துள்ளி வரும் மீன்களே !! சொல்லும் மொழி கேட்பீரோ ***


துள்ளி வரும் மீன்களே !! சொல்லும் மொழி கேட்பீரோ.. உள்ளம் உள்ள மானிடர்க்கு உங்கள் அறிவேதுமில்லை கள்ளமில்லா உங்களுக்கு கர்த்தர் துணையாக வந்தார் கடலிலும் வீடுகட்டி காவலுக்கு வந்து நின்றார்...

உடம்புக்கு கட்டுப்பட்டு உள்ளே ஒரு ஆவி இருப்பது போல் சத்தியத்திற்கு கட்டுப்பட்டு இந்த பூமி இருக்கின்றது.. கர்த்தரே அதன் தலைவர்.. கர்த்தரே அதன் தலைவர்

1. கர்த்தரது ராஜசபை கற்றவர்க்கு தேவ சபை காலமெனும் ஊழியினும் கலங்காத நீதி சபை சின்னச்சிறு மீன்களுக்கும் அன்னல் வந்து ஊட்டுகிறார்.ஆறறிவில் ஓரறிவு அறியாத ஆழமது..

உயிர் படைத்த ஜீவராசிகள் அனைத்திற்கும் அவரே மூலம் உங்களுக்கு புரியும் நான் சொல்வது..

2.. ஆகாயம் பூமியென்னும் அண்டங்களை யார் படைத்தார் சாகாத பெரும் கடலை சமைத்து வைத்த தேவன் எவன் மேகமென மலை பொழியும் மெய்யான சக்தி எது மேலுலகம் கீலுலகம் வணங்க வரும் மேய்ப்பனவன்..

வானம் இடிபட வையம் பொடிபட ஊழிப்புயலென ஆடும் கடலலை பொங்க வேண்டும்..ஞாலக்குமரனின் கோலத்திருமுகம் காணும் மகிழ்வினில் மீன்கள் பலவகை துள்ள வேண்டும் காலம்யாவிலும் தேவன் திருமறை காட்டும் பாதையை நாட்டின் மானிடர் சொல்ல வேண்டும்