாம்.. ஒருத்தல் முயற்சிகள், ஜெப தவ வாழ்வும், தனக்கு வரும் துன்பங்களை பொறுமையோடு சகித்துக்கொண்டு அதை மற்றவர் மனம் மாறிட ஒப்புக்கொடுக்க வேண்டும்.. மிகவும் எளிய அதே வேளை சற்று கடினமான பாதைதான் புனிதர்கள் பாதை..

" என்னை பின்செல்ல விரும்புகிறவன் தன்னையே ஒறுத்து என் சிலுவைவையை தூக்கி கொண்டு என்னை பின் செல்ல வேண்டும்" என்று இயேசு சொல்லிய வார்த்தைகளை அப்படியே தன் வாழ்க்கையாக்கி ஜெயித்தவர்கள்..

ஒரு காலத்தில் தன் இயேசுவுக்காக தன் ரத்தங்களை சிந்தி திருச்சபையை வளர்த்தார்கள்.. காலப்போக்கில் தன் ஜெப தவ வாழ்வால் துன்பங்களை சுமந்து லட்சக்கணக்கான ஆன்மாக்களை மனம் திருப்பினார்கள்.. சிலுவை இல்லாமல் கிறிஸ்த்தவம் இல்லை.. மற்ற சபைகள், போதகர்கள் சிலுவையை மறந்தாலும் சிலுவை இல்லாமல் அதாவது துன்ப துயரங்கள் இல்லாமல் கிறிஸ்தவம் இல்லை.. ஒவ்வொரு ஆணும், பெண்ணும் அழைக்கப்பெற்றவர்கள்.. அவர்களால் முடிந்த அளவு ஆன்மாக்களை இயேசுவுக்காய் பெற்றுத்தர வேண்டும்.. சும்மா பெயரளவில் வாழ்வது கிறிஸ்தவம் இல்லை..நம்மால் முடிந்த அளவு முயற்சி செய்ய வேண்டும்

இன்றைய   நாளில் அனைத்து புனிதர்களையும் நினைவு கூர்ந்து அவர்களுக்கு நன்றி கூறி அவர்களை பின்சென்று இயேசுவை அடைய அவர்கள் துணையை வேண்டுவோம்